கோலியன் முதல் - கோழைதீர்தல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோவன் இடையன் ; அரசன் ; சிவன் ; வசிட்டன் .
கோவாங்கு படிதம் என்னும் மாணிக்க விசேடம் .
கோவிட்டு பசுக் சாணம் .
கோவித்தியர் காண்க : கோவியர் .
கோவிதன் அறிஞன் .
கோவிதாரம் காட்டாத்தி ; குரா .
கோவிந்தம்போடுதல் கோவிந்தா என்று சொல்லிக் கையால் வணங்குதல் .
கோவிந்தர் காண்க : கோவலர் .
கோவிந்தன் திருமால் ; நன்குணர்ந்தோன் .
கோவியர் இடைச்சியர் .
கோவில் கோயில் , ஆலயம் , அரண்மனை ; சிதம்பரம் ; திருவரங்கம் .
கோவில்வீடு வீட்டிலமைந்த குலதெய்வங்களின் கோயில் ; கோயிலுக்குத் தருமமாக விடப்பெற்ற வீடு .
கோவிலங்கு விலங்கு அரசனாகிய சிங்கம் .
கோவிற்குடியான் சங்கூதும் பணிசெய்வோன் .
கோவிற்புறா மாடப்புறா .
கோவிற்றுறையார் கோயில் வேலைக்காரர் .
கோவின்மை காண்க : கோயின்மை .
கோவெனல் இரங்கற்குறிப்பு ; பேரொலி செய்தற்குறிப்பு .
கோவேள் குயவர் .
கோவேறுகழுதை அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை .
கோவை கோக்கை ; வரிசை ; ஒழுங்கு ; கோத்த மாலை , அணிவடம் ; ஏற்பாடு ; அகப்பொருட்கோவை ; கொடிவகை .
கோவைசியர் பசுக்களைக் காத்து வாழும் வணிகவகையார் .
கோழ் வழுவழுப்பு ; செழிப்பு ; கொழுமை .
கோழம்பம் குழப்பம் .
கோழரை வழுவழுப்பான அடிமரம் .
கோழி குக்குடம் , ஒரு பறவை , உறையூர் ; விட்டில் ; கோழியவரை ; பன்றிமோந்தான் கிழங்கு ; இடலை .
கோழிக்கல் குறுஞ்சிலைக்கல் .
கோழிக்காரம் கோழிமலம் கூட்டிச் செய்யப் பெறும் ஒரு மருந்துவகை ; கோழியெரு .
கோழிக்கால் கொடியரசு ; கோழிக்கால் போன்ற அடையாளக் குறிவகை .
கோழிக்குடி அசோகமரம் .
கோழிக்கூடு கோழியை அடைத்துவைக்கும் இடம் .
கோழிக்கொடியோன் கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ; ஐயனார் .
கோழிகூவுநேரம் கோழி கூவும் சமயம் , விடியற்காலம் .
கோழிச்சேவல் ஆண்கோழி .
கோழித்தலைக் கந்தகம் சிவந்த கந்தகம் .
கோழிநெஞ்சு அஞ்சிநடுங்கும் மனம் .
கோழிப்பசளை உமரிக்கீரை .
கோழிப்போகம் விரைவில் விந்து வெளியேறும் புணர்ச்சி .
கோழிமுட்டை சுன்னம் , சுழியம் , கோழியினது முட்டை .
கோழிமுள் கோழிக்காலிலுள்ள கூரிய நகம் .
கோழிமுளையான் ஒரு பூண்டுவகை .
கோழியவரை பெருங் கோழியவரைக் கொடி , அவரைவகை .
கோழியாகக் கூவுதல் கோழிபோலக் கூவுதல் ; மன்றாடுதல் .
கோழியான் முருகக்கடவுள் .
கோழியுள்ளான் ஒரு உள்ளான்குருவிவகை .
கோழிவென்றி சேவலின் போர்வெற்றியைக் கூறும் புறத்துறை .
கோழிவேந்தன் உறையூர் அரசனான சோழன் .
கோழை கபம் , உமிழ்நீர் ; மனத்திட்பமின்மை , இரக்கம் ; சிறுபிள்ளை .
கோழைத்தனம் மனத்திட்பமின்மை , அச்சத்தன்மை .
கோழைதீர்தல் மனத்திடம் பெறுதல் .
கோலியன் காண்க : கோலிகன் .
கோலிவருதல் சுற்றிவருதல் .
கோலிளகுதல் அரசன் இறத்தல் .
கோலுதல் பாத்தி முதலியன வகுத்தல் ; வளைத்தல் ; திரட்டிவைத்தல் ; நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல் ; விரித்தல் ; தொடங்குதல் ; உண்டாக்குதல் ; ஆலோசித்தல் ; தியானித்தல் ; அமைத்தல் .
கோலுபட்டை இறைகூடைவகை .
கோலெரி விளக்குத்தண்டின் மேலுள்ள விளக்கு .
கோலை மிளகு .
கோலொற்றுதல் அம்பெய்தல் .
கோலோகம் பசுக்களுக்குரிய விண்ணுலகம் .
கோலோர் மதயானையை அடக்கும் குத்துக் கோற்காரர் .
கோவணம் கீழாடை .
கோவணவன் கோவணந் தரித்த சிவன் .
கோவணன் கோவணம் தரித்த சிவன் ; வசிட்டன் .
கோவணாண்டி கோவணம் மட்டும் உடைய பிச்சைக்காரன் ; கதியற்றவன் .
கோவணி ஆத்திமரம் .
கோவதை பசுக்கொலை .
கோவம் கோபம் ; பொன் ; தம்பலப்பூச்சி .
கோவர்த்தனர் இடையர் ; வணிகர் .
கோவல் திருக்கோவலூர் .
கோவலர் முல்லைநில மாக்கள் , இடையர் .
கோவலன் இடையன் ; கண்ணன் ; சிலப்பதிகாரத் தலைவன் .
கோவலி பற்கிட்டுகை .
கோவலூர் திருக்கோவலூர் .
கோவளம் கடலுக்குள் நீண்ட தரை ; தரை முனையில் உள்ள ஊர் .
கோவளை வாழை .