சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சாம்பார் | பருப்புக்குழம்பு . |
சாம்பான் | பறையர் பட்டப்பெயர் . |
சாம்பி | உயரத் தூக்கும் கருவிவகை . |
சாம்பிராச்சியம் | காண்க : சாம்ராச்சியம் . |
சாம்பிராணி | காண்க : பறங்கிச் சாம்பிராணி ; ஒரு மரவகை ; மூடன் ; தூபவர்க்கத்துள் ஒன்று . |
சாம்பிராணிபோடுதல் | ஆவேசம் வரச்செய்தல் ; தூண்டுதலைச் செய்தல் ; நறும்புகை காட்டுதல் ; புகழ்தல் . |
சாம்பு | பறை ; படுக்கை ; புடைவை ; பொன் ; நாவல்மரம் . |
சாம்புதல் | இழுத்தல் ; அறைதல் ; உணர்வழிதல் ; வாடுதல் ; கூம்புதல் ; ஒடுங்குதல் ; கெடுதல் ; குவிதல் ; ஒளிமழுங்குதல் . |
சாம்புநதம் | நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு . |
சாம்பூநதம் | நால்வகைப் பொன்னுள் ஒன்று ; மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு . |
சாம்ராச்சியம் | தனியரசாட்சி ; பெரும்பதவி . |
சாமக்காவல் | இராக்காவல் . |
சாமக்கிரி | உணவுப்பண்டம் ; துணைக்கருவி . |
சாமக்கிரியை | உணவுப்பண்டம் ; துணைக்கருவி . |
சாமக்கோழி | நள்ளிரவில் கூவுங் கோழி . |
சாமகண்டர் | நீலகண்டமுடைய சிவன் . |
சாமகம் | சாணைக்கல் . |
சாமகானம் | சாமவேதம் பாடுதல் . |
சாமணம் | தட்டார் கருவிவகை . |
சாமந்தம் | ஒரு பண்வகை ; பக்கம் . |
சாமந்தன் | சிற்றரசன் ; படைத்தலைவன் ; அமைச்சன் . |
சாமந்தி | செவ்வந்தி ; பூச்செடிவகை ; சீமைச்சாமந்தி . |
சாமம் | ஏழரை நாழிகைகொண்ட காலம் ; இடைச்சாமம் ; சாமவேதம் ; கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள் ; ஓர் உபாயம் ; கருமை ; பச்சை ; பஞ்சம் ; அறுகு . |
சாமர்த்தியம் | திறமை ; பூப்படைதல் . |
சாமரபுட்பம் | கமுகு ; மாமரம் . |
சாமரம் | கழு ; கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் ; சிவதைக்கொடி . |
சாமரை | கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் . |
சாமளம் | கருமை ; பசுமை . |
சாமளாதேவி | பசிய நிறமுடைய பார்வதி . |
சாமளை | பசிய நிறமுடைய பார்வதி . |
சாமன் | புதன் ; மன்மதன் தம்பி . |
சாமாசி | நடுநிலையாளன் ; தூதன் ; ஆலோசனை . |
சாமான் | பண்டம் , பொருள் . |
சாமானியம் | சாதாரணம் ; பொது ; பெறுதற்கெளியது ; முழுமை . |
சாமானியன் | சாதாரண சக்தியுள்ள மனிதன் ; தன் சாதியில் மட்டமானவன் . |
சாமி | கடவுள் ; முருகக்கடவுள் ; அருகன் ; குரு ; தலைவன் ; மூத்தோன் ; தாய் ; தலைவி ; பொன் ; செல்வம் ; சாமை ; மரியாதைச்சொல் . |
சாமிபோகம் | மேல்வாரதாரருக்குக் கொடுக்கும் துண்டுவாரம் . |
சாமியம் | ஒப்புமை ; சொத்துரிமை . |
சாமியாடுதல் | தெய்வமேறியதால் குறி சொல்லுதல் . |
சாமீகரம் | பொன் . |
சாமீப்பியம் | அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை . |
சாமீபம் | அண்மை ; ஒரு பதவி ; கடவுளை அணுகியிருக்கும் நிலை . |
சாமுசித்தன் | முற்பிறப்பிலே சரியை கிரியையோக முடித்து ஞானத்தோடு பிறந்தவன் . |
சாப்பறை | சாவில் அடிக்கப்படும் பறை . |
சாப்பாக்கொடுத்தல் | சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப் பார்த்தல் . |
சாப்பாடு | உணவு ; நல்ல அடி |
சாப்பிடுதல் | உண்ணுதல் ; கைப்பற்றுதல் . |
சாப்பிள்ளை | செத்துப் பிறக்கும் பிள்ளை . |
சாப்பை | புற்பாய் ; வலிமையில்லாதவன் . |
சாபங்கொடுத்தல் | சபித்தல் . |
சாபசரத்தி | தவப்பெண் . |
சாபத்திரி | சாதிபத்தரி . |
சாபம் | வில் ; தனுராசி ; விலங்கின் குட்டி ; தவத்தோர் சபித்துக் கூறும் மொழி . |
சாபமோசனம் | சாபத்திலிருந்து விடுபடுதல் . |
சாபல்லியம் | பயனுளதாதல் ; சபலபுத்தி . |
சாபலம் | விடாப்பற்று ; வான கணித வாக்கிய எண் ; எளிமை . |
சாபனை | சாபம் . |
சாபாலன் | ஆட்டுவாணிகன் . |
சாபித்தல் | சாபமிடுதல் . |
சாபிதா | பண்டம் முதலியவற்றின் குறிப்பு . |
சாம்பசிவன் | அம்பிகையுடன் கூடிய சிவன் . |
சாம்பம் | காண்க : ஆனைநெருஞ்சி . |
சாம்பர் | சாம்பல் , எரிந்த நீறு . |
சாம்பல் | எரிபட்ட நீறு ; வாடற்பூ ; முதுமை ; நாவல்மரம் ; புகையிலை பருத்திப் பயிர்களைக் கெடுக்கும் பூச்சி . |
சாம்பல்மொந்தன் | வாழைவகை . |
சாம்பலச்சி | வெடியுப்பு . |
சாம்பலாண்டி | உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி ; கோமாளி . |
சாம்பலொட்டி | எருக்கு . |
சாம்பவம் | சிவசம்பந்தமானது ; சைவமதபேதம் ; ஒரு புராணம் . |
சாம்பவன் | சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் . |
சாம்பவான் | சிவனை வழிபடுவோன் ; இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன் . |
சாம்பவி | பார்வதி ; ஒரு தீட்சைவகை ; நாவல் வகை . |
சாம்பற்பூசணி | பூசணிவகை . |
சாம்பற்பூத்தல் | நெருப்பில் நீறுபூத்தல் ; காய் , இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல் ; சாம்பல்போல் உடல்வெளுத்தல் . |
சாம்பன் | சிவன் . |
![]() |
![]() |
![]() |