சாமுண்டி முதல் - சார்பிற்றோற்றம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சாய்த்தல் சாயச்செய்தல் ; ஒரு பக்கமாக ஓட்டுதல் ; கரைக்குச் செலுத்துதல் ; கெடுத்தல் ; மெய்ப்படுத்துதல் ; முறித்தல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; மனம் சாயப்பண்ணுதல் .
சாய்த்துக்கொடுத்தல் ஒருசேரக் கொடுத்தல் .
சாய்த்துவிடுதல் தள்ளிக் கொல்லுதல் ; ஒருசேரக் கொடுத்தல் ; கவிழ்த்துவிடுதல் .
சாய்தல் மெலிதல் ; கவிழ்தல் ; வளைதல் ; திரண்டுசெல்லுதல் ; நடுநிலைமை மாறுதல் ; சார்தல் ; நடந்தேறுதல் ; ஒதுங்குதல் ; கோள் முதலியவை சாய்தல் ; படுத்தல் ; தோற்றோடுதல் .
சாய்ப்பிடம் படை பின்வாங்குமிடம் ; சிறு கொட்டகை .
சாய்ப்பு தாழ்வு ; மலைச்சரிவு ; சாய்வான கூரை ; சாய்வு ; இறப்பு ; இரிதல் ; மட்ட வெற்றிலை ; முகச்சாய்ப்பு .
சாய்மணை சார்மணை ; திண்டு .
சாய்மரம் சிவதைக்கொடி .
சாய்மானப்பலகை சாய்ந்து கொள்ளுதற்குரிய பலகை ; துணிவெளுக்கும் பலகை .
சாய்மானம் சார்மணை ; சாய்கை ; ஒரு சார்பு .
சாய்வு சரிவு ; ஒருசார்பு நிற்றல் ; குறைவு ; நிலைமைத் தாழ்வு ; வளைவு ; நோக்கம் ; அழிவு .
சாயக்காரன் வண்ணமிடுபவன் .
சாயகம் அம்பு .
சாயங்காலம் மாலைநேரம் .
சாயந்திரம் மாலைநேரம் .
சாயந்தீர்தல் சாயம்போடுதல் .
சாயந்தோய்த்தல் சாயம்போடுதல் .
சாயப்பணி செஞ்சாயமிடும் தொழில் .
சாயப்பாக்கு சாயமேற்றிய பாக்கு .
சாயப்பிடித்தல் காற்றுவாக்கில் கப்பலைச் செலுத்துதல் .
சாயம் நிறம் , வண்ணம் ; உண்மைத் தன்மை ; காண்க : சாயவேர் ; மாலைப்பொழுது .
சாயம்பிடித்தல் சாயம்போடுதல் .
சாயரட்சை சாயங்காலம் ; கோயிலில் நடக்கும் மாலைப்பூசை .
சாயரி பாலைப் பண்வகை .
சாயல் மென்மைத் தோற்றம் ; அழகு ; ஒப்பு ; நிறம் ; மேனி ; மென்மை ; சாய்வு ; இளைப்பு ; நிழல் ; மாதிரி ; நுணுக்கம் ; துயிலிடம் ; சார்பு ; மஞ்சள் ; மேம்பாடு ; மேம்பாடாகிய சொல் ; அருள் .
சாயல்காட்டுதல் நடித்தல் ; முன்குறியாகக் காட்டுதல் .
சாயல்மாயலாய் சாடைமாடையாய் .
சாயவிடுதல் மரக்கலத்தைக் கரைசேரவிடுதல் ; சாய்த்தல் ; ஏறவிடுதல் .
சாயவேர் சாயமிடுதற்குதவும் பூண்டுவகை .
சாயவேளாகொல்லி ஒரு பண்வகை .
சாயனம் கள் ; கிரகபுடம் ; இரசாயனம் .
சாயாக்கிரகம் காணாக் கோள்களாகிய இராகு கேதுக்கள் .
சாயாகௌளம் ஒரு பண்வகை .
சாயாதனயன் சாயையின் மகனாகிய சனி .
சாயாநீர் கானல்நீர் .
சாயாபடம் நிழற்படம் .
சாயாபதி சாயையின் கணவனாகிய சூரியன் .
சாயாபுத்திரன் காண்க : சாயாதனயன் .
சாயாபுருடன் நிழல் வடிவாகத் தோன்றும் புருடன் .
சாயான்னம் மாலைப்பொழுது ; மாலையிற்செய்யும் வழிபாடு .
சாயானகம் ஓந்தி ; ஓணான் .
சாயினம் மென்மையுள்ள மகளிர் கூட்டம் .
சாயுச்சியம் ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை .
சாயை நிழல் ; சூரியனின் தேவி ; எதிரொலி ; இராகுகேதுக்கள் ; புகழ் ; பாவம் ; பிரதேசம் ; தேயிலை ; ஒப்பு .
சார் கூடுகை ; இடம் ; ஏழனுருபு ; பக்கம் ; அணைக்கரை ; தாழ்வாரம் ; ஒரு மரம் ; அழகு ; ஒற்றன் ; வகை .
சார்க்கரம் கற்கண்டு ; பாலின் ஆடை .
சார்க்கேசபுஞ்சம் இலவம்பிசின் .
சார்கொடுத்தல் அணுகவிடுதல் .
சார்ங்கம் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான வில் .
சார்ச்சார் இடந்தொறு மிடந்தொறும் .
சாமுண்டி துர்க்கை ; அவுரிப்பூண்டு ; நாணல் ; பொன்னாவிரை .
சாமுதம் கடுக்காய் ; கோரைப்புல் .
சாமேளம் சாப்பறை .
சாமை ஒரு தானியம் ; வரகு ; கற்சேம்பு ; பெரு நெருஞ்சில் .
சாமோபாயம் நான்கு சூழ்ச்சிகளுள் ஒன்று , இன்சொற் கூறிப் பகைவனைத் தன்வசமாக்கும் சூழ்ச்சி .
சாமோற்பலம் யானைநெற்றியிலணியும் சிந்தூரம் .
சாமோற்பவை பெண்யானை .
சாய் ஒளி ; அழகு ; நிறம் ; புகழ் ; தண்டாங்கோரைப்புல் ; செறும்பு .
சாய்கால் செல்வாக்கு .
சார்ச்சி சாய்வு ; தொடர்பு ; சேருகை ; வருகை ; சார்விடம் .
சார்த்து பத்திரம் ; குறிப்பு .
சார்த்துகவி ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுள் இயற்றுவோன் .
சார்த்துதல் இணைத்தல் ; சாரச்செய்தல் .
சார்த்துவகை தலைமை வகையானன்றி உவமையாகிய சார்புவகையாற் கூறும் முறை .
சார்த்துவரி பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை .
சார்த்தூலம் புலி .
சார்தல் சென்றடைதல் ; புகலடைதல் ; அடுத்தல் ; பொருந்தியிருத்தல் ; கலத்தல் ; உறவு கொள்ளுதல் ; ஒத்தல் ; சாய்தல் .
சார்ந்தவர் சுற்றத்தார் ; நண்பர் .
சார்ந்தார் சுற்றத்தார் ; நண்பர் .
சார்ந்தோர் சுற்றத்தார் ; நண்பர் .
சார்ப்பு சார்ப்புக்கூரை ; ஆதாரம் .
சார்பறுத்தல் துறத்தல் ; பிறப்பறுத்தல் .
சார்பிலார் முனிவர் ; பகைவர் .
சார்பிலோர் முனிவர் ; பகைவர் .
சார்பிற்றோற்றம் இயற்கைத் தோற்றமுறை ; சார்பெழுத்து ; பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள் .