சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சித்தர் | ஞானசித்தி யடைந்தோர் ; சித்திபெற்றவர் ; தேவகணத்துள் ஒரு சாரார் . |
சித்தரி | சிறுகுளம் . |
சித்தல் | சீலை . |
சித்தலயம் | பரம்பொருளுடன் மனம் ஒன்றுகை . |
சித்தவிகாரம் | மனவேறுபாடு . |
சித்தவிலாசம் | உலகப்பற்றில் ஈடுபடுதல் . |
சித்தவைத்தியம் | சித்தர்கள் கையாண்டதாகக் கருதும் தமிழ் மருத்துவமுறை . |
சித்தன் | சித்திபெற்றோன் ; முருகக்கடவுள் ; அருகன் ; சிவன் ; வைரவன் ; வியாழன் ; உண்மையுள்ளவன் ; மாயவித்தை செய்பவன் ; இலவமரம் ; காந்தக்கல் . |
சித்தன்வாழ்வு | முருகக்கடவுளின் வாழ்விடமான திருவாவினன்குடி . |
சித்தாகாரம் | உருவமின்மை , அருவம் . |
சித்தாதிகள் | சித்தர் ; இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவர் எனக் கருதப்படும் யோகிகள் . |
சித்தாந்தசாத்திரம் | சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன . |
சித்தாந்தசைவம் | சுத்தாத்துவித சைவ சமயம் . |
சித்தாந்தம் | முடிந்த முடிவு ; சைவ சித்தாந்தம் ; வானசாத்திரம் கூறும் நூல் ; சிவாகமங்கள் ; பிடிவாதம் . |
சித்தாந்தன் | சிவன் ; நிச்சயிக்கப்பட்டவன் . |
சித்தாந்தி | சித்தாந்த சமயி ; கணிதன் ; தன் கொள்கையை நாட்டுபவன் ; சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தவன் . |
சித்தாமோகம் | பேரோசனை என்னும் உலோகவகை . |
சித்தார்த்தம் | வெண்கடுகு ; மெய்யறிவு . |
சித்தார்த்தன் | புத்தன் . |
சித்தார்த்தி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து மூன்றாம் ஆண்டு . |
சித்தி | கைகூடுகை ; வீடுபேறு ; எண்வகைச் சித்தி ; அறிவு ; சிவஞானசித்தியார் ; ஊறுசெய்தல் ; சித்தித்தல் ; அற்புதவன்மை ; சவர்க்காரம் ; நிலப்பனை ; எட்டிமரம் ; பொன்னாங்காணி . |
சித்திக்கல் | செடில் ஆட்டத்திற்காக நாட்டப்பட்ட தூண் ; குறுஞ்சிலைக்கல் . |
சித்திகணபதி | விநாயகன் . |
சித்தித்தல் | கைகூடுதல் . |
சித்திநெறி | முத்திவழி . |
சித்திபத்தனம் | வீடுபேறு . |
சித்தியடைதல் | வீடுபேறடைதல் . |
சித்தியர் | தெய்வமங்கையர்வகை . |
சித்திரக்கம்மம் | வியத்தகு வேலைப்பாடு ; சித்திர வேலைப்பாடு . |
சித்திரக்கம்மி | ஆடைவகை . |
சித்திரக்கரணம் | நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில் ; புணர்ச்சிவகை . |
சித்திரக்கிரீவன் | அழகிய கழுத்தை உடைய புறவு . |
சித்திரக்குள்ளன் | மிகக் குள்ளமானவன் . |
சித்திரகடம் | பெருங்காடு . |
சித்திரகம் | கொடிவேலி ; ஆமணக்கு . |
சித்திரகவி | நாற்கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி ; சித்திரகவி பாடுவோன் . |
சித்திரகாயம் | புலி . |
சித்திரகாரன் | ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி . |
சித்திரகாரி | ஓவியன் , படம் வரைபவன் ; சிற்பி . |
சித்திரகூடம் | சித்திரச்சாலை ; சீராமன் தங்கிய ஒரு மலை ; சிதம்பரத்தில் உள்ள திருமால் கோயில் ; தெற்றியம்பலம் . |
சித்திரச்சூடகம் | அழகிய வேலைப்பாடமைந்த மோதிரம் . |
சித்திரச்சோறு | காண்க : சித்திரான்னம் . |
சித்திரசபை | திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை . |
சித்திரசாலை | காண்க : சித்திரமண்டபம் . |
சித்திரதாளம் | ஒன்பான் தாளத்துள் ஒன்று . |
சித்திரப்படம் | ஓவியம் ; பூந்துகில் ; யாழ் முதலியவற்றின் பல நிறமுள்ள உறை ; எழுதுசித்திரம் . |
சித்திரப்படாம் | பூந்துகில் . |
சித்திரப்பணி | வியத்தகு வேலை ; ஓவியம் . |
சித்திரப்பா | சித்திரகவிவகை . |
சித்திரப்பாலாடை | அம்மான் பச்சரிசிப்பூண்டு . |
சித்திரப்பூமி | விசித்திரமான சோலை , செய்குன்று முதலிய இடங்கள் . |
சித்திரப்பேச்சு | அலங்காரப் பேச்சு ; தந்திரப் பேச்சு . |
சித்திரபானு | அறுபதாண்டுக் கணக்கில் பதினாறாம் ஆண்டு ; நெருப்பு ; சூரியன் . |
சித்திரபுண்டரம் | வைணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு . |
சித்திரம் | ஓவியம் ; சிறப்பு ; அழகு ; அலங்காரம் ; வியப்புடையது ; சித்திரகவி ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஓட்டை ; குறைவு ; வெளி ; பொய் ; இரகசியம் ; உட்கலகம் ; சித்திரப்பேச்சு ; தந்திரப்பேச்சு ; சிறுகுறிஞ்சா ; கொடிவேலி ; ஆமணக்கஞ்செடி . |
சித்திரம்வெட்டுதல் | கல்லில் சித்திரவேலை செய்தல் . |
சித்திரமண்டபம் | ஓவியச்சாலை ; ஓலக்க மண்டபம் . |
சித்திரமாடம் | சிங்காரமாளிகை . |
சித்திரமிருகம் | மான் . |
சித்திரமூலம் | கொடிவேலி ; செங்கொடிவேலி . |
சித்திரமேகலை | மயில் . |
சித்திரரதன் | சூரியன் . |
சித்திரரேகை | உள்ளங்கைக் கோடுகளுள் ஒன்று . |
சித்திரவண்ணம் | நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம் . |
சித்திரவதம் | வேதனைப்படுத்திக் கொல்லுகை . |
சித்திரவதை | வேதனைப்படுத்திக் கொல்லுகை . |
சித்திரவல்லாரி | சேங்கொட்டை . |
சித்திரவேளாகொல்லி | யாழ்த்திறவகை . |
சித்திரவோடாவி | ஓவியன் . |
சித்திரன் | ஓவியன் ; தச்சன் . |
சித்திராக்கினை | காண்க : சித்திரவதை . |
சித்தராங்கி | தந்திரக்காரி ; கொடுநீலி . |
சித்திரான்னம் | புளி , எள் , சர்க்கரை முதலியவற்றைத் தனித்தனியே கலந்தட்ட சோறு . |
சித்திரிகை | வீணைவகை ; நல்லாடைவகை . |
சித்திரிணி | காண்க : சித்தினி . |
![]() |
![]() |
![]() |