சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சுகவாசி | தொழிலின்றி இன்பமாக வாழ்வோன் ; நிலைத்த குடியானவன் . |
சுகவாரி | இன்பக்கடல் . |
சுகவாழ்வு | நல்வாழ்க்கை . |
சுகவிருத்தி | நலம் ; இன்பச்செய்தி ; சுகாதாரம் . |
சுகவீனம் | நலமின்மை . |
சுகாசனம் | ஆசனம் ஒன்பதனுள் யோகி தன் விருப்பம்போல அமைத்துக்கொள்ளும் ஆசனம் . |
சுகாசுகம் | இன்பதுன்பம் . |
சுகாட்டம் | நாணல் ; முடக்கொற்றான் . |
சுகாதிசயம் | நலம் ; பேரின்பம் . |
சுகாதீதம் | மேற்பட்ட சுகம் ; வீடுபேறு . |
சுகாந்தம் | வெண்காயம் . |
சுகாந்திக்கல் | செவ்வந்திக்கல் . |
சுகானுபவம் | இன்பநுகர்ச்சி . |
சுகி | இன்பம் நுகர்பவன் ; செல்வன் ; நோயிலான் ; இனிப்புப் பணிகாரவகை . |
சுகித்தல் | நலமாயிருத்தல் ; சிற்றின்பந்துய்த்தல் . |
சுகிதம் | பால் . |
சுகிப்பு | இன்ப அனுபவம் ; சம்பிரமம் . |
சுகியன் | இன்பந்துய்ப்பவன் ; ஓர் இனிப்புப் பண்டவகை . |
சுகிர் | உட்டுளை . |
சுகிர்த்து | நண்பன் . |
சுகிர்தகுணம் | நல்ல பண்பு ; நற்குணம் . |
சுகிர்தசாலி | பாக்கியமுள்ளவன் . |
சுகிர்தபலன் | நல்வினைப் பயன் . |
சுகிர்தபுண்ணியம் | நல்வினைப் பயன் . |
சுகிர்தம் | நற்செயல் ; நன்மை ; இன்பம் ; நெய் . |
சுகிர்தல் | பஞ்சுகொட்டுதல் ; மயிர்வகிர்தல் ; கிழித்தல் ; வடித்தல் . |
சுகிர்தவசனம் | நல்வாக்கு . |
சுகிர்தன் | நண்பன் ; புண்ணியசாலி . |
சுகிர்புரிதல் | யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல் . |
சுகுச்சை | அறுவகை வெறுப்புகளுள் ஒன்றாகிய அருவருப்பு . |
சுகுடம் | சேம்பு . |
சுகுணம் | நற்குணம் . |
சுகுமாரதை | மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; வல்லொற்று நீங்கிய சொற்களால் ஆக்கப்பெற்ற மென்மை நிரம்பிய செய்யுட்குணமாகிய ஓர் அணி . |
சுகுமாரநெய் | பெண்களுக்கு மலடுநீங்கக் கொடுக்கும் மருந்து நெய் . |
சுகுமாரம் | மென்மை ; காண்க : சுகுமாரநெய் ; தானியவகை ; கரும்புவகை . |
சுகுமாரன் | மெல்லிய உடலுள்ளவன் ; நன்மகன் . |
சுகோததி | இன்பக்கடல் . |
சுகோதயள் | சுகத்திற்கு இருப்பிடமானவள் . |
சுகோதரம் | காண்க : தாளிசபத்திரி . |
சுங்கக்காரன் | சுங்கம் வசூல் செய்பவன் . |
சுங்கச்சாவடி | ஆயத்துறை . |
சுங்கம் | ஆயம் ; கீழறுக்கை ; திருட்டு ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
சுங்கம்பிடித்தல் | கடும்பற்றுள்ளத்தால் பொருள் சேர்த்தல் ; இடைலாப மெடுத்தல் . |
சுங்கவிறை | ஆயம் . |
சுங்கன் | சுக்கிரன் ; ஒரு மீன்வகை . |
சுங்கான் | கப்பல் திருப்பும் கருவி ; புகை குடிக்கும் குழாய் . |
சுங்கி | ஆலமரம் ; வன்னிமரம் . |
சுங்கு | ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ; ஆடையின் கொய்சகம் ; சடைக்குச்சு . |
சுங்குத்தான்குழல் | பறவை முதலியவற்றை வீழ்த்தும் உண்டை யெறிகுழல் . |
சுச்சு | இஞ்சி ; சுக்கு ; சுண்டிச்செடி ; பறவை மூக்கு . |
சுசனம் | காற்று ; உறவினர் . |
சுசனன் | நல்லவன் . |
சுசாதிபேதம் | சுயசாதியில் பல இனங்களுக்குள் மாறுபாடு . |
சுசி | சுத்தம் ; வெண்மை ; நெருப்பு ; சந்திரன் ; முதுவேனில் ; கேடைக்காலம் ; சுக்கிரம் ; ஆடிமாதம் ; சுசிகரம் ; காமக்கவலை ; பாதரசம் ; இணக்கம் ; கொடிவேலி . |
சுசிகம் | புளியாரைக்கீரை . |
சுசிகரம் | தூய்மை ; மேன்மை . |
சுசிதம் | மிக வெண்மையான பால் . |
சுசிரம் | நெருப்பு ; உட்டுளை ; ஊதுகுழல் . |
சுசீலம் | இனிய பண்பு . |
சுசீலன் | நல்லொழுக்கமுள்ளவன் . |
சுசீலை | நல்லொழுக்கமுடையவள் ; புகைநிறப் பசு . |
சுசுகம் | முலைக்கண் . |
சுசுந்தரி | மூஞ்சூறு . |
சுசுமை | கற்புடையவள் ; சுக்கிரன் ; மனைவி . |
சுசுருசை | பணிவிடை . |
சுசுலம் | சிறுபண்டம் ; விழல் . |
சுசூகம் | காண்க : சுசுகம் . |
சுஞ்சுமாரம் | காலணி ; முதலை ; கழுத்தெலும்பு . |
சுஞ்ஞானம் | காண்க : சுக்கியானம் . |
சுட்கம் | வறட்சி ; உலர்ந்தது ; ஒரு நோய் ; பணம் முதலியவற்றின் குறைவு ; கடும்பற்று . |
சுட்குதல் | வறளுதல் . |
சுட்டகல் | சூளையிற் சுடப்பட்ட செங்கல் . |
சுட்டசெங்கல் | சூளையிற் சுடப்பட்ட செங்கல் . |
சுட்டணி | காண்க : நிதரிசனம் . |
சுட்டல் | காட்டுதல் ; குறித்தல் ; பொருண்மை மாத்திரம் காணும் அறிவு . |
![]() |
![]() |
![]() |