சுட்டறிவு முதல் - சுடுமூஞ்சி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சுட்டறிவு புலன்களால் அறியும் அறிவு .
சுட்டாமுட்டி சுட்டுவிரல் .
சுட்டி குழந்தைகளும் மகளிரும் நெற்றியிலணியும் அணி ; மாட்டின் நெற்றிச்சுழி ; மயிர்முடி ; பாம்பு முதலிய உயிர்களின் உச்சிவெள்ளை ; நெற்றிப்பட்டம் ; தீயோன் ; நற்பேறு இல்லாதவன் ; புத்திக்கூர்மையுள்ளவன் ; அதன் பொருட்டு ; நாக்கு ; ஆடைக்கரைவகை .
சுட்டிக்காட்டுதல் குறித்துக் காண்பித்தல் .
சுட்டிகை மாதர் நுதலணி .
சுட்டிச்சுண்ணம் உடம்பைத் தூய்மை செய்தற்குரிய நறுமணப்பொடி .
சுட்டிசுட்டியாக வட்டம் வட்டமாக .
சுட்டித்தலை குறும்புத்தனம் ; முரடன் .
சுட்டித்தலையன் முரடன் ; உச்சிவெள்ளையுடைய விலங்கு .
சுட்டித்தனம் குறும்புத்தனம் .
சுட்டிப்பேசுதல் குறிப்பாய்ச் சொல்லுதல் .
சுட்டிமுகடு மகளிர் தலையில் அணியும் ஓர் அணிவகை .
சுட்டு குறிப்பிடுகை ; கருதப்படும் பொருள் ; நன்மதிப்பு ; காண்க : சுட்டெழுத்து ; சுட்டணி .
சுட்டுக்கோல் காண்க : உலையாணிக்கோல் ; தீயோன் .
சுட்டுச்சொல் ஒன்றைக் குறித்துக்காட்டும் மொழி .
சுட்டுணர்வு புலன்களால் அறியும் அறிவு ; பொருண்மை மாத்திரை காணும் அறிவு .
சுட்டுதல் குறிப்பிடுதல் ; நினைத்தல் ; நோக்கமாகக் கொள்ளல் ; நன்கு மதித்தல் .
சுட்டுப்பெயர் சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர் ; சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர் .
சுட்டுப்பொருள் கருதிய பொருள் ; வழிபாட்டிற்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம் .
சுட்டுவிரல் ஆட்காட்டி விரல் .
சுட்டுவைத்தல் ஒருவரை நினைத்தவண்ணமாயிருத்தல் ; வழிபாட்டில் மனத்தை நிறுத்துதல் ; இலக்குவைத்தல் .
சுட்டெழுத்து சுட்டி உணர்த்தும் அ , இ , உ என்னும் எழுத்துகள் .
சுடர் ஒளி ; சூரியன் ; வெயில் ; சந்திரன் ; கோள் ; ஆண்டு ; தளிர் ; விளக்கு ; சுடர் ; தீப்பொறி ; சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி .
சுடர்க்கடை மின்மினி ; மயில் .
சுடர்க்கொடி ஆரத்திக் கருப்பூரம் .
சுடர்ச்சக்கரம் துருவச்சக்கரம் .
சுடர்தல் ஒளிவிடுதல் .
சுடர்நிலை விளக்குத்தண்டு ; விளக்கணி .
சுடர்நிலைத்தண்டு விளக்குத்தண்டு .
சுடர்நேமி காண்க : சுடர்ச்சக்கரம் .
சுடர்மணிக்கோவை யானையின் அணிவகை .
சுடர்மௌலியர் ஒளிவிடும் சென்னியராகிய தேவர்கள் .
சுடர்விட்டெரிதல் சுவாலைவிட்டு எரிதல் .
சுடர்விடுதல் சுவாலைவிட்டு எரிதல் .
சுடர்விழியோன் வீரபத்திரன் ; சிவபெருமான் .
சுடர்விழுதல் விளக்கு முதலியவற்றிலிருந்து தீச்சிகை விழுதல் .
சுடரவன் ஒளியுடைய சூரியன் .
சுடரோன் ஒளியுடைய சூரியன் .
சுடல் சுடரிலிருந்து விழும் எண்ணெய்த் துளி ; திரியின் எரிந்த முனைமுடிச்சு .
சுடலை காண்க : சுடுகாடு ; சவர்க்காரம் .
சுடலைக்கரை சுடுகாடு .
சுடலைக்கான் சுடுகாடு .
சுடலைநோன்பிகள் காபாலமதக் கொள்கையுடைய துறவியர் .
சுடலைமாடன் சுடுகாட்டிலுள்ள ஒரு பேய்வகை .
சுடலையாடி சுடுகாட்டில் ஆடுவோனாகிய சிவபெருமான் ; சவர்க்காரம் .
சுடாரி கவசம் ; கையுறை .
சுடிகை தலையுச்சி ; முடி ; நெற்றிச்சுட்டி ; மயிர்முடி ; சூட்டு ; பொட்டு ; பனங்கள் .
சுடீரம் துளை .
சுடு சுடுகை ; சும்மாடு .
சுடுக்குதல் நெட்டிவாங்குதல் ; பேன் முதலியவற்றை நெரித்தல் .
சுடுகண் கொள்ளிக்கண் .
சுடுகலம் சுடப்பட்ட மட்பாண்டம் .
சுடுகாட்டுக்கோட்டம் காண்க : சக்கரவாளக்கோட்டம் .
சுடுகாட்டுப்பாட்டம் மயான வரிவகை .
சுடுகாடு பிணம் எரிக்கும் மயானம் .
சுடுகோல் சூட்டுக்கோல் .
சுடுசுடுத்தல் சினக்குறிப்புக் காட்டுதல் .
சுடுசுடெனல் விரைவுக்குறிப்பு ; சினக்குறிப்பு .
சுடுசுண்ணச்சாந்து நீற்றின் சுண்ணாம்பு .
சுடுசுண்ணம் நீற்றின் சுண்ணாம்பு .
சுடுசொல் துன்புறுத்தும் மொழி .
சுடுசோறு புதிதாகச் சமைத்த அன்னம் .
சுடுதண்ணீர் வெந்நீர் .
சுடுதல் காய்தல் ; காயச்செய்தல் ; எரித்தல் ; பலகாரம் செய்தல் ; காளவாயில் வேகவைத்தல் ; மருந்து நீற்றுதல் ; வெடி சுடுதல் ; சூடிடுதல் ; கெடுத்தல் ; தீயிலிடுதல் ; வருத்துதல் .
சுடுதுரத்தம் சித்திரப்பாலாவிப் பூண்டு .
சுடுநாற்றம் மயிர் , பிணம் முதலியன சுடுதலால் உண்டாகும் நாற்றம் .
சுடுநிலம் காண்க : சுடுகாடு .
சுடுநீர் வெந்நீர் .
சுடுநோக்கு கொள்ளிக்கண் ; கொடிய பார்வை உடைய கண் .
சுடுபடை காண்க : சுடுகோல்
சுடுபுண் சுட்டதனால் உண்டான புண் .
சுடுபொன் புடமிட்ட பொன் .
சுடுமட்பலகை செங்கல் .
சுடுமண் சுட்ட ஓடு ; மட்பாண்டம் ; செங்கல் .
சுடுமூஞ்சி கடுகடுத்த முகம் ; கடுகடுத்த முகமுடையவன்(ள்) .