சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சுடுவல் | குருதி ; இரத்தம் . |
சுடுவன் | குருதி ; இரத்தம் . |
சுடுவான் | மரக்கலத்திலுள்ள சமையலறை . |
சுடுவு | சும்மாடு . |
சுண்ட | முற்றும் . |
சுண்டக்கட்டுதல் | இழுத்துக் கட்டுதல் . |
சுண்டக்காய்ச்சுதல் | இறுகக் காய்தல் ; நீர்வற்றக் காய்ச்சுதல் . |
சுண்டக்காய்தல் | இறுகக் காய்தல் ; நீர்வற்றக் காய்ச்சுதல் . |
சுண்டகம் | மூங்கில் வில் . |
சுண்டகன் | கள்ளிறக்குவோன் . |
சுண்டங்காய் | சுண்டைக்காய் . |
சுண்டப்பிடித்தல் | ஆடையை அளக்க இழுத்துப் பிடித்தல் ; வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல் ; பொருளை இறுக்குதல் . |
சுண்டம் | கள் ; யானைத்துதிக்கை . |
சுண்டல் | எரித்த பழங்கறி ; சுண்டின பயற்றுப் பணிகாரம் ; சுண்டற்கடலை . |
சுண்டற்கறி | எரித்த பழங்கறி . |
சுண்டன் | அறிவிலி ; காண்க : மூஞ்சூறு ; சதயநாள் ; சிறிய மரவகை . |
சுண்டாங்கி | கறியோடு சேர்க்க அரைத்த கூட்டுப்பொருள் ; துவையல் ; அற்பம் ; அளவிற்குறைவு . |
சுண்டாங்கியார் | சிக்கனக்காரி . |
சுண்டாயம் | விளையாட்டு . |
சுண்டாலம் | யானை . |
சுண்டாலி | யானை . |
சுண்டான் | கள்விற்போர் வழங்கும் ஒரு மட்பாண்டச் சிற்றளவு ; குழந்தைகள் தீக்கொளுத்தி விளையாடும் குச்சி . |
சுண்டி | தொட்டாற்சுருங்கி ; நீர்ப்பூடுவகை ; சுக்கு ; காண்க : வறட்சுண்டி ; குறும்புக்காரன் ; இஞ்சிச்செடி ; கள் . |
சுண்டிக்கீரை | நீர்ப்பூடுவகை . |
சுண்டிகை | உள்நாக்கு . |
சுண்டில் | சுண்டிற்செடி ; தொட்டாற்சுருங்கி . |
சுண்டு | தெறிக்கை ; ஒரு சிற்றளவு ; சிறுபாத்திரவகை ; தலைப்பொடுகு ; காய்ச்சுகையில் பாத்திரத்தடியில் பற்றியது ; மூக்கு ; கீழுதடு ; சிறிது . |
சுண்டுக்கட்டை | நெய்வார் கருவியுள் ஒன்று . |
சுண்டுதல் | நீர் முதலியன வற்றுதல் ; குன்றிப்போதல் ; நாணயம் முதலியவற்றைத் தெறித்தல் ; நோவுண்டாகும்படி நரம்பு முதலியன இழுத்தல் ; வேகவைத்தல் ; வயிறு இழுத்துப்பிடித்தல் ; நாண் முதலியவற்றை இழுத்துத்தெறித்தல் ; இரப்பர் முதலியவற்றை இழுத்துவிடுதல் . |
சுண்டுவிரல் | சிறுவிரல் . |
சுண்டுவில் | விளையாட்டுக்கு உதவும் ஒரு வில்வகை . |
சுண்டெலி | சிறிய எலி . |
சுண்டை | சுண்டைச்செடி ; கள் ; யானைத் துதிக்கை ; நீர்நிலை . |
சுண்டைக்காயன் | மதிப்பற்றவன் . |
சுண்ணக்கல் | சுண்ணாம்புக்கல் |
சுண்ணகக்குற்றி | நறுமணப்பொடி வைக்கும் சிமிழ் . |
சுண்ணகம் | நறுமணப்பொடி . |
சுண்ணச்சாந்து | சுண்ணாம்புக்காரை . |
சுண்ணப்பொடி | நறுமணப்பொடி . |
சுண்ணம் | பொடி ; நறுமணப்பொடி ; பூந்தாது ; மலர் ; புழுதி , சதயநாள் ; சுண்ணாம்பு ; ஈரடி எண்சீரைப் பொருள்முறையின்றித் துணித்துச் செய்யுளியற்றும் முறை ; சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப்பாட்டு ; பட்டுவகை . |
சுண்ணமாடுதல் | விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல் . |
சுண்ணமிடித்தல் | நற்செயலுக்குச் செய்யும் ஒரு சடங்கு ; நறுமணப்பொடி இடித்தல் . |
சுண்ணமொழிமாற்று | மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று , ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல் . |
சுண்ணவட்டு | சுண்ணங் கலந்த நீரைவீசுங்கருவி . |
சுண்ணவாசி | காட்டுமல்லிகை . |
சுண்ணாம்படித்தல் | வெள்ளையடித்தல் . |
சுண்ணாம்பு | சுட்டசுண்ணாம்புக் கல் ; நீற்றின சுண்ணாம்பு ; சன்னச் சாந்தாக அரைத்த சுண்ணாம்பு . |
சுண்ணாம்புக்கல் | சுண்ணாம்புச் சத்துள்ள கல் . |
சுண்ணாம்புக்கரை | கட்டடத்திற்குரிய சுண்ணாம்புச் சாந்து ; காய்ந்த சாந்து . |
சுண்ணாம்புக்காளவாய் | சுண்ணாம்பு நீற்றுஞ்சூளை . |
சுண்ணாம்புத்துடுப்பு | கரண்டகத்தினின்று சுண்ணாம்பு எடுக்குங் கருவி . |
சுண்ணாம்புதடவுதல் | வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந் தடவுதல் ; ஏமாற்றுதல் . |
சுண்ணாம்புப்பட்டை | நல்ல செம்மண் பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம் ; ஓடு விலகாதிருக்கும் பொருட்டுப் போடும் சாந்துப்பட்டை . |
சுண்ணித்தல் | நீற்றுதல் . |
சுணக்கம் | பிணக்கம் ; தாமதம் ; வாட்டம் ; முடை ; சோர்வு ; சரசவிளையாட்டு . |
சுணக்கன் | நாய் ; நாய்போலத் திரிகிறவன் ; இழிந்தோன் . |
சுணக்குதல் | தாமதப்படுத்தல் . |
சுணங்கத்திசை | தென்மேற்றிசை . |
சுணங்கம் | நாய் . |
சுணங்கல் | வாட்டம் ; தாமதம் ; சோம்பேறி ; சரச விளையாட்டு . |
சுணங்கழிதல் | செருக்குக் குறைதல் . |
சுணங்கறை | புணர்ச்சி . |
சுணங்கன் | காண்க : சுணங்கம் . |
சுணங்கு | மெலிவு ; அழகுதேமல் ; பசலை ; படர்புண் ; நாய் ; பூந்தாது . |
சுணங்குதல் | சோர்தல் ; தாமதித்தல் ; தடைப்படுதல் ; விடாமல் கெஞ்சுதல் ; மனநிறை வின்மையாதல் ; சரச விளையாட்டுப் புரிதல் . |
சுணங்கை | ஒருவிதப் பேய்க்கூத்து ; துணங்கைக் கூத்து . |
சுணம் | அழகுதேமல் ; நறுமணப்பொடி . |
சுணை | சுரணை ; அறிவு ; கூர்மை ; தினவு ; வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் ; இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள் . |
சுணைக்கேடன் | சுறுசுறுப்பு அற்றவன் ; மானமில்லாதவன் ; சுரணை இல்லாதவன் . |
சுணைக்கோரை | ஒரு புல்வகை . |
சுணைகெட்டவன் | காண்க : சுணைக்கேடன் . |
சுணைத்தல் | தினவெடுத்தல் . |
சுணைப்பு | சுரணை ; அறிவு . |
சுத்தக்கட்டி | கலப்பற்ற வெள்ளி தங்கங்களின் கட்டி . |
சுத்தக்கிரயம் | எல்லா உரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை . |
![]() |
![]() |
![]() |