சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சுத்தகாந்தாரம் | பதினாறு சுரங்களுள் ஒன்று ; ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஒரு பண்வகை . |
சுத்தசாந்தம் | இன்பவடிவ சத்தி . |
சுத்தசாரி | நாட்டியவகை . |
சுத்தசிவபதம் | பரமுத்தி . |
சுத்தசூனியம் | முழுப் பாழ் . |
சுத்தசைதன்னியம் | அறிவு மாத்திரையாய் உள்ளது . |
சுத்தஞானம் | வினைக் கலப்பில்லாத வாலறிவு . |
சுத்ததினம் | ஆண்டுப் பிறப்பு . |
சுத்தநிருத்தம் | சொக்கம் என்னும் கூத்து . |
சுத்தநீர்க்கடல் | ஏழு கடல்களுள் நன்னீர் கொண்ட கடல் . |
சுத்தப்பிரதி | ஒன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட படி ; பரிசோதிக்கப்பட்ட புத்தகம் . |
சுத்தப்பொய் | முழுதும் பொய் . |
சுத்தபரிசம் | கிரகணம் பிடிக்குங் காலம் . |
சுத்தம் | தூய்மை ; உண்மை ; முழுமை ; பிழையின்மை ; சூனியம் ; நலம் ; கலப்பின்மை ; கபடமின்மை ; குற்றமற்றது ; சுக்கிலபட்சம் . |
சுத்தம்பண்ணுதல் | தூயதாக்கல் , துப்புரவாக்கல் . |
சுத்தமாய் | அடியோடு . |
சுத்தமாயை | துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்துக்கு முதல் காரணமானதுமான மாயை . |
சுத்தமார்க்கம் | உண்மையான பத்தி ; மெய்ந்நெறி . |
சுத்தமூடன் | முழுமுட்டாள் . |
சுத்தராகம் | நிரம்பிய இலக்கணமுடைய மூலப்பண் . |
சுத்தவாசனை | நறுமணம் . |
சுத்தவாளி | நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன் ; தூய்மையானவன் . |
சுத்தவீரன் | போரிற் பின்னிடாத வீரன் . |
சுத்தன் | தூயன் ; சிவன் ; முத்திபெறும் நிலையிலுள்ள உயிர் ; கபடற்றவன் ; மூடன் . |
சுத்தா | ஒருமிக்க . |
சுத்தாசுத்ததத்துவம் | காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் , மூலப்பகுதி என்ற ஏழு பிரிவினதாய்ச் சுத்தமும் அசுத்தமும் கலந்த தத்துவ வேறுபாடு . |
சுத்தாத்துவைதம் | உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து துய்க்கும் நிலை . |
சுத்தான்னம் | வெறுஞ்சோறு . |
சுத்தி | மனமொழி மெய்களில் மாசின்மை ; மருந்து முதலியவற்றின் குற்றம் நீக்குகை ; சிப்பி ; கும்பிடுகிளிஞ்சில் ; சங்கு ; தலையோடு ; கரந்தை ; அகல் ; பாத்திரவகை ; சுத்தியல் ; அரைப்பலம் ; புறமதத்தாரை இந்துமதத்தில் சேர்க்குங்கால் செய்யுல் சடங்கு ; வயிரக் குணங்களுள் ஒன்று . |
சுத்திகரம் | தூய்மைசெய்கை . |
சுத்திகரிப்பு | தூய்மைசெய்கை . |
சுத்திகை | கிளிஞ்சில் ; அகல் . |
சுத்திசெய்தல் | துப்புரவாக்கல் ; பொன் முதலிய உலோகங்களைத் தூய்மைசெய்தல் ; மருந்துக்காகப் பாடாணம் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; மந்திரம் முதலியவற்றால் தூய்மை செய்தல் . |
சுத்திபத்திரம் | பிழைதிருத்தக் குறிப்பு . |
சுத்தியம் | உயர்ந்தரக ஆடை . |
சுத்தியல் | கம்மாளர் கருவிகளுள் ஒன்றான சிறு சம்மட்டி . |
சுத்தீகரணம் | தூய்மையாக்குகை . |
சுத்துரம் | கண்டங்கத்திரிச்செடி . |
சுத்துரு | கண்டங்கத்திரிச்செடி . |
சுத்தோதகம் | நல்ல தண்ணீர் . |
சுதகம் | குறைவு . |
சுதசனம் | ஆயுதம் . |
சுதசித்தம் | தானாகவே ஏற்பட்டது . |
சுதந்தரக்காணி | உரிமை நிலம் . |
சுதந்தரக்காரன் | சொத்து முதலியவற்றுக்கு உரிமையுடையவன் . |
சுதந்தரம் | மரபுரிமை ; உரிமைப்பேறு ; தன் விருப்பம் ; விடுதலை . |
சுதந்தரவறிவு | இயற்கைப் பேரறிவு . |
சுதந்தரவாளி | சொத்தின் உரிமையாளன் . |
சுதந்தரன் | சொத்தின் உரிமையாளன் ; தன் விருப்பம்போல் நடப்பவன் . |
சுதந்தரித்தல் | சொத்து முதலியவற்றின் உரிமை பெறுதல் ; தன்வயத்தனாயிருத்தல் |
சுதந்தி | வடமேற்றிசைப் பெண்யானை ; பெண்யானை . |
சுதம் | இறங்குகை ; அழிவு ; பரமாகமம் ; காண்க : சுருதஞானம் ; முறைமை ; நெருஞ்சில் . |
சுதர்ச்சி | சதுரக்கள்ளிமரம் . |
சுதரிசனம் | நற்காட்சி ; திருமாலின் சக்கரம் ; அழகு ; கண்ணாடி . |
சுதருமம் | நல்லறம் ; இயல்பு ; அறநூல் விதித்த படி நடத்தற்குரிய அவரவர் செயல் . |
சுதலம் | கீழேழுலகங்களுள் ஒன்று . |
சுதன் | மகன் . |
சுதன்மம் | நல்லறம் ; ஆயுதம் ; இந்திரனின் அத்தாணி மண்டபம் . |
சுதன்மை | இந்திரனின் அத்தாணி மண்டபம் . |
சுதனம் | நற்பேறு ; ஆயுதம் |
சுதா | தன்னடைவான ; அமிர்தம் . |
சுதாகரன் | அமிர்த கதிரையுடைய சந்திரன் . |
சுதாச்சி | காண்க : சுதர்ச்சி . |
சுதாதாரன் | சந்திரன் . |
சுதாநிதி | சந்திரன் . |
சுதாமனு | மலை ; முகில் . |
சுதாரித்தல் | துணிவுகொள்ளல் ; திறமையாக நடத்துதல் |
சுதாவாய் | தானாகவே ; நேரில் . |
சுதாவில் | தானாகவே ; நேரில் . |
சுதி | இசைச் சுருதி ; யாழின் நரம்பு ; அறிஞன் ; மலவாய்த் துளை ; வளர்பிறை ; பெண் . |
சுதிமதிகெட்டவன் | கேள்வியும் அறிவும் இல்லாதவன் . |
சுதியேற்றுதல் | இசைச் சுருதியை மிகுதிப்படுத்துதல் ; தூண்டிவிடுதல் . |
சுதிலயை | சுருதியோடு இசையொன்றுகை . |
சுதினம் | நல்ல நாள் . |
சுதும்பு | ஒரு மீன்வகை . |
![]() |
![]() |
![]() |