சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சூமம் | வானம் ; நீர் ; பால் . |
சூர் | அச்சம் ; துன்பம் ; நோய் ; கடுப்பு ; வஞ்சகம் ; கொடுமை ; கொடுந்தெய்வம் ; தெய்வப்பெண் ; மிளகு ; வால்மிளகு ; சூரபதுமன் ; வீரம் ; அஞ்சாமை ; சூரியன் . |
சூர்ணம் | பொடி . |
சூர்ணி | செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் . |
சூர்ணிகை | செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் . |
சூர்த்தநோக்கு | கொடுமை . |
சூர்த்தம் | நடுக்கம் . |
சூர்த்தல் | அச்சுறுத்தல் ; கொடுமைசெய்தல் ; சுழலுதல் . |
சூர்தல் | பிரித்தல் ; மயிர் முதலியன வகிர்தல் ; பறித்தல் . |
சூர்துங்கராகம் | குறிஞ்சி யாழ்த்திறவகைகளுள் ஒன்று . |
சூர்ப்பகை | சூரபதுமன் பகைவனான முருகக்கடவுள் . |
சூர்ப்பம் | முறம் ; துணி . |
சூர்ப்பு | கொடுந்தொழில் ; சுழற்சி ; கைக்கடகம் ; வளைவு ; அச்சம் . |
சூர்மகள் | துர்க்கைக்கு ஏவல்செய்யும் யோகினிஎன்ற பெண்பேய் ; வஞ்சகப்பெண் . |
சூரசூதன் | அருணன் ; புதன் . |
சூரடித்தல் | மயிர் முதலியன தீப்படுதலால் கருகி நாற்றம் வீசுதல் . |
சூரணம் | தூள் ; பொடி ; கருணைக்கிழங்கு . |
சூரணிகை | காண்க : சூர்ணிகை . |
சூரணித்தல் | பொடிசெய்தல் . |
சூரணை | காண்க : சூர்ணிகை . |
சூரத்தனம் | வீரத்தனம் . |
சூரத்துவம் | வீரம் . |
சூரதை | வீரம் . |
சூரப்புலி | சுத்தவீரன் . |
சூரபுத்தி | அறிவாற்றல் . |
சூரம் | வீரம் ; அச்சம் ; கடலை ; ஒரு மரவகை . |
சூரரமகளிர் | தெய்வப் பெண்டிர் . |
சூரல் | சுழித்தடிக்கை ; பிரம்பு ; சூரைப்பூ ; காண்க : நரியிலந்தை . |
சூரன் | வீரன் ; சூரபதுமன் ; நாய் ; சூரியன் ; நெருப்பு ; கரடி ; சேவல் ; சிங்கம் . |
சூராட்டி | தேவராட்டி . |
சூரி | வீரமுடையவள் ; மாகாளி ; காடுகாள் ; புலவன் ; நித்தியசூரி ; சூரியன் ; எருக்கு ; காண்க : சூரிக்கத்தி ; ஒலைச் சுவடியில் துளையிடுங் கருவி ; காண்க : வைசூரி . |
சூரிக்கத்தி | கூர்மையான ஒரு கத்திவகை . |
சூரியகரந்தை | ஒரு பூண்டுவகை . |
சூரியகலை | பிங்கலை , மூக்கின் வலப்பக்கத்துத்துளை . |
சூரியகாந்தக்கல் | வெயில் படும்போது நெருப்பு வெளிப்படுந் தன்மையுள்ள ஒருவகைப் பளிங்குக்கல் . |
சூரியகாந்தம் | காண்க : சூரியகாந்தக்கல் ; சூரியகாந்தி . |
சூரியகாந்தி | செடிவகை ; ஒரிலைத் தாமரை ; ஒருவகைக் கெட்டியான பட்டு . |
சூரியகிரகணம் | சூரியன் , சந்திரன் , பூமி மூன்றும் நேர்கோட்டில் வரும் மறைநிலாக் காலத்துப்பகலில் சந்திரன் சூரியனை மறைப்பது ; கேது என்னும் கோளால் சூரியன் பற்றப்படுகை . |
சூரியகிரணம் | கதிரவனிலிருந்து வரும் கதிர் |
சூரியகுலம் | சூரியனைக் குலமுதல்வனாகக்கொண்ட அரசகுலம் . |
சூரியகௌளி | இளநீர்வகை . |
சூரியசரம் | காண்க : சூரியகலை . |
சூரியதிசை | கிழக்கு , சூரியனுக்குரிய திக்கு . |
சூரியநாராயணன் | சூரியமண்டல மத்தியில் வசிப்பவராகக் கருதப்படும் திருமால் . |
சூரியப்படாம் | விருதுவகை . |
சூரியப்பிரபை | வெயில் ; மகளிர் தலையணிவகை ; சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி . |
சூரியப்பிரவை | வெயில் ; மகளிர் தலையணிவகை ; சூரியன் வடிவாக அமைந்த ஊர்தி . |
சூரியபிம்பம் | சூரியவட்டம் . |
சூரியபுடம் | வெயிலில் உலர்த்தும் மருந்துப்புடம் ; வானத்தில் சூரியனது உண்மைநிலை . |
சூரியமண்டலம் | சூரியலோகம் ; சூரியவட்டம் . |
சூரியவாதி | கதிரவனையே கடவுளாகக் கொள்ளும் சமயத்தான் . |
சூரியன் | ஞாயிறு ; உபநிடதங்களுள் ஒன்று ; சோழன் ; செவ்வெருக்கஞ்செடி ; செம்புமலை . |
சூரியை | சூரியன்தேவி ; புதுமணப்பெண் . |
சூரியோதயம் | சூரியன் உதித்தல் ; உதயகாலம் , அதிகாலை . |
சூரினர் | தெய்வப் பெண்கள் . |
சூருமம் | தருப்பைப்புல் ; ஒருமணப்புல்வகை . |
சூரை | ஒரு செடிவகை ; மணிபிடியாப் பயிர் ; பயிரில் விழும் நோய்வகை ; ஒரு மீன்வகை ; தூதுளைக்கொடி ; கருஞ்சூரை . |
சூல் | கருப்பம் ; முட்டை ; மூன்று முனையுடைய ஆயுதவகை ; மேகம் நீர் நிரம்பியிருக்கை ; பயிர்க்கரு ; யானை , குதிரை முதலியவற்றிற்கு இடும் அலங்காரப் போர்வை . |
சூல்காணுதல் | முதல்கருப்பந் தரித்திருக்கும் பெண்ணைத் தின்பண்டங்களோடு சென்று பார்த்தல் . |
சூலக்கல் | சிவன்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ளகல் . |
சூலக்காளை | சிவன்கோயிலுக்காகச் சூலம் பொறித்து விடப்பட்ட காளை ; கண்டபடி திரிபவன் . |
சூலக்குறடு | காண்க : சூட்டுக்கோல் . |
சூலத்திசை | வாரசூலையுள்ள திக்கு . |
சூலபாணி | சிவபெருமான் . |
சூலம் | மூன்று முனைகளையுடைய ஆயுதவகை ; இடிதாங்கி ; கழு ; இரேவதிநாள் ; காண்க : வாரசூலை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று ; மாட்டுக்கு இடும் சூட்டுக்குறி ; சூலைநோய் வகை . |
சூலல் | தோண்டுதல் . |
சூலவேல் | சூலாயுதம் ; கழுமுள் . |
சூலானோன் | சவர்க்காரம் . |
சூலி | கருவுற்றவள் ; சூலப்படையை உடைய சிவபிரான் ; சூலப்படை தரித்த துர்க்கை ; காண்க : சதுரக்கள்ளி . |
சூலிகம் | கோழி . |
சூலிகை | இடிதாங்கி . |
சூலினி | சூலத்தைஏந்தியபார்வதி ; வெற்றிலை ; சவர்க்காரம் . |
சூலுதல் | தோண்டுதல் ; கருவுறுதல் ; அறுத்தல் . |
சூலை | காலந்தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் ; வயிற்றுவலி நோய் ; காண்க : வாரசூலை . |
சூலைக்கட்டி | புணர்ச்சியால் உண்டாகும் புண்கட்டி . |
![]() |
![]() |
![]() |