செந்துருக்கம் முதல் - செம்பஞ்சி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செந்துருக்கம் ஒரு செடிவகை .
செந்துருத்தி செம்பாலைப் பண்களுள் ஒன்று .
செந்துருதி குறுஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று .
செந்துளிர் செந்நிறத் தளிர் .
செந்துறை பாடற்கேற்ற பாட்டு .
செந்தூக்கு நேராகத் தூக்குகை ; செங்குத்து ; தாளவகை : ஒருபாட்டுவகை .
செந்தூரத்தாசி கந்தகம் .
செந்தூரம் சிவந்த பொடி .
செந்தூள் போர்க்களத்து இரத்தமயமானதுகள் .
செந்தூள்கருந்தூள் பறத்தல் சண்டை முதலியவற்றின் கடுமையை உணர்த்தும் குறிப்பு .
செந்தேன் உயர்ந்த தேன் ; அறுவைப் புகைக்கும் நறுமணப்பொருள்களுள் ஒன்று .
செந்தொட்டி காஞ்சொறிக்கொடி .
செந்தொடை சிவந்த மாலை ; மோனை எதுகை முதலியன அமைக்கப்படாத பாட்டு ; அம்பு முதலியவற்றை எய்யும் குறி .
செந்தொடையன் செந்நிறப் பூமாலையை அணிந்தவனான வயிரவன் .
செந்தோன்றி காண்க : செங்கழுநீர் ; காந்தள் .
செந்நகரை ஒரு மரவகை ; ஒரு கடல்மீன்வகை .
செந்நாகம் செந்நிறமுள்ள நாகப்பாம்புவகை ; கேது .
செந்நாடிக்கா மூக்கிரட்டைக்கொடி .
செந்நாப்போதர் திருவள்ளுவர் .
செந்நாயுருவி ஒரு நாயுருவிச்செடிவகை .
செந்நிலம் செந்தரை ; போர்க்களம் .
செந்நிலை கூத்துநிலைவகை .
செந்நிறக்கல் மாமிசச்சிலை .
செந்நிறுவுதல் நேர்வழியில் நிறுத்துதல் .
செந்நீர் இரத்தம் ; புதுவெள்ளம் ; தெளிந்த நீர் ; சுரோணிதம் ; சாயச்சரக்கு .
செந்நீர்ப்பவளம் சிவந்த பவளம் .
செந்நீர்முத்து செந்நீரோட்டமுள்ள முத்து .
செந்நெல் செஞ்சாலிநெல் ; நன்னீர் மீன்வகை .
செந்நெறி நல்வழி ; சன்மார்க்கம் .
செப்பஞ்செய்தல் ஒழுங்குபடுத்துதல் ; புதைத்தல் .
செப்பட்டை பறவைச் சிறகு ; தோட்பட்டை ; தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் ; கன்னம் .
செப்பட செவ்விதாக .
செப்படி காண்க : செப்படிவித்தை .
செப்படித்தல் செப்படிவித்தை செய்தல் .
செப்படிவித்தை செப்பைக்கொண்டு செய்யும் ஒருவகைத் தந்திரவித்தை ; தந்திரம் ; சூழ்ச்சியான செயல் ; சிக்கனம் .
செப்பம் செவ்வை ; நடுநிலை ; சீர்திருத்தம் ; பாதுகாப்பு ; செவ்விய வழி ; தெரு ; நெஞ்சு ; மனநிறைவு ; ஆயத்தம் .
செப்பமிடுதல் காண்க : செப்பஞ்செய்தல் .
செப்பல் சொல்லுகை ; காண்க : செப்பலோசை ; செந்நிறம் .
செப்பல்பிரிதல் பொழுதுவிடிதல் .
செப்பலி கடல்மீன்வகை .
செப்பலோசை வெண்பாவுக்குரிய ஓசை .
செப்பலோடுதல் செந்நிறங்கொள்ளுதல் .
செப்பனிடுதல் சீர்திருத்துதல் ; சமப்படுத்துதல் ; மெருகிடுதல் .
செப்பாடு நேர்மை .
செப்பிக்கூறுதல் விடைசொல்லுதல் .
செப்பிடில் காண்க : சடாமாஞ்சில் .
செப்பிடுவித்தை காண்க : செப்படிவித்தை .
செப்பியம் திரும்பத்திரும்ப உச்சரித்தல் .
செப்பிலை காண்க : தும்பை .
செப்பு சொல் ; விடை ; செம்பு ; சிமிழ் ; நீர் வைக்கும் குடுவை ; சிறுமியர் விளையாட்டுப் பாத்திரம் ; இடுப்பு .
செப்புக்கட்டை பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை .
செப்புக்குடம் செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் .
செப்புக்கோட்டை செம்பினாலியன்ற இராவணன் கோட்டை .
செப்புச்சிலை செம்பாலான உருவம் ; மாந்தளிர்க்கல் .
செப்புத்திருமேனி செம்பினாலாகிய சிலை .
செப்புத்துறை இடுகாடு .
செப்புதல் சொல்லுதல் ; விடைசொல்லுதல் .
செப்புநெருஞ்சி சிவப்பு நெருஞ்சிப்பூடு .
செப்புப்பட்டயம் செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் .
செப்புப்பத்திரம் செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் .
செப்புவழு விடைக்குற்றம் .
செப்பேடு காண்க : செப்புப்பட்டயம் .
செப்போடு செம்பாலாகிய ஓடு .
செபத்தியானம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கடவுளை நினைந்திருத்தல் .
செபம் மந்திரமோதல் ; வேண்டுதல் ; சூழ்ச்சி .
செபமாலை செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை .
செபவடம் செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை .
செபித்தல் மந்ததிரம் சொல்லுதல் ; வேண்டுதல் .
செம் சிவப்பு ; செம்மை .
செம்பக்கால் வெற்றிலைக்கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம் .
செம்பகம் காண்க : செண்பகம் .
செம்பகை யாழ்க்குற்றம் நான்கனுள் ஒன்று . இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை .
செம்பசலை சிவப்புப் பசளைக்கீரை .
செம்பசளை சிவப்புப் பசளைக்கீரை .
செம்பஞ்சி ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு .