செம்பஞ்சு முதல் - செம்மல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செம்பஞ்சு ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு .
செம்பஞ்சுக்குழம்பு மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை .
செம்பஞ்சூட்டுதல் மகளிர் அடிகட்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் .
செம்பட்டை சிவந்த மயிர் ; வாத்தியவகை .
செம்படத்தி செம்படவப்பெண் .
செம்படவன் மீன்வலைஞன் .
செம்படாம் சிவப்புச் சீலை .
செம்படை சிவந்த மயிர் .
செம்படைச்சி காண்க : செம்படத்தி .
செம்பத்தி உண்மையான அன்பு .
செம்பரத்தை ஒரு செடிவகை .
செம்பருத்தி உயர்ரகப் பூணூல் நூற்க உதவும் பருத்திவகை ; செம்பஞ்சு ; பருத்திவகை .
செம்பருந்து கருடன் .
செம்பலகை செங்கல் .
செம்பலா இலவங்கவகை .
செம்பவளம் வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை ; உருண்டை வடிவுள்ள பவளவகை .
செம்பளித்தல் அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் .
செம்பிளித்தல் அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல் .
செம்பாகம் சரிபாதி ; இனிமை ; நல்ல பக்குவம் .
செம்பாட்டுத்தரை செம்மண் பூமி .
செம்பாட்டுநிலம் செம்மண் பூமி .
செம்பாட்டுமண் செம்மண் பூமி .
செம்பாடு செம்மண் பூமி ; செம்மண் படிந்தது .
செம்பாதி சரிபாதி .
செம்பாம்பு கேது .
செம்பால் காண்க : சுரோணிதம் ; சரிபாதி .
செம்பால்பாய்தல் கட்டிளமையால் உடலில் இரத்த ஓட்டம் தெரியும்படியா யிருத்தல் .
செம்பாலை பாலைப் பண்வகை .
செம்பாளை சம்பா நெல்வகை ; சிவப்பு நெல்வகை .
செம்பி கருவண்டு ; மருதோன்றி ; சிவப்பி .
செம்பித்தரோகம் பித்தநோய்வகை .
செம்பியன் முதலேழு வள்ளல்களுள் ஒருவன் ; சிபியின் வழி வந்த சோழன் .
செம்பியன் தமிழ்ப்பேரரையன் பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று .
செம்பியன் தமிழவேள் பிற்காலத்துச் சோழர்களால் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த பட்டங்களுள் ஒன்று .
செம்பிற்பொருப்பு செம்புத் தாதுள்ள பொதியமலை .
செம்பிறப்பு அறுவகைப் பிறப்பினுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு .
செம்பின்பச்சை நாகப்பச்சை .
செம்பு தாமிரம் ; பொன் ; செம்பினாலான பாத்திரவகை ; மூன்றேகால் சேர்கொண்ட ஒரு முகத்தலளவு ; தூர்தல் .
செம்புகம் செம்போத்துப்பறவை ; நரி .
செம்புகொட்டி செம்புவேலை செய்யும் சாதியான் , கன்னான் .
செம்புண் ஆறும் நிலையில் உள்ள புண் ; இரத்ததாற் செந்நிறமாயிருக்கும் புண் .
செம்புண்ணீர் இரத்தம் .
செம்புத்தீக்கல் இரும்புஞ் செம்புங் கலந்த உலோகக்கட்டி .
செம்புப்பற்று பொன்னிற் கலந்த செம்பு .
செம்புமணல் செம்பு கலந்த மணல் .
செம்புமலை செம்புத் தாதுகளைத் தன்னிடத்தேகொண்ட மலை .
செம்புயிர் கீழ்மக்கள் , விலங்கு இவற்றின் உயிர் .
செம்புலம் செழிப்பான நிலம் ; போர்க்களம் ; பாலைநிலம் ; சுடுகாடு ; காண்க : செம்புமலை .
செம்புலியாடு செம்மறியாடு .
செம்புவரை காண்க : செம்பிற்பொருப்பு .
செம்புள் கருடன் .
செம்புளிச்சை காண்க : தேவதாரு ; மரவகை .
செம்புனல் இரத்தம் ; புதுவெள்ள நீர் ; சிவந்த நீர் .
செம்பூ செந்நிறப் பூவுள்ள செடிவகை .
செம்பூறல் செம்பில் உண்டாகும் களிம்பு .
செம்பை காண்க : சிற்றகத்தி ; ஒரு மரவகை ; நெற்பயிரின் நோய்வகை .
செம்பொடி பூந்துகள் , மகரந்தப்பொடி ; செம்மணல் ; நீலக்கல் ; சிந்தூரம் .
செம்பொத்தி ஆடைவகை .
செம்பொருள் உண்மைப்பொருள் ; நேர்பொருள் ; சிறந்தபொருள் ; முதற்பொருளான கடவுள் ; அறம் .
செம்பொருளங்கதம் வாய் கரவாது சொல்லிய வசைப்பாட்டு .
செம்பொறி அரசமுத்திரை .
செம்பொன் சிறந்த பொன் .
செம்பொன்வரை செம்பொன்மயமான மேருமலை .
செம்போக்கு உயர் பதவிகளில் உயிர் செல்லல் .
செம்போத்து ஒரு பறவைவகை ; கள்ளிக் காக்கை .
செம்போதகர் சமணருள் ஒரு பகுதியார் .
செம்மகள் திருமகள் ; அனுபவமற்ற பெண் .
செம்மட்டி மரமஞ்சள் ; ஒரு சிப்பிவகை .
செம்மண் சிவந்த மண் .
செம்மண்பட்டை நல்ல நாள்களில் திண்ணை முதலியவற்றில் சுண்ணாம்புப் பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம் .
செம்மணத்தி செம்புளிச்சை .
செம்மணி மாணிக்கம் ; சிவப்புமணி ; கெம்புக்கல் ; கண்ணின் கருமணியைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மணி .
செம்மரம் அழிஞ்சல்மரம் ; ஒருமரவகை ; காண்க : மஞ்சாடி ; தேவதாரு ; செஞ்சந்தனம் .
செம்மருதர் நல்ல உழவர்கள் .
செம்மல் தலைமை ; வலிமை ; தருக்கு ; பெருமையிற் சிறந்தோன் ; இறைவன் ; சிவன் ; அருகன் ; புதல்வன் ; சாதிபத்திரி ; முல்லைப்பூவகை ; பழம்வகை ; வாடாப்பூ ; நீர் .