சேர்ச்சி முதல் - சேவற்கொடியோன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சேர்ச்சி காண்க : சேர்க்கை .
சேர்த்தல் இயைத்தல் ; தொடுத்தல் ; கலத்தல் ; புணரச்செய்தல் ; கூட்டிக்கொள்ளுதல் ; கட்டுதல் ; இடைச்செருகுதல் ; இலை பரிமாறுதல் ; திரட்டுதல் ; ஈட்டுதல் ; தனதாக்குதல் ; அடைவித்தல் .
சேர்த்தி கூடுகை ; கலப்புப்பொருள் ; கூட்டுறவு ; புணர்ச்சி ; ஐக்கியம் ; இசைவு ; பொருத்தம் ; ஒப்பு ; சொற்புணர்ப்பு ; கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம் .
சேர்த்திக்கை கூடுகை ; கலப்புப்பொருள் ; இசைவு ; ஒப்பு ; கூட்டுறவு ; ஐக்கியம் ; புணர்ச்சி .
சேர்த்துக்கொள்ளுதல் ஏற்றுக்கொள்ளுதல் ; கணக்கிற்பதிதல் ; கைப்பற்றுதல் .
சேர்த்துதல் காண்க : சேர்த்தல் .
சேர்த்துப்பிடித்தல் வசப்படுத்துதல் ; சிக்கனம் பண்ணுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் ; வைப்பு வைத்தல் ; கைப்பற்றுதல் .
சேர்த்துவைத்தல் சொத்துச் சேர்த்தல் ; சமாதானப்படுத்துதல் .
சேர்தல் ஒன்றுகூடுதல் ; இடைவிடாது நினைத்தல் ; கலத்தல் ; சம்பந்தப்படுதல் ; நட்பாதல் ; இயைதல் ; உரித்தாதல் ; சேகரிக்கப்படுதல் ; திரளுதல் ; செறிதல் ; கிடத்தல் ; உளதாதல் ; செல்லுதல் ; கூடுதல் ; பொருந்துதல் ; புணர்தல் ; பெறுதல் ; சென்றடைதல் ; ஒப்பாதல் ; நேசித்தல் .
சேர்ந்தகை கூட்டாளி .
சேர்ந்தகைமை கூட்டுறவு .
சேர்ந்தலை புணர்ச்சி ; கூட்டுறவு .
சேர்ந்தார் அடைக்கலமடைந்தவர் ; நண்பர் ; உறவினர் .
சேர்ந்தார்கொல்லி தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு .
சேர்ந்தாரைக்கொல்லி தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு .
சேர்ப்பன் நெய்தல்நிலத் தலைவன் ; வருணன் .
சேர்ப்பு இடம் ; வாழ்விடம் ; கடற்கரை ; கலப்புப்பொருள் ; பிற்சேர்க்கை ; கப்பலிலிருந்து சரக்கிறக்கும் பாலம் .
சேர்ப்பூட்டு இணையொத்தது .
சேர்பந்து கசை .
சேர்பு வாழ்விடம் ; வீடு ; காண்க : சேர்மானம் .
சேர்மானம் இணைப்பு ; கூடுகை ; கலப்புப் பொருள் ; ஐக்கியம் ; கூட்டுறவு ; புணர்ச்சி ; கலக்கும் பொருள் .
சேர்விடம் வாழுமிடம் ; துயிலிடம் ; திரளுகை .
சேர்வு அடைதல் ; வாழிடம் ; திரட்சி ; ஒன்று சேர்கை ; ஊர் ; கூட்டம் .
சேர்வை கூட்டுறவு ; கலவை ; மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச் சரக்கு ; சீலையிற் பூசியிடும் மருந்து ; உலோகக்கலப்பு ; மகளிர் காதணிவகை ; கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக்கலயத்துடன் இணைக்கை ; சேனை ; கூட்டம் ; இருபது வெற்றிலைக்கட்டு ; கூத்துவகை ; வணக்கம் ; பற்று ; சில வகுப்பாரின் பட்டப் பெயர்வகை .
சேர்வைக்காரன் படைத்தலைவன் ; பட்டப்பெயர்வகை .
சேர்வைக்கால் ஏணியைத் தாங்குங் கால் ; தட்டைத் தாங்கி நிற்கும் பீடக்கால் .
சேர்வைகட்டுதல் மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல் ; வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக் கால்களை இரட்டையிரட்டையாசச் சேர்த்துக் கட்டுதல் .
சேர்வைகாரன் கள்ளர் , மறவர் , அகம்படியர் , வன்னியர்க்கு வழங்கும் பட்டப்பெயர்வகை .
சேர்வைச்சந்தனம் கலவைச் சந்தனம் .
சேர்வையணி வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் கலவையணி .
சேர அணித்தாக ; முழுதும் ; கூட .
சேரக்கட்டுதல் சேர்த்தல் ; செலுத்துதல் .
சேரங்கை காண்க : சிறங்கை .
சேரடி நெற்கூடு நிற்குமிடம் .
சேரமண்டலம் சேரநாடு .
சேரமான் சேரநாட்டரசன் .
சேரல் சேரநாட்டரசன் .
சேரலன் தமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன் ; பகைவன் .
சேரலி ஒரு நெல்வகை .
சேரன் காண்க : சேரமான் .
சேரா கள் .
சேராங்கொட்டை காண்க : சேங்கொட்டை .
சேராச்சேர்த்தி இசைவற்ற சேர்க்கை ; தகாத கூட்டுறவு ; தாறுமாறு ; எதிர்பாராத சந்திப்பு .
சேரார் பகைவர் .
சேரான் சேங்கொட்டைமரம் .
சேரி ஊர் ; முல்லைநிலத்தூர் ; தெரு ; பறைச்சேரி .
சேரிகை ஊர் .
சேரிடுதல் பிணைத்தல் .
சேரிடையாக இடையீடின்றித் தொடர்ச்சியாக .
சேரிப்பரத்தை ஊர்ப்புறச்சேரியில் வாழும் பரத்தை .
சேரிமடை கழிவு வாய்க்கால் .
சேருகம் நாகணவாய்ப்புள் .
சேரை சிறங்கை ; காண்க : சாரை .
சேல் கெண்டைமீன்வகை .
சேலகம் கோரைக்கிழங்கு .
சேலம் ஆடை ; ஓரூர் .
சேலவன் மீனாகப் பிறப்பெடுத்த திருமால் .
சேலியால் இலாமிச்சைப்புல் .
சேலேகம் சந்தனமரம் ; சிந்தூரம் .
சேலை புடைவை , மகளிர் சீலை ; ஆடை ; அசோகமரம் ; முழுத் துணியின் பாதி .
சேலைபோடுதல் கைம்பெண்ணானவட்குக் கோடிபோடுதல் .
சேலோதம் சந்தனமரம் .
சேவகம் ஊழியம் ; வீரம் ; யானைக்கூடம் ; உறக்கம் ; காண்க : பேயுள்ளி .
சேவகமெழுதுதல் படையில் அமர்த்துதல் .
சேவகமோடி போர்வீரனுக்குரிய கருவிகள் ; வீரம் ; வீரனுக்குரிய மாதிரிகை .
சேவகன் வீரன் ; ஊழியன் ; காண்க : சேவகன்பூடு .
சேவகன்பூடு காண்க : சிற்றாமுட்டி , காந்தள் ; சிறுபுள்ளடி .
சேவகனார் வீரத் தெய்வமாகிய ஐயனார் .
சேவடி சிவந்த பாதம் .
சேவதக்குதல் எருதுக்கு விதையடித்தல் .
சேவம் பாம்பு ; ஆண்குறி ; உயரம் .
சேவல் மயில் ஒழிந்த பறவைகளின் ஆண் ; கோழியின் ஆண் ; ஆண் அன்னம் ; முருகக் கடவுள் ஊர்தியாகிய மயில் ; காவல் ; ஆண் குதிரை ; சேறு .
சேவலங்கொடியோன் சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் .
சேவலோன் சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் .
சேவற்கொடியோன் சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள் .