சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சொ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஓ) . |
சொக்கட்டாய் | எளிதாக . |
சொக்கட்டான் | ஒரு புடைவைவகை ; கவறு உருட்டியாடுந் தாய விளையாட்டுவகை . |
சொக்கட்டான்கவறு | சொக்கட்டான் ஆட்டத்தில் தாயங் குறிக்க உருட்டும் வட்டு . |
சொக்கட்டான்பந்தல் | சொக்கட்டான் மணைபோற் செய்த பந்தல் . |
சொக்கத்தாண்டவம் | சுத்த நிருத்தம் . |
சொக்கதேவன் | கூகைக்கட்டு நோய் ; காண்க : கூகை . |
சொக்கநாதன் | அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள் . |
சொக்கநாயகன் | அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள் . |
சொக்கப்பனை | கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு . |
சொக்கம் | தூய்மை ; சுத்த நிருத்தம் ; கெம்புக்கல் ; துறக்கம் ; களவு . |
சொக்கலி | சிறுபசளைக்கொடி . |
சொக்கலிங்கம் | காண்க : சொக்கநாதன் . |
சொக்கவெள்ளி | தூயவெள்ளி ; விடிவெள்ளி . |
சொக்கறை | கன்னம் முதலியவற்றில் விழுங்குழி ; சிறிய அடைப்பு ; மதில் முதலியவற்றின் துளை . |
சொக்கன் | அழகன் ; சிவன் ; வணிகரின் கையாள் ; குரங்கு ; மூடன் ; வேலைக்காரச் சிறுவன் . |
சொக்கா | காண்க : சொக்காய் . |
சொக்காக்கீரை | ஒரு கீரைவகை . |
சொக்காய் | சட்டை . |
சொக்காரன் | சொத்தின் உரிமையாளனான தாயாதி ; சகலன் . |
சொக்காலி | சிறுதுளைப்பூண்டு . |
சொக்காளி | சிறுதுளைப்பூண்டு . |
சொக்கிடுதல் | மயக்கப்பொடி தூவுதல் . |
சொக்கிடுவித்தை | காண்க : சொக்குவித்தை . |
சொக்கு | அழகு ; மயக்கம் ; வயப்படுகை ; சொக்கநாதன் ; கன்னம் ; தூய்மை ; பொன் . |
சொக்குதல் | மயங்குதல் ; மனம் பிறர்வயமாதல் ; பிறர் மயங்குமாறு ஒழுகுதல் ; கண்ணுறக்கமாதல் ; குழிவு அல்லது வளைவு விழுதல் . |
சொக்குப்பொடி | பிறரை மயக்கித் தன்வயப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி . |
சொக்குவித்தை | மயக்குவித்தை . |
சொகினம் | நிமித்தம் . |
சொகுசா | துத்தமும் செம்பும் கலந்த உலோகம் . |
சொகுசு | நேர்த்தி ; இன்பம் ; சிறப்பு . |
சொகுசுக்காரன் | இன்பமாயிருப்பவன் . |
சொங்காரன் | காண்க : சொக்காரன் . |
சொங்கு | குற்றம் . |
சொச்சம் | மிச்சம் ; மாசின்மை ; காண்க : சில்வானம் ; கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி . |
சொட்டம் | குற்றமுள்ளவன் . |
சொட்டா | ஒரு வாள்வகை . |
சொட்டு | குட்டு ; குற்றம் ; குற்றங்குறை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு ; சுன்னம் . |
சொட்டுச்சொட்டெனல் | துளித்தற்குறிப்பு . |
சொட்டுச்சொல் | பழிச்சொல் . |
சொட்டுதல் | துளித்தல் ; கொத்துதல் ; வஞ்சித்தல் ; பறித்தல் ; குட்டுதல் ; பால் கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல் ; அடித்தல் . |
சொட்டுப்பால் | இறுகின பால் . |
சொட்டுப்போடுதல் | அடிகொடுத்தல் ; குறைகூறுதல் ; தவறுதல் . |
சொட்டுவைத்தல் | குட்டுதல் ; நிந்தைக்குப் பாத்திரமாக்குதல் . |
சொட்டை | பள்ளம் ; சுருக்கு முதலியவற்றை மாட்டும் இடம் ; வளைதடி ; வளைந்த வாள் ; வளைவு ; பழிச்சொல் ; ஏளனம் ; வழுக்கைத் தலை ; தலைப்பொடுகு ; சொற்சித்திரம் ; பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று . |
சொட்டைச்சொல் | பழிச்சொல் ; ஏளனம் . |
சொட்டைசொள்ளை | குற்றங்குறை . |
சொட்டைத்தலை | வழுக்கைவிழுந்த தலை . |
சொட்டையாளன் | படைவீரன் . |
சொட்டைவாள் | வளைந்த வாள்வகை . |
சொட்டைவிழுதல் | தலையில் வழுக்கை விழுதல் ; அதுங்கிப்போதல் . |
சொடக்கு | நெட்டி ; சோம்பற்றன்மை ; கைந்நொடிப்பு ; கைந்நொடிப்பொழுது ; துளைக்கருவி ; கிலுகிலுப்பைச் செடி ; கடுகு . |
சொடக்குதல் | நெட்டிவாங்குதல் ; கைந்நொடித்தல் ; பேன் குத்துதல் . |
சொடக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சொடி | சுறுசுறுப்பு . |
சொடித்தல் | குறைவாய் விற்றல் . |
சொடிதல் | பயிர்கள் வெயிலில் வாடுதல் ; குழைதல் . |
சொடுகு | காண்க : சொட்டை . |
சொடுதலை | வாயகன்ற பாத்திரவகை . |
சொண்டடித்தல் | பேசுதற்கு உதடு குவித்தசைத்தல் . |
சொண்டறை | இழிஞன் , புல்லன் . |
சொண்டன் | செருக்கண் . |
சொண்டி | சுக்கு . |
சொண்டிலி | இழிகுணத்தன் . |
சொண்டு | குழிவு ; பறவைமூக்கு ; உதடு ; தடித்த உதடு ; கனத்த பாத்திரவிளிம்பு ; அற்பன் ; தலையழுக்கு ; பொடுகு ; ஆயுத நுனி ; உத்தியோகம் . |
சொண்டுக்கதை | உணவுக்காகச் சொல்லுங் கதை ; பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை . |
சொண்டுக்காரன் | தடித்த உதடன் . |
சொண்டுசொல் | துன்புறுத்தும் மொழி . |
சொண்டுத்தீன் | அடிக்கடி கொள்ளும் சுவையுணவு . |
சொண்டுப்பானை | கனத்த விளிம்புடைய பானை . |
சொண்டுபண்ணுதல் | இகழ்ச்சி பண்ணுதல் . |
சொண்டுபேசுதல் | நிந்தித்தல் . |
சொண்டுவிற்றல் | புறங்கூறுதல் . |
சொணை | காண்க : சுணை . |
சொணைப்பு | காண்க : சுணை . |
![]() |
![]() |