சொத்தலி முதல் - சொல்லிழுக்கு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சொத்தலி கொட்டையில்லாப் பனங்காய் .
சொத்தி உடற்குறை ; நொண்டி .
சொத்தியன் நொண்டி .
சொத்து உடைமை ; பொன் ; உடற்குறை ; உடலிற் பூசும் செம்பசை .
சொத்துக்காரன் செல்வன் ; பொருளுக்கு உரியவன் .
சொத்துவம் பொருள் உரிமை ; காண்க : சுயம்பு .
சொத்துவைத்தல் தொகுத்துவைத்தல் ; புதல்வன் முதலியவர்க்குச் சொத்துச்சேர்த்து வைத்தல் .
சொத்தை புழு ; வண்டு முதலியன அரித்தது ; ஊனம் ; சீர்கேடு ; மெலிந்த உயிரி ; கன்னம் ; இலங்கைமரம் .
சொத்தைப்பல் கெட்டுப்போன பல் .
சொத்தையிற்போடுதல் கன்னத்தில் அடித்தல் .
சொதசொதெனல் கசிதற்குறிப்பு .
சொதி தேங்காய்ப்பால் அவியல் .
சொதை உடைமை ; பொன் ; இரட்டை .
சொந்தக்கம்பத்தம் தானே பண்ணைவைத்துச் செய்யும் வேளாண்மை .
சொந்தக்காரன் உரியவன் ; உறவினன் .
சொந்தம் தனக்குரியது ; நெருங்கிய உறவு .
சொப்பட நன்றாக .
சொப்பம் ஒளியின்மை .
சொப்பனம் கனவு ; கனவுநிலை ; மாயத்தோற்றம் .
சொம் உடைமை ; சொத்து .
சொம்பு அழகு ; செம்பு .
சொம்மாளி உரிமைக்காரன் .
சொம்மெடுத்தல் வாரிசாகக் சொத்தையடைதல் .
சொயம் காண்க : சுயம் .
சொர்க்கம் தேவலோகம் ; துறக்கம் ; முலை .
சொர்க்கவாசல் திருமால் கோயில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை தெய்வத்திருமேனி எழுந்தருளுதற்கு உரியதும் , வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப்படாது அடைத்துகிடப்பதுமான தனிவாயில் .
சொர்ணக்கல் வைடூரியம் .
சொர்ணசீரகம் கரும்பு .
சொர்ணம் பொன் ; கோடகசாலைப்பூண்டு ; மிகுதி .
சொர்னம் பொன் ; நாணயம் .
சொரங்கம் ஏலத்தோல் .
சொரசத்தோரசி இலவங்கப்பட்டை .
சொரடு துறட்டி .
சொரணை காண்க : சுரணை .
சொரி தினவு .
சொரிதம் நலிதல் ஓசை .
சொரிதல் உதிர்தல் ; மழைபெய்தல் ; மிகுதல் ; பொழிதல் ; கொட்டுதல் ; மிகக் கொடுத்தல் ; காண்க : சொறிதல் , சுழலுதல் .
சொரிந்தளத்தல் பண்டங்களை மேலே தூவியளத்தல் .
சொரிமணல் கால்வைத்தவரை இறக்கியமிழ்த்தும் மணல் .
சொரிமித்தல் இணங்குதல் .
சொரிமிப்பு இணக்கம் .
சொரிவாய் குதிரிலிருந்து நெல் சொரிந்து விழுந்துளை .
சொரிவு ஈவு ; உதிர்வு ; பொழிவு .
சொருகுதலைப்பு சீலையின் உள்ளிடமான தலைப்பு .
சொருணை காண்க : சுரணை .
சொருவு உறை .
சொரூபம் இயற்கைத் தன்மை ; சாயல் ; வடிவம் ; குணம் குறியின்றி ஒன்றாய் யாவுங் கடந்த பதி ; அழகு , பரப்பிரம்மத்தின் சச்சிதானந்த ரூபமான உண்மை இயல்பு ; சிறப்பியல்பு .
சொரூபானுபூதி இறைவனுடன் உயிர் ஒன்றி நிற்கும் நிலை .
சொரூபி உருவுடையவன் ; கடவுள் .
சொரூபிகரித்தல் உருவமுடைத்தாதல் .
சொல் மொழி ; பேச்சு ; பழமொழி ; உறுதிமொழி ; புகழ் ; மந்திரம் ; சாபம் ; கட்டளை ; புத்திமதி ; பெயர்ச்சொல் ; வினைச்சொல் ; இடைச்சொல் , உரிச்சொல் என்னும் நால்வகை மொழிகள் ; தமிழ்மொழியில் உள்ள இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல் என நால்வகைப்பட்ட மொழிகள் ; நாடகவரங்கில் பேசப்படும் உட்சொல் , புறச்சொல் ; ஆகாசச் சொல் என்பன ; சத்தம் ; நாமகள் ; பேசச்செய்வதான கள் ; நெல் .
சொல்லணி சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை .
சொல்லதிகாரம் சொல்லின் பாகுபாடு , செய்கை முதலியவற்றைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி .
சொல்லழுத்தம் ஊன்றியுச்சரிக்கை ; வாக்குறுதி .
சொல்லற்பாடு சொல்லப்படுகை .
சொல்லறிகணை ஒலியைக் கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை .
சொல்லறிபுள் கிளி ; பூவை .
சொல்லுறுதி விலை முதலியவற்றை வரையறையாகக் கூறும் உறுதி .
சொல்லாக்கம் சொற்செய்து கொள்ளுகை .
சொல்லாகுபெயர் நூலுக்கு உரை செய்தான் என்பதில் உரையென்பது அம் மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர் .
சொல்லாட்டி திறமையாகப் பேசுபவள் .
சொல்லாட்டு பேச்சு .
சொல்லாடுதல் பேச்சில் வழங்குதல் ; பேசுதல் .
சொல்லாதசொல் தகாத சொல் , இடக்கர்ச்சொல் ; வசை .
சொல்லாமற்சொல்லுதல் தன் கருத்தைக் குறிப்பாகச் சொல்லுதல் .
சொல்லாழம் சொல்லின் பொருள் ஆழம் .
சொல்லாளி வாக்குறுதி யுள்ளவன் ; செல்வாக்குள்ளவன் ; சொற்றிறமையுள்ளவன் .
சொல்லானந்தம் பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லையமைத்துச் செய்யுள் செய்தல் .
சொல்லிக்காட்டுதல் பாடம் ஒப்பித்தல் ; விளக்கியறிவித்தல் ; குத்திக்காட்டுதல் .
சொல்லிக்கொடுத்தல் படிப்பித்தல் ; புத்திசொல்லுதல் ; அறிவித்தல் ; தூண்டிவிடுதல் .
சொல்லிக்கொள்ளுதல் விடைபெறுதல் ; ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல் ; முறையிடுதல் ; தனக்குள் பேசுதல் ; பாடங் கேட்டல் .
சொல்லிப்போடுதல் வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் .
சொல்லிவிடுதல் வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் .
சொல்லிவைத்தல் முன்னறிவித்தல் ; கற்பித்தல் .
சொல்லிழுக்கு சொற்குற்றம் .