சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தடி | கழி ; தண்டாயுதம் ; தடிக்கொம்பு ; மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம் ; அளவுகோல் ; ஆற்றங்கரை ; உலக்கை ; பருமைவில் ; வயல் ; பாத்தி ; தசை ; கருவாடு ; உடும்பு ; மிதுனராசி ; கீறற் கையெழுத்து ; மின்னல் . |
தடிக்கம்பு | கைக்கழி . |
தடிக்கொம்பு | தடிக்கம்பு ; மாட்டுக் குற்றவகை . |
தடிகாரன் | தடியையுடையவன் ; அழிப்பவன் . |
தடித்தல் | பெருத்தல் ; மிகுதல் ; உறைதல் ; திரளுதல் ; தாமதித்தல் ; மரத்தல் ; உரப்பாதல் ; வீங்குதல் , பருத்தல் , சித்தம் கடினமாதல் ; நச்சுக்கடியினால் தடிப்புண்டாதல் . |
தடித்தனம் | முருட்டுத்தனம் ; மட்டித்தனம் ; சோம்பேறித்தனம் . |
தடித்து | மின்னல் . |
தடிதல் | வெட்டுதல் ; அழித்தல் ; குறைத்தல் . |
தடிப்பம் | பருமை ; வீக்கம் . |
தடிப்பயல் | கொழுத்தவன் ; முரடன் ; மட்டி . |
தடிப்பு | கடினம் ; வீக்கம் ; உடல் தழும்பு ; பூரிப்பு ; கனம் ; செருக்கு . |
தடிபிணக்கு | அடிதடி . |
தடிபோடுதல் | நிலம் அளத்தல் ; தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல் ; இடையூறுசெய்தல் ; வருத்தி முயன்று ஒருவனை வேலையில் ஈடுபடும்படி செய்தல் . |
தடிமன் | நீர்க்கோவை ; பருமை . |
தடிமாடு | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
தடிமிண்டன் | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
தடியன் | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
தடிவு | வெட்டு ; அழிக்கை ; கொலை . |
தடினி | ஆறு . |
தடு | தடுக்கை . |
தடுக்கல் | தடை . |
தடுக்கிநிற்றல் | தடையால் நின்றுபோதல் . |
தடுக்கு | இடறுகை ; தட்டி ; பாய் ; தவிசு . |
தடுக்குத்தள்ளுதல் | இச்சகம் பேசுதல் . |
தடுக்குதல் | இடறுதல் ; தடைசெய்தல் . |
தடுக்குப்பாய் | சிறுபாய் . |
தடுக்குப்போடுதல் | உட்காரச் சிறுபாய் இடுதல் ; உபசரித்தல் . |
தடுத்தல் | தடைசெய்தல் ; அடைத்தல் ; வேறுபிரித்தல் ; நிறுத்திவைத்தல் ; அடக்குதல் ; விலக்குதல் ; மறுத்தல் ; எதிர்த்தல் ; பயனறச்செய்தல் ; எண்ணம் மாறச்செய்தல் . |
தடுத்தாள்தல் | திருத்தி வயமாக்குதல் . |
தடுத்தாளுதல் | திருத்தி வயமாக்குதல் . |
தடுப்பு | தடுக்கை ; தடை . |
தடுமன் | காண்க : தடிமன் . |
தடுமாற்றம் | ஒழுங்கின்மை ; தள்ளாடுகை ; மனக்கலக்கம் ; ஐயம் ; தவறு . |
தடுமாற்று | மனக்கலக்கம் . |
தடுமாறுத்தி | காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை . |
தடுமாறுதல் | ஒழுங்கீனமாதல் ; நெறியின்றிக் கலந்துகிடத்தல் ; மனங்கலங்குதல் ; துன்பத்துக்குள்ளாதல் ; ஐயுறுதல் ; தவறுதல் ; தள்ளாடுதல் . |
தடுமாறுவமம் | காண்க : எதிர்நிலையணி . |
தடுமாறுவமை | காண்க : எதிர்நிலையணி . |
தடை | தடுக்கை ; இடையூறு ; மறுப்பு ; கவசம் ; காப்பு ; காவல் ; வாசல் ; அணை ; அடைப்பு ; மந்திரத் தடை ; காண்க : தடல் ; எண்பதுபலங் கொண்ட அளவு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை . |
தடைஇய | திரண்ட ; பெருத்த . |
தடைக்கட்டு | நிறை அளவுகளைப் பரிசோதிக்கும் உத்தியோகம் . |
தடைகட்டுதல் | பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல் ; தராசில் எடைத் தடையமிடுதல் . |
தடைத்தல் | தடுத்தல் . |
தடைதல் | தடுத்தல் . |
தடைபடுத்துதல் | இடையூறுசெய்தல் ; காவற்படுத்துதல் ; தடுத்துதல் . |
தடைபண்ணுதல் | இடையூறுசெய்தல் ; காவற்படுத்துதல் ; தடுத்துதல் . |
தடையம் | அணிகலன்கள் ; தடை ; களவு முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பொருள் ; கத்திப்பிடி ; பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறை கல் ; தராசுதடை ; தட்டுமுட்டு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை . |
தடையறுத்தல் | மந்திரத் தடைநீக்குதல் ; இடையூறு விலக்குதல் . |
தடைவிடை | மறுப்பும் மாற்றமும் . |
தண் | குளிர்ச்சி ; அருள் . |
தண்கடற்சேர்ப்பன் | நெய்தல்நிலத் தலைவன் . |
தண்கதிர் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
தண்சுடர் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
தண்சுடர்க்கலையோன் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
தண்டக்காரன் | வேலைக்காரன் . |
தண்டக்கூற்றம் | வரிவகை . |
தண்டகநாடு | காண்க : தொண்டைநாடு . |
தண்டகம் | காண்க : தொண்டைநாடு ; தண்டகாரணியம் ; தண்டனை ; வடமொழியில் ஒருவகைச் செய்யுள் ; வீணாதண்டம் என்னும் முதுகெலும்பு ; அணிகலன் ; கரிக்குருவி ; குறுந்தறி ; நுரை . |
தண்டகமாலை | முந்நூறு வெண்பாக்களால் பாடும் ஒரு நூல்வகை . |
தண்டகன் | ஒரு மன்னன் ; யமன் . |
தண்டகாகம் | காண்க : செம்போத்து . |
தண்டகாரணியம் | தக்கணதேசத்தில் துறவியர் வசித்துவந்த ஒரு காடு . |
தண்டங்கொடுத்தல் | அபராதங்கட்டுதல் ; இழத்தல் ; இழப்புக்கு ஈடு கொடுத்தல் . |
தண்டச்சோறு | பயனற்றவனுக்கு இடும் உணவு ; இலவசமாகக் கொடுக்குஞ் சோறு ; காண்க : புல்லுருவி . |
தண்டசக்கரம் | குயவனது சுழற்றுகருவி . |
தண்டசம் | கருவிவகை . |
தண்டஞ்செய்தல் | நிலத்தில் வீழ்ந்து வணங்குதல் ; தண்டித்தல் ; கோலால் அளத்தல் . |
தண்டடித்தல் | பாளையம் அடித்துப் படை இறங்குதல் . |
தண்டத்தலைவன் | படைத்தலைவன் . |
தண்டத்தான் | யமன் . |
தண்டத்துக்கழுதல் | பொருள் முதலியவற்றைப் பயனின்றிக் கொடுத்தல் ; நட்டமாக இறுத்தல் . |
தண்டதரன் | யமன் ; கதாயுதத்தையுடைய வீமன் ; அரசன் ; குயவன் . |
தண்டதாசன் | அடிமை . |
தண்டநாயகம் | படைத்தலைமையாகிய வேலை . |
தண்டநாயகன் | படைத்தலைவன் ; தண்டனை செய்யும் அதிபதியாகிய அரசன் ; சிவகணத் தலைவனாகிய நந்தி . |
![]() |
![]() |
![]() |