தாராகிருகம் முதல் - தாலிபெருகுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தாராகிருகம் நீர்த்தாரையால் குளிர்ச்சி தருமாறு அமைத்த மாளிகை .
தாராங்கம் வாள் .
தாராங்குரம் ஆலங்கட்டி .
தாராசந்தானம் நீர்த்தாரைபோல் நீங்காது வரும் தொடர்ச்சி .
தாராட்டு தாலாட்டு .
தாராட்டுதல் தாலாட்டுதல் .
தாராடம் குதிரை ; மதயானை ; மேகம் ; சாதகப்புள் .
தாராதத்தம் நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுத்தல் .
தாராதரம் மேகம் .
தாராதாரம் மேகம் .
தாராதீனன் மனைவிக்கு அடங்கி நடப்போன் .
தாராபதம் வானம் .
தாராபதி உடுக்கள் தலைவனான சந்நிரன் ; தாரையின் கணவனான வியாழன் .
தாராபந்தி நாண்மீன் வரிசை .
தாராபலம் நாண்மீன் பலன் .
தாராமூக்கன் பாம்புவகை .
தாராவணி காற்று .
தாராளம் உதாரகுணம் ; கொடைப்பண்பு ; மிகுதி ; விசாலம் ; ஊக்கம் ; சாதுரியம் ; வெளிப்படை .
தாரி வழி ; முறைமை ; விலைவாசி ; அரிதாரம் ; வண்டு முதலியவற்றின் ஒலி ; தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை .
தாரிகம் தீர்வை .
தாரிசம் ஒப்பந்தம் ; நியாயமானது .
தாரிணி பூமி ; இலவமரம் .
தாரித்தல் உடைத்தாதல் ; பொறுத்தல் .
தாரித்திரம் காண்க : தரித்திரம் .
தாரித்திரியம் காண்க : தரித்திரம் .
தாரிப்பு உதவி ; மதிப்பு ; தாங்கிப்பேசுதல் ; மேம்படச்செய்தல் .
தாரிராட்டினம் தார்நூல் சுற்றும் இயந்திரம் .
தாரின்வாழ்நன் தார்நூலால் வாழ்பவனான நெசவுத் தொழிலாளன் .
தாரு மரம் ; மரக்கிளை ; மரத்துண்டு ; காண்க : தேவதாரு .
தாருகம் காண்க : தாருகாவனம் .
தாருகவனம் காண்க : தாருகாவனம் .
தாருகவிநாசினி தாருகனைக் கொன்ற காளி .
தாருகற்செற்றாள் தாருகனைக் கொன்ற காளி .
தாருகாரி தாருகனைக் கொன்ற காளி .
தாருகாவனம் ஒரு தபோவனம் , முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு .
தாருண்ணியம் இளம்பருவம் .
தாருணம் அச்சம் .
தாருணி காண்க : நத்தைச்சூரி .
தாருவனம் காண்க : தாருகாவனம் .
தாரை ஒழுங்கு ; வரிசை ; கோடு ; அடிச்சுவடு ; பெருமழை ; நேராக ஓடல் ; கண்மணி ; கண் ; கூர்மை ; சிறு சின்னம் ; சீலை ; நீர்வீசுங்கருவி ; மாட்டின் மலவாய்ப்பக்கம் ; நீர் ஒழுக்கு ; ஆயுதமடல் ; வயிரக்குணங்களுள் ஒன்று ; வழி ; ஆடையின் விலக்கிழை ; நீண்ட ஊதுங்குழல் ; எக்காளம் ; சக்கரப்படை ; விண்மீன் ; வாலியின் மனைவி ; வியாழன் மனைவி குதிரை நடை .
தாரைகவனி கோடு உள்ள ஆடைவகை .
தாரைப்பட்டு கோடுகள் அமைந்த பட்டுவகை .
தாரைமழுங்கல் வயிரக்குற்றங்களுள் ஒன்று .
தாரைவார்த்தல் நீர்வார்த்துக் கொடுத்தல் ; தொலைத்துவிடுதல் .
தால் நாக்கு ; காண்க : தாலாட்டு ; பிள்ளைத் தமிழ் உறுப்புகளுள் ஒன்று .
தாலகி கள் .
தாலகேதனன் பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் .
தாலகேது பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் .
தாலப்பருவம் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவன் தலைவியரைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி .
தாலப்புல் பனை .
தாலபத்திரம் பனையோலை ; காதில் அணியும் சுருளோலை .
தாலபத்திரி காண்க : மரமஞ்சள் .
தாலபீசநியாயம் பனை முந்தியதோ கொட்டை முந்தியதோ என்பதுபோல வழக்குரைக்கும் பீசாங்குர நியாயம் .
தாலபோதம் காண்க : ஆவிரை .
தாலம் பனைமரம் ; கூந்தற்பனைமரம் ; காண்க : மடல்மா ; கூந்தற்கமுகு ; அனுடநாள் ; பூமி ; நா ; தட்டம் ; உண்கலம் ; தால வடிவிலுள்ள யானைக்காது ; தேன் ; உலகம் ; மூன்று பிடிகொண்ட நீட்டலளவு .
தாலமூலி காண்க : நிலப்பனை .
தாலவ்வியம் இடையண்ணத்தில் இடைநாவின் முயற்சியால் பிறக்கும் எழுத்து .
தாலவட்டம் விசிறி ; யானைச்செவி ; யானை வால் ; பூமி .
தாலவிருந்தம் பேராலவட்டம் ; விசிறி .
தாலாட்டு குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக நாவசைத்துப் பாட்டுப்பாடுகை ; 'தாலேலோ' என்று முடியும் ஒருவகைப் பாட்டு ; தாலாட்டுவதற்கு ஏற்றதாய்ப் பாட்டுடைத் தலைவரின் சிறந்த செய்கைகளைத் தெரிவிக்கும் பல கண்ணிகளையுடைய ஒரு நூல்வகை .
தாலாட்டுதல் குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல் .
தாலாப்பு குளம் .
தாலாலம் பழிமொழி .
தாலி திருமணத்தில் கணவன் மனைவிக்குக் கழுத்தில் கட்டும் அடையாள உரு ; காண்க : ஐம்படைத்தாலி ; ஆமைத்தாலி ; சிறுவர் கழுத்திலணியும் ஐம்படைத்தாலி : கீழ்காய்நெல்லி ; மட்பாத்திரம் ; பனை ; பலகறை .
தாலிக்கட்டு திருமணம் .
தாலிக்கயிறு மாங்கலியம் கோப்பதற்குரிய மஞ்சள் பூசிய சரடு .
தாலிக்கொடி தாலி கோப்பதற்கான பொற்சரடு .
தாலிக்கொழுந்து ஆமைத்தாலி ; பனையின் வெண்குருத்தாலான அணிகலன் .
தாலிக்கோவை தாலியுருவோடு கோப்பதற்கான பலவகை உருக்கள் .
தாலிகட்டுதல் திருமணம்புரிதல் .
தாலிச்சரடு காண்க : தாலிக்கொடி .
தாலிப்பிச்சை சுமங்கலியாய் ஒருத்தி வாழுமாறு அவள் கணவன் உயிரைக் காப்பாற்றுகை .
தாலிப்பொட்டு வட்டமாகச் செய்த தாலியுரு .
தாலிபெருக்கிக்கட்டுகை கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு ; தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டில் கோத்தல் .
தாலிபெருகுதல் தாலிச்சரடு அறுதல் .