சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தீபபுட்பம் | காண்க : தீப்புட்பம் . |
தீபம் | விளக்கு ; விளக்குத்தண்டு ; சோதிநாள் ; சோதிமரம் ; தீவு . |
தீபம்பார்த்தல் | கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல் ; கோயில் முதலியவற்றில் இட்ட விளக்கை அவியாமல் பார்த்துக்கொள்ளுதல் . |
தீபமரம் | சோதிமரம் . |
தீபவதி | ஆறு . |
தீபவராடி | வராடிப் பண்வகை . |
தீபவிருட்சம் | தீபமரம் ; விளக்குத்தண்டு . |
தீபனம் | அதிகப்படுத்துவது ; பசி ; உணவு ; மஞ்சள் ; அதிக ஒளி ; படையல் ; செய்கை . |
தீபாந்தம் | பெருச்சாளி . |
தீபாந்தரம் | காண்க : தீவாந்தரம் . |
தீபாரத்தி | விளக்குக் காட்டிப் பூசித்தல் . |
தீபாராதனை | விளக்குக் காட்டிப் பூசித்தல் . |
தீபாவலி | தீபவரிசை ; விளக்குகளை வரிசையாய் ஏற்றிவைக்கும் பண்டிகை ; ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ; பொருளை இழந்து வறுமையடைதல் . |
தீபாவளி | தீபவரிசை ; விளக்குகளை வரிசையாய் ஏற்றிவைக்கும் பண்டிகை ; ஐப்பசி மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை ; பொருளை இழந்து வறுமையடைதல் . |
தீபி | புலி . |
தீபிகை | விளக்கு . |
தீபு | கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி . |
தீம் | இனிமை ; இனிய ; அமுது . |
தீம்பண்டம் | இனிய தின்பண்டம் . |
தீம்பன் | கீழ்மகன் . |
தீம்பி | தீயவள் . |
தீம்பு | தீது ; தாழ்வு ; கேடு ; குறும்பு . |
தீம்புகை | நறும்புகை . |
தீம்புழல் | இனிய பணியாரம் ; இலுப்பைப் பூ . |
தீம்புளி | கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி . |
தீம்பூ | ஒரு மரவகை ; மணப்பொருள்களுள் ஒன்று . |
தீமகம் | பகைவரைக் கொல்வதற்காகச் செய்யும் வேள்வியாகிய ஆபிசாரயாகம் . |
தீமடுத்தல் | நெருப்பு மூட்டுதல் ; நெருப்பிலிடுதல் . |
தீமிதி | வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல் . |
தீமிதித்திருவிழா | திரௌபதையம்மன் கோயிலில் அடியார்கள் வேண்டுதல்பொருட்டு நெருப்புக்குழியில் நடக்கும் திருவிழா . |
தீமுகம் | நெருப்பெரியுமிடம் , உலைவாய் . |
தீமுறை | நெருப்பில் செய்யும் ஓமச்சடங்கு . |
தீமூட்டு | தீ மூட்டுவதற்குரிய பொருள் . |
தீமூட்டுதல் | நெருப்புப் பற்றவைத்தல் ; கலக மூட்டுதல் . |
தீமேனியான் | தீப்போலும் உடல் நிறமுடைய சிவபெருமான் . |
தீமை | கொடுமை ; குற்றம் ; பாவச்செயல் ; குறும்பு ; இறப்பு ; முதலியன . |
தீமொழி | பொல்லாச்சொல் ; சாபம் . |
தீய்த்தல் | பயிர் முதலியன கருகச்செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் ; சுடுதல் . |
தீய்தல் | எரிந்துபோதல் ; பயிர் முதலியன கருகுதல் ; சோறு ; முதலியன காந்துதல் ; சீற்றம் கொள்ளுதல் ; அழிதல் . |
தீய்வு | பயிர் முதலியன பட்டுப்போகை ; பயிர் கரிந்துபோகை . |
தீய்வுகரிவு | பயிர் முதலியன பட்டுப்போகை ; பயிர் கரிந்துபோகை . |
தீய | தீமையான ; போலியான . |
தீயகம் | நெருப்புள்ள இடமான நரகம் . |
தீயது | இனியது ; தீங்குள்ளது ; சைவ உணவு . |
தீயபுட்பம் | காண்க : தீப்புட்பம் . |
தீயம் | இனிப்பு . |
தீயர் | கீழ்மக்கள் ; கொடியோர் ; வேடர் ; மலையாளச் சாதியாருள் ஒரு வகையர் . |
தீயல் | சமையலில் கருகினது ; பொரிக்கறி ; குழம்புவகை . |
தீயவை | தீய செயல் ; துன்பம் ; கீழ்மக்கள் கூட்டம் . |
தீயழல் | தீக்கொழுந்து . |
தீயளி | பசுங்காய் . |
தீயறம் | பொல்லாங்கு . |
தீயாக்கீரை | பொன்னாங்காணிக் கீரை . |
தீயாடி | ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான் . |
தீயார் | கொடியோர் ; கீழ்மக்கள் ; வேடர் . |
தீயினம் | தீயோர் கூட்டம் . |
தீயுண்புள் | காண்க : தீக்கோழி . |
தீயெச்சம் | அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம் . |
தீயொழுக்கம் | கெட்ட நடத்தை . |
தீயோம்புதல் | ஓமத்தீ வளர்த்தல் . |
தீயோர் | காண்க : தீயார் . |
தீர்க்கக்கிரீபம் | நீள்கழுத்துடைய ஒட்டகம் . |
தீர்க்கக்கிரீவம் | நீள்கழுத்துடைய ஒட்டகம் . |
தீர்க்ககணம் | வெண்சீரகம் . |
தீர்கக்கதி | ஒட்டகம் . |
தீர்க்ககந்தை | வெருகங்கிழங்கு . |
தீர்க்ககாண்டம் | கோரைப்புல் . |
தீர்க்கசங்கம் | ஒடட்டகம் ; நாரை . |
தீர்க்கசத்திரம் | பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் வேள்வி . |
தீர்க்கசதுரம் | கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டு உருவம் . |
தீர்க்கசந்தி | எழுத்து விகாரமுற்றுப் புணரும் வடமொழிப் புணர்ச்சியுள் ஒன்று . |
தீர்க்கசாலம் | ஆச்சாமரம் . |
தீர்க்கசிகுவம் | பாம்பு . |
தீர்க்கசீவம் | நீண்ட ஆயுள் . |
தீர்க்கசுமங்கலி | சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள் ; தேவரடியாள் . |
![]() |
![]() |
![]() |