தீர்க்கசுரம் முதல் - தீவட்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தீர்க்கசுரம் நெடில் ; நீண்டகாலம் இருக்கும் காய்ச்சல் .
தீர்க்கசுவாதம் பெருமூச்சு .
தீர்க்கதண்டம் தரையில் படிந்து வணங்குகை ; ஆமணக்கு .
தீர்க்கதண்டன் தரையில் கவிழ்ந்து வணங்கும் வணக்கமுறை .
தீர்க்கதரிசனம் மேல் வருவதை அறியும் அறிவு .
தீர்க்கதரிசி முக்கால நீகழ்ச்சியை உணர்பவன் .
தீர்க்கதரு பனைமரம் .
தீர்க்கதாரு நிலப்பனை .
தீர்க்கநாதம் சங்கு .
தீர்க்கநித்திரை நெடுந்தூக்கம் ; இறப்பு .
தீர்க்கபர்ணி நீண்ட இலையுள்ள வாழை .
தீர்க்கபாதபம் தென்னை .
தீர்க்கபாதவம் தென்னை .
தீர்க்கம் நீட்சி ; நெட்டுயிரெழுத்து ; முழுமை ; உறுதி ; அறிவுத் தெளிவும் கவர்ச்சியுமுள்ள தோற்றம் ; பெருமித்த தோற்றம் ; துணிகரச் செயல் ; தெளிவு ; சன்மலக்கினத்துக்கு 6 , 7 ஆம் இராசிகள் .
தீர்க்கம்போடுதல் நெட்டெழுத்தின் நீட்சிக்குறியிடுதல் .
தீர்க்கமாருதம் யானை .
தீர்க்கமூலம் முடக்கொற்றான் ; வில்வவகை ; தொட்டாற்சுருங்கி .
தீர்க்கயோசனை ஆழ்ந்த சிந்தனை .
தீர்க்கரசனம் பாம்பு .
தீர்க்கரதம் பன்றி .
தீர்க்கலோகிதம் காண்க : சிலந்தி ; தருப்பை .
தீர்க்கவசனம் உறுதிச்சொல் .
தீர்க்கவர்ச்சிகை முதலை .
தீர்க்கவிருக்கம் பெருமரம் .
தீர்க்கவைரம் நெடுநாளைய பகைமை .
தீர்க்காயு நீண்ட ஆயுள் ; காக்கை ; மார்க்கண்டன் .
தீர்க்காயுசு நீண்ட ஆயுள் ; காக்கை ; மார்க்கண்டன் .
தீர்க்காயுதம் ஈட்டி ; பன்றி .
தீர்க்காயுள் நீண்ட வாழ்நாள் .
தீர்க்காலோசனை ஆழ்ந்த யோசனை .
தீர்த்தகர் காண்க : தீர்த்தங்கரர் ; தூயோர் .
தீர்த்தகரர் காண்க : தீர்த்தங்கரர் ; தூயோர் .
தீர்த்தங்கரர் சமணருள் அருக பதவியடைந்த இருபத்து நான்கு சமண குருமார் .
தீர்த்தங்கொடுத்தல் திருக்கோயிலில் சுவாமி தீர்த்தம் அளித்தல் : திருநாள் முடிவில் அடியார்கள் நீராடும்படி சுவாமி தீர்த்தத் துறையில் திருமஞ்சனமாடுதல் .
தீர்த்தத்துறை புண்ணிய நீரில் இறங்கும் துறை .
தீர்த்தம் நீர் ; தூய்மை ; ஆராதனை நீர் ; புண்ணிய நீர்த்துறை ; திருமஞ்சன நீர் ; திருவிழா ; தீ ; வேள்வி ; பிறப்பு ; சிராத்தம் ; பெண்குறி .
தீர்த்தமாடுதல் நல்வேளையில் புண்ணிய நீரில் முழுகுதல் .
தீர்த்தயாத்திரை புண்ணியப் புனல்களில் நீராடும் பொருட்டுச் செய்யும் பயணம் .
தீர்த்தல் விடுதல் ; முடித்தல் ; போக்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; தீர்ப்புச்செய்தல் ; நன்றாகப் புடைத்தல் ; கடன் முதலியன ஒழித்தல் ; மனைவியை விலக்குதல் .
தீர்த்தவாசி புண்ணியத்திறைப் பக்கத்து வாழ்பவன் ; தீர்த்தயாத்திரை செல்வோன் .
தீர்த்தன் தூயோன் ; கடவுள் ; அருகன் ; குரு .
தீர்த்திகை தீர்த்தம் ; ஆறு .
தீர்தல் உள்ளது ஒழிதல் ; முற்றுப்பெறுதல் ; உரிமையாதல் ; இல்லையாதல் ; அழிதல் ; கழிதல் ; செலவாய்ப்போதல் .
தீர்ந்தவன் தேறினவன் ; துறந்தவன் ; ஊக்கமுடையவன் .
தீர்ப்பான் மருத்துவன் .
தீர்ப்பு முடிவு ; நியாயத்தீர்ப்பு ; தீர்மானம் ; தண்டனை ; ஒழிப்பு ; கழுவாய் .
தீர்ப்புக்கட்டுதல் முடிவை உறுதிப்படுத்துதல் ; மதிப்பிடுதல் ; இலாபநட்டக் கணக்கு முடிவு கட்டுதல் .
தீர்பு தீர்தல் .
தீர்மானம் தண்டனை ; தாளத்தீர்ப்பு ; முடிவு ; முழுமை ; சுண்ணாம்பு மட்டிப்பூச்சின்மேல் வெள்ளையால் மெருகிடுகை .
தீர்மானித்தல் கணித்தல் ; முடித்தல் ; தாளந்தீர்த்தல் .
தீர்மை நீக்கம் .
தீர்வு நீங்குகை ; கழுவாய் ; தாளத்தீர்ப்பு .
தீர்வை உறுதி ; கணக்கு ; முடிவு ; விதி ; வரிப்பணம் ; கழுவாய் ; கீரிப்பிள்ளை .
தீர்வைக்காரன் ஆயக்காரன் ; வரிதண்டுவோன் .
தீர்வைச்சரக்கு சுங்கவரி இதற்குரிய பொருள் .
தீர்வைத்துறை சுங்கத்துறை .
தீர்வையிடுதல் தீர்மானித்தல் ; முடிவுசெய்தல் .
தீர முற்ற ; மிக .
தீரக்கழிய மிக அதிகமாய் .
தீரத்துவம் மனத்திட்பம் .
தீரதை மனத்திட்பம் .
தீரம் துணிவு ; அறிவு ; கரை ; செய்வரம்பு ; அம்பு ; மஞ்சள் .
தீரவாசம் ஆற்றுப்பாய்ச்சலுள்ள இடம் .
தீரவாசி ஆற்றங்கரையில் வாழ்வோர் .
தீரன் மன உறுதியுள்ளவன் .
தீராந்தி விட்டம் .
தீராமாற்று கழுவாயில்லாத செயல் .
தீராமை கொடுமை ; கடுந்துரோகம் ; பொய்க்குற்றச்சாட்டு ; பேரநீதி ; வன்மத்தாற் சொல்லுங் கோள் ; ஆற்றாமை .
தீராமைக்காரி வன்கண்மை உள்ளவள் .
தீரிக்கை ஒழிந்த வேளை .
தீரை துணிவுள்ளவள் .
தீவகச்சாந்தி முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திரவிழா .
தீவகம் காண்க : தீபகம் ; தீவு ; பார்வை விலங்கு .
தீவகமிருகம் பார்வை விலங்கு .
தீவட்டி தீப்பந்தம் ; பயனற்ற அறிவிலி .