துணைமை முதல் - துப்புரவு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
துணைமை உதவி ; பிரிவின்மை ; ஆற்றல் .
துணையல் பூமாலை .
துணையறை அணிகலன் முதலியவற்றின் தொங்கல் .
துணையாளன் உதவிபுரிவோன் .
துணையிருத்தல் காவலாய் உடனிருத்தல் .
துணைவஞ்சி பிறரை வெல்லவோ , கொல்லவோ நிற்கும் வீரனைச் சில கூறிச் சந்து செய்வித்தலைக் கூறும் புறத்துறை .
துணைவன் உதவிசெய்வோன் ; தோழன் ; கணவன் ; மந்திரி ; உடன்பிறந்தான் .
துணைவி மனைவி ; தோழி ; உடன்பிறந்தாள் .
துத்தநாகம் ஓர் உலோகம் .
துத்தபேனம் பால்நுரை .
துத்தம் ஏழிசையுள் ஒன்று ; சமனிசை ; ஓமாலிகைவகை ; கண்மருந்தாக உதவும் துரிசு ; நாணற்புல் ; காண்க : நீர்முள்ளி ; நாய்ப்பாகல் ; நாய் ; வயிறு ; பால் ; வைப்புப்பாடாணவகை .
துத்தரி ஊதுகொம்புவகை .
துத்தல் உண்ணுதல் ; நுகர்தல் .
துத்தன் வஞ்சகன் .
துத்தாத்தி பாற்கடல் .
துத்தாரி ஒருவிதச் சீலை ; ஊதுகுழல்வகை .
துத்தி பாம்பின் படப்பொறி ; உடலில் தோன்றும் தேமல் ; யானை மத்தகப்புள்ளி ; செடிவகை ; ஒத்துக்கருவி ; திருவடிநிலை ; திருமண் ; காண்க : பெருந்துத்தி ; வட்டத்துத்தி ; முசுக்கட்டைமரம் ; முள்வெள்ளரிவகை .
துத்தியம் புகழ்ச்சி .
துத்து பொய் ; வஞ்சனை ; தப்பிதம் ; சேணம் முதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன ; கம்பளிப்போர்வை .
துத்துக்கோல் நெசவுப்பாவினுள் நெய்வோர் செலுத்துங் கழி .
துத்துமாற்று சூழ்ச்சி ; வஞ்சனை ; பொல்லாங்கு .
துத்தூரம் காண்க : ஊமத்தை .
துதம் தோத்திரம் ; அசைவு .
துதமுகம் வேண்டாமை குறித்தற்கு இடம்வலமாகத் தலையாட்டல் .
துதி தோத்திரம் ; புகழ் ; நுனி ; துருத்தி ; உறை ; காண்க : தூதுளை .
துதிக்கை தும்பிக்கை .
துதிகை வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி ; இரண்டாம் வேற்றுமை .
துதியை வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி ; இரண்டாம் வேற்றுமை .
துதித்தல் புகழ்தல் ; தொழுதல் ; நினைத்தல் .
துதியம் குறட்டைப்பழம் .
துதியரிசி மங்கலவரிசி .
துதிவாதம் புகழுரை .
துது இருது , மாதப்பருவம் .
துதை நெருக்கம் .
துதைத்தல் நெருக்குதல் .
துதைதல் செறிதல் ; மிகுதல் ; படிதல் .
துந்தகூபதி கொப்பூழ் .
துந்தம் வயிறு .
துந்தமம் ஒரு பறைவகை .
துந்தி வயிறு ; கொப்பூழ் ; வாய்ப்புண்வகை .
துந்திகன் பெருவயிறு .
துந்திரோகம் பெருவயிறு , மகோதரம் .
துந்துபம் கடுகு .
துந்துபி பேரிகை ; வாத்தியப்பொது ; அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தாறாம் ஆண்டு ; ஓர் அசுரன் .
துந்துமி பேரிகை ; பேரொலி ; மழைத்துளி .
துந்துருபாவை துடிப்புள்ளவன் .
துந்துருமாலை துடிப்புள்ளவன் .
துந்துளம் காரெலி .
துந்நிமித்தம் தீக்குறி .
துந்நெறி கெட்ட வழி .
துப்பகம் காண்க : துப்பம் .
துப்பட்டா மேல்விரிப்பு ; மேலுக்கு அணியும் விலையுயர்ந்த ஆடை .
துப்பட்டி குளிருக்காகப் போர்த்துக்கொள்ளும் துணிப்போர்வை ; மேல்விரிப்பு ; விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை .
துப்பம் நெய் ; குருதி .
துப்பல் உமிழ்நீர் ; பயனற்றது ; ஆணை .
துப்பற்காளாஞ்சி எச்சில் உமிழும் கலம் .
துப்பற்றவன் திறமையில்லாதவன் ; கதியற்றவன் .
துப்பறிதல் உளவறிதல் .
துப்பன் வலிமையுள்ளவன் ; ஒற்றன் .
துப்பாக்கி துமுக்கி ; சுடுங்கருவி ; கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய் .
துப்பாக்கிக்குதிரை துப்பாக்கி சுடுதற்குக் கையினால் இழுத்துவிடும் உறுப்பு .
துப்பாசி இடைநின்று மொழிபெயர்ப்போன் ; ஐரோப்பியரின் வாணிகத்தில் இடைநின்று உதவும் இந்தியத் தரகன் .
துப்பார் உண்பவர் .
துப்பிரசம் கருஞ்சுண்டிமரம் .
துப்பு வலிமை ; அறிவு ; திறமை ; ஆராயச்சி ; முயற்சி ; பெருமை ; துணை ; ஊக்கம் ; பொலிவு ; நன்மை ; பற்றுக்கோடு ; தன்மை ; தூய்மை ; உளவு ; பகை ; பவளம் ; அரக்கு ; சிவப்பு ; நுகர்ச்சி ; நுகர்பொருள் ; உணவு ; துரு ; உமிழ்நீர் ; நெய் ; ஆயுதப்பொது .
துப்பு (வி) துப்புஎன் ஏவல் ; காறியுமிழ் .
துப்புக்கூலி உளவு கண்டுபிடித்தற்கு உதவும் பொருள் .
துப்புக்கெட்டவன் திறமையில்லாதவன் ; அறிவற்றவன் ; அழுக்குப் பிடித்தவன் .
துப்புக்கேடு சீர்கேடு .
துப்புண்ணி சீர்கெட்டவர் .
துப்புத்துருப்பிடித்தல் உளவு கண்டுபிடித்தல் ; விவரமாக விசாரித்தல் .
துப்புத்துருவிவிசாரித்தல் உளவு கண்டுபிடித்தல் ; விவரமாக விசாரித்தல் .
துப்புதல் உமிழ்தல் .
துப்புரவாய் தூய்மையாய் ; முழுதும் .
துப்புரவு தூய்மை ; நுகர்ச்சிப்பொருள் ; ஐம்பொறி நுகர்ச்சி ; அனுபவம் ; திறமை ; முறைமை ; மேன்மை ; வேண்டற்பாடு ; அழகு .