சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தெவ்வுதல் | கொள்ளுதல் ; கவர்தல் ; நிறைத்தல் ; மன்றாடிக் கேட்டல் . |
தெவம் | மாமரம் . |
தெவிட்டல் | உமிழப்பட்டது . |
தெவிட்டு | உணவில் வெறுப்பு . |
தெவிட்டுதல் | தேக்கிடுதல் ; அசையிடுதல் ; திரளுதல் ; நிறைதல் ; தங்குதல் ; ஒலித்தல் ; உமிழ்தல் ; அருவருத்தல் ; அடைதல் ; அடைத்தல் ; வெல்லுதல் ; மறைத்தல் ; நினைத்தல் . |
தெவிளுதல் | திரளுதல் ; நிறைதல் . |
தெவு | கொள்ளுகை . |
தெவுளுதல் | காண்க : தெவிளுதல் . |
தெழ்கு | இடையில் அணியும் அணிவகை . |
தெழி | ஒலி . |
தெழித்தல் | அதட்டுதல் ; மிதித்துழக்குதல் ; முழக்குதல் ; ஆரவாரித்தல் ; ஒலித்தல் ; அடக்குதல் ; வருத்துதல் ; நீக்குதல் ; பிரித்தல் . |
தெழிப்பு | ஆரவாரம் . |
தெள் | தெள்ளுப்பூச்சி . |
தெள்கு | தெள்ளுப்பூச்சி . |
தெள்குதல் | தெளிவாதல் ; தேங்குதல் . |
தெள்விளி | தெளிந்த ஓசை ; தெளிந்த சொல் ; இசைப்பாட்டு ; கூவி வெருட்டும் ஓசை . |
தெள்ளத்தெளிதல் | மிகத் தெளிவாதல் . |
தெள்ளி | யானை . |
தெள்ளிச்சி | பூநீறு , உவர்மண் . |
தெள்ளிதின் | தெளிவாக . |
தெள்ளிமை | தெளிவு ; அறிவுநுட்பம் . |
தெள்ளியர் | தெளிந்த அறிவுடையவர் . |
தெள்ளு | பூச்சிவகை ; காண்க : இரிக்கி . |
தெள்ளுதல் | தெளிவாதல் ; ஆராய்தல் ; படைத்தல் ; கொழித்தல் ; அலைகொழித்தல் ; தெளிவித்தல் ; அனுபவமுதிர்தல் . |
தெள்ளேணம் | கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு . |
தெளி | தெளிவு ; சாறு ; ஒளி ; விதைப்பு . |
தெளிஞன் | அறிஞன் . |
தெளித்தல் | தெளிவித்தல் ; வெளிப்படுத்துதல் ; துப்புரவாக்கல் ; ஊடலுணர்த்துதல் ; விதைத்தல் ; கொழித்தல் ; புடைத்தல் ; சாறு வடித்தல் ; நிச்சயித்தல் ; சூளுறுதல் ; தூவுதல் ; நீக்குதல் ; உருக்கி ஓடவைத்தல் . |
தெளிதல் | தெளிவாதல் ; அமைதியுறுதல் ; ஒளிர்தல் ; வெண்மையாதல் ; குணப்படுதல் ; செழித்தல் ; ஒழிதல் ; துளைத்தல் ; அறிதல் ; முடிவுக்கு வருதல் ; ஆராய்தல் ; தேறுதல் ; நம்புதல் ; இலாபம் காணுதல் . |
தெளிநீர் | தூய நீர் ; நன்னீர் . |
தெளிப்பு | தூய்மைசெய்கை ; தூவுகை ; கொழிக்கை ; வடிக்கை . |
தெளிர் | யாழின் உள்ளோசை . |
தெளிர்த்தல் | ஒலித்தல் ; செழித்தல் ; மகிழ்ச்சியுறுதல் . |
தெளிர்தல் | ஒளிபெறுதல் . |
தெளிவு | விளக்கம் , துலக்கம் ; உடற்செழிப்பு ; பதநீர் ; நினைவு ; மன அமைவு ; அறிவு ; நற்காட்சி ; உளக்குறிப்பு ; நீக்கம் ; சான்று ; ஆராய்வு ; நம்பிக்கை ; சாறு ; கஞ்சித்தெளிவு ; இலாபம் ; பொருள் புலப்பட அமையும் செய்யுளின் குணம் ; பாடற்பயன்வகை . |
தெளிவெண்ணெய் | பச்சையாக வடித்த வேப்பெண்ணெய் . |
தெற்கு | தென்றிசை . |
தெற்குமுகமாய்ப்போதல் | இறத்தல் . |
தெற்றல் | மாறுபாடுடையவன் ; அறிவில் தெளிந்தவன் . |
தெற்றி | சித்திரகூடம் ; திண்ணை ; மேட்டிடம் ; மரவகை ; பழிபாவம் விளைவிப்பவன் ; மாடம் . |
தெற்றியம்பலம் | கோயில் முதலியவற்றில் அமைந்த சித்திரகூடம் . |
தெற்று | பின்னல் ; வேலி அடைப்பு ; செறிவு ; இடறுகை ; மாறுபாடு ; தவறு ; தேற்றம் . |
தெற்றுதல் | இடறுதல் ; தடைப்படுதல் ; மாறுபடல் ; பிழைசெய்தல் ; பின்னல் ; பிணங்குதல் ; தொடுத்தல் ; இறுக்குதல் ; பல்லைக் கடித்தல் ; வாய்கொன்னுதல் ; அலைத்தல் ; தடுத்தல் ; இகலுதல் ; செறிதல் ; மோதுதல் ; மாற்றுதல் . |
தெற்றுப்பல் | ஒன்றோடொன்று பின்னியிருக்கும் பல் . |
தெற்றுமாற்று | ஏமாற்று . |
தெற்றுவாசல் | திட்டிவாயில் . |
தெற்றுவாய் | காண்க : திக்குவாய் . |
தெற்றென | விரைவாக ; உடனே ; தெளிவாக . |
தெற்றெனவு | தெளிவு ; வெட்கமின்மை . |
தெறல் | அழித்தல் ; கோபித்தல் ; வருத்துதல் ; வெம்மை . |
தெறி | சிதறுகை ; அணி ; அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு ; குறும்புப் பேச்சு . |
தெறிக்கடித்தல் | சிதறவடித்தல் ; எதிரி அடங்கும்படி பேசுதல் . |
தெறிக்கப்பேசுதல் | நிதானமின்றிக் கடுத்துப் பேசுதல் . |
தெறிகெடுதல் | நிலைகுலைதல் . |
தெறித்தல் | சிதறுதல் ; குலைதல் ; துள்ளிவிழுதல் ; முரிதல் ; பிளத்தல் ; உடைத்தல் ; அறுதல் ; வேறுபடுதல் ; நீங்குதல் ; தவறுதல் ; செருக்காயிருத்தல் ; பிதுங்குதல் ; குறும்புபண்ணுதல் ; நரம்புதுடித்து நோவுண்டாக்குதல் ; விரலால் சுண்டுதல் ; விரலால் உந்துதல் ; முற்றுதல் ; தாக்கப்பட்டு வெளிப்படுதல் . |
தெறித்தளத்தல் | ஒன்றைத் தட்டுதலால் உண்டாகும் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளப்பது . |
தெறித்துநடை | துள்ளுநடை . |
தெறிநடை | துள்ளுநடை . |
தெறிப்பு | செருக்கு மேலிட்ட நடக்கை ; கடைப்பூட்டு ; அதிர்கை ; சிணுக்கி . |
தெறிபடுதல் | சிதறுண்ணுதல் ; அலைந்துலைதல் ; தோற்றோடுதல் ; திக்கறுதல் ; கலங்குதல் ; தவறுதல் . |
தெறிமுற்றுதல் | முழுதும் பழுத்தல் . |
தெறிவில் | சுண்டுவில் . |
தெறு | சுடுகை ; கோபம் ; அச்சம் ; துன்பம் . |
தெறுக்கால் | தேள் ; விருச்சிகராசி . |
தெறுத்தல் | நெரித்தல் ; குவித்தல் . |
தெறுதல் | சுடுதல் ; காய்ச்சுதல் ; கோபித்தல் ; வருத்துதல் ; தண்டஞ்செய்தல் ; அழித்தல் ; கொட்டுதல் ; பகைத்தல் ; கொல்லுதல் ; தங்கல் ; நெரித்தல் . |
தெறுநர் | பகைவர் ; கொலையாளர் . |
தெறுவி | அகப்பை . |
தெறுழ் | ஒரு காட்டுக் கொடிவகை ; காண்க : புளிமா . |
தென் | அழகு ; இனிமை ; இசை ; இசைப்பாடடு ; கற்பு ; தெற்கு ; தென்னைமரம ; வலப்பக்கம் . |
தென்கயிலை | கயிலாயத்தை ஒத்ததும் தென்னாட்டில் உள்ளதுமான சிதம்பரம் , திருக்காளத்தி , திருவையாறுபோன்ற சிவதலங்கள் . |
தென்கலை | தென்னாட்டுக்குரிய கலையான தமிழ் . |
தென்கலைநாமம் | தென்கலை வைணவர் தரிக்கும் திருமண்குறி . |
தென்கலையார் | தென்கலை நாமம் தரிக்கும் வைணவப் பிரிவினர் . |
தென்கால் | தென்றல் . |
![]() |
![]() |
![]() |