தேவசாட்சியாய் முதல் - தேவாதிதேவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தேவசாட்சியாய் தெய்வமே சான்றாக ; உண்மையாய் .
தேவசிந்தனை கடவுள் தியானம் .
தேவசேவை தெய்வ ஊழியம் .
தேவசேனாபதி தேவர்களின் படைத் தலைவனான முருகக்கடவுள் .
தேவடியாள் காண்க : தேவதாசி .
தேவதச்சன் தெய்வலோகத்துத் தச்சனாகிய விச்சுவகருமா .
தேவதத்தம் கோயிலுக்கு அளிக்கும் கொடை ; அருச்சுனன் கைச்சங்கு .
தேவதத்தன் யாரேனும் ஒருவனைக் குறிக்கும் சொல் ; கொட்டாவியை உண்டுபண்ணும் வாயு .
தேவதரு ஐந்தருக்களுள் ஒன்றான கற்பகம் ; மதகரி வேப்பமரம் .
தேவதா தெய்வம் ; பிசாசம் .
தேவதாகாரம் கோயில் .
தேவதாசன் தெய்வத் தொண்டன் ; அரிச்சந்திரன் மகன் .
தேவதாசி கோயிற் பணிவிடைபுரியும் கணிகை ; தேவலோகத்து நாடகமகளிர் .
தேவதாடம் இராகு ; தீ .
தேவதாமரை பதுமநிதி .
தேவதாயம் கோயிலுக்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம் .
தேவதாரம் ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் .
தேவதாரு ஐந்தருக்களுள் ஒன்று ; வண்டு கொல்லிமரம் ; நெட்டிலிங்கமரம் ; மதகரி வேப்பமரம் .
தேவதானம் கோயிலுக்கு விடப்பட்ட வரி இல்லா நிலம் .
தேவதீபம் கண் .
தேவதுந்துபி தேவவாத்தியம் .
தேவதூடணம் தெய்வநிந்தை .
தேவதூதன் தெய்வச்செய்தி கொண்டு வருவோன் .
தேவதூபம் வெள்ளைக் குங்கிலியம் .
தேவதேவன் பரம்பொருள் .
தேவதேவு பரம்பொருள் .
தேவதை தெய்வம் ; பேய் .
தேவநகர் கோயில் ; துறக்கம் .
தேவநாகரம் வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து .
தேவநாகரி வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து .
தேவநாயகன் தேவர்கள் தலைவன் .
தேவப்பசு காமதேனு .
தேவப்பிரமா நாரதன் .
தேவப்புள் தெய்வத்தன்மையுள்ள பறவையான அன்னம் .
தேவபதம் வானம் ; அரசர் முன்னிலை .
தேவபதி இந்திரன் .
தேவபாடை தேவர்களின் மொழியான வடமொழி .
தேவபாணி தேவரை வாழ்த்தும் பாட்டுவகை .
தேவபூமி தேவலோகம் .
தேவபோகம் காண்க : தேவதானம் .
தேவம் கடவுள் ; அனிச்சை ; காண்க : குழிநாவல் ; மாமரம் .
தேவமாதா தேவர்களின் தாயான அதிதி ; கன்னிமரியாள் .
தேவமானம் தேவர்க்குரிய காலவளவு .
தேவயாத்திரை தலயாத்திரை ; கோயில்மூர்த்தியின் புறப்பாடு .
தேவயானம் கடவுளர் ஊர்தி ; அர்ச்சிசு முதலாகிய தேவதைகளைக் கடந்து மோட்சத்துக்குச் செல்லும் வழி .
தேவயானை இந்திரன் பட்டத்து யானையான ஐராவதம் ; முருகன்தேவி .
தேவர் கடவுளர் ; நால்வகைத் தேவவகையார் ; ஐவகைத் தெய்வசாதியினர் ; திருவள்ளுவர் ; திருத்தக்கதேவர் ; உயர்ந்தோரைக் குறிக்கும் சொல் ; அரசர் துறவியர் முதலியோருடைய சிறப்புப்பெயர் ; முக்குலத்தோரின் பட்டப் பெயர் .
தேவர்கோன் தேவர்க்கு அரசனான இந்திரன் .
தேவரகசியம் தேவர்க்கு மட்டும் தெரிந்த செய்தி .
தேவரகண்டன் திருவாரூர்ச் சிவபெருமான் .
தேவரங்கம் பணிப்புடைவை .
தேவரடியார் தேவதாசிகள் .
தேவரம்பை தெய்வப்பெண் ; தெய்வலோகத்து நாடக மகளிருள் ஒருத்தி .
தேவரன் கணவனுடன் பிறந்தான் .
தேவராசன் தேவர்களுக்கு அரசனான இந்திரன் .
தேவராட்டி தெய்வமேறி ஆடுகிறவள் .
தேவராலயம் தேவர்க்கு இருப்பிடமான மகாமேரு .
தேவராளன் தெய்வமேறி ஆடுகிறவன் .
தேவரான் காமதேனு .
தேவருணவு தேவரின் உணவான அமுதம் .
தேவலகன் கோயில் அருச்சகன் .
தேவலன் நன்னெறி நடப்போன் ; பார்ப்பான் ; காண்க : தேவரன் .
தேவலோகம் துறக்கம் .
தேவவசனம் கடவுள் திருவாக்கு .
தேவவருடம் தேவர்க்குரியதும் முந்நூற்றறுபத்தைந்து மானுட ஆண்டு கொண்டதுமான ஆண்டு .
தேவவிரதன் தேவனை வழிபடுவோன் ; வீடுமன் .
தேவளம் கோயில் .
தேவன் கடவுள் ; அருகன் ; அரசன் ; கொழுந்தன் ; பரிசைக்காரன் ; ஈட்டிக்காரன் ; மடையன் ; முக்குலத்தோருக்கு வழங்கும் பட்டப்பெயர் .
தேவனம் தாமரை ; சூதாட்டம் .
தேவாங்கம் பட்டுச்சீலை .
தேவாங்கு உடல் இளைத்துத் தோன்றும் ஒரு விலங்குவகை ; வேலைப்பாடு அமைந்த ஆடை வகை .
தேவாசிரியன் திருவாரூரில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் .
தேவாசுரம் தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த பெரும்போர் .
தேவாத்துமா அரசமரம் .
தேவாதிதேவன் முதற்கடவுள் .