சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தேவாதீனம் | தெய்வத்தின் முடிவு . |
தேவாபீட்டை | தேவர்களுக்கு உகந்ததாகிய வெற்றிலை . |
தேவாமுதம் | காண்க : தேவருணவு . |
தேவாயதனம் | கடவுளர்க்குரிய கோயில் . |
தேவாயுதம் | வானவில் . |
தேவார்ப்பணம் | தெய்வத்துக்குப் படைத்த பொருள் . |
தேவாரம் | பூசனை ; வீட்டில் வைத்து வழிபடும் கடவுள் ; மாளிகையில் ஒரு பகுதி ; சைவ சமயகுரவர் மூவர் அருளிய சைவத் திருப்பாடல்கள் . |
தேவாராதனை | கடவுள் வழிபாடு . |
தேவாலயம் | கடவுளருக்குரிய கோயில் ; மேருமலை . |
தேவான்னம் | கடவுளுக்கு படைக்கப்பட்ட அமுது . |
தேவி | தெய்வமகள் ; பார்வதி ; சீதேவி ; மூதேவி ; காளி ; மனைவி ; தலைவி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மாரியம்மன் . |
தேவிகை | ஊமத்தை . |
தேவிகோட்டம் | காளிகோயில் . |
தேவிமை | தலைவியாம் தன்மை . |
தேவில் | கடவுளருக்குரிய கோயில் . |
தேவு | தெய்வம் ; தெய்வத்தன்மை . |
தேவேக்கியம் | காண்க : ஓமம் . |
தேவேசியம் | வியாழன் . |
தேவேத்தனம் | தெய்வச்செயல் . |
தேவேந்திரன் | தேவர்களின் அரசன் . |
தேவை | செயல் ; விருப்பம் ; அவசரம் ; கட்டாயம் ; அடிமைத்தனம் ; இராமேசுவரம் ; மகள் கொடுத்தவர் திருமணத்தின்பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல் விருந்து . |
தேவோத்தியானம் | கோயிலைச் சார்ந்த நந்தவனம் . |
தேள் | கொடுக்காற் கொட்டித் துன்புறுத்தும் ஒர் உயிரி ; விருச்சிகராசி ; அனுடநாள் . |
தேளி | ஒரு மீன்வகை ; கேளித் தேங்காய் என்னும் ஒரு தேங்காய் வகை . |
தேளை | இதயத்துடிப்பு . |
தேற்றம் | தெளிவு ; மனங்கலங்காமை ; உறுதி ; ஆறுதல் ; செழிப்பு ; சூளுறவு . |
தேற்றரவாளன் | கிறித்தவசமயபரிசுத்த ஆவி ; ஆறுதல் சொல்லுவோன் ; திடனுடையோன் . |
தேற்றரவாளி | கிறித்தவசமய பரிசுத்த ஆவி ; ஆறுதல் சொல்லுவோன் ; திடனுடையோன் |
தேற்றரவு | காண்க : தேற்றம் . |
தேற்றன் | உண்மை அறிவுள்ளவன் . |
தேற்றன்மை | தெளிவு . |
தேற்றா | தேற்றாமரம் . |
தேற்றாங்கொட்டை | கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் தேற்றாமர விதை . |
தேற்றார் | அறிவிலார் ; பகைவர் . |
தேற்றாவொழுக்கம் | ஐயுறத்தக்க தீயநடை . |
தேற்று | தெளிவு ; தெளிவிக்கை ; தேற்றாமரம் . |
தேற்றுதல் | தெளிவித்தல் ; தெளிந்தறிதல் ; சூளுறுதல் ; ஆற்றுதல் ; தேறுதல் கூறுதல் ; தூய்மைசெய்தல் ; குணமாக்குதல் ; பலமுண்டாக்குதல் ; ஊக்கப்படுத்துதல் . |
தேற்றேகாரம் | உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம் . |
தேறகம் | கடல்மீன்வகை . |
தேறத்தெளிதல் | தடைபோக விசாரித்தறிதல் ; முற்றுமாய் அறிகை . |
தேறல் | தெளிவு ; தெளிந்த கள் ; தேன் ; சாறு . |
தேறலர் | அறியாதார் ; பகைவர் . |
தேறலார் | அறியாதார் ; பகைவர் . |
தேறார் | அறியாதார் ; பகைவர் . |
தேறினர் | ஆராய்ந்துகொண்ட நண்பர் . |
தேறினவன் | கலை முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவன் ; பட்டறிவுமிக்கவன் . |
தேறு | தெளிவு ; உறுதி ; தேற்றாங்கொட்டை ; துண்டு ; கொட்டுகை . |
தேறுகடை | தீர்மானம் . |
தேறுதல் | தெளிதல் ; நீர்தெளிதல் ; துணிதல் ; ஆறுதல் ; பலித்தல் ; மனத்திண்மையுறுதல் ; முதிர்தல் ; செழித்தல் ; தேர்ச்சியடைதல் ; தங்கல் ; கூடுதல் ; சோறு முதலியன விறைத்தல் ; நம்புதல் ; மயக்கம் தெளிதல் . |
தேறுதலை | ஊக்கம் , துணிவு ; ஆறுதல் . |
தேறுநர் | கற்றோர் ; நம்பத்தக்கவர் ; சேர்ந்தோர் . |
தேறுமுகம் | பற்றுக்கோடு . |
தேன் | மது ; தேனிறால் ; கள் ; இரசம் ; இனிமை ; வண்டுவகை ; பெண்வண்டு ; மணம் . |
தேன்கதலி | ஒரு வாழைவகை . |
தேன்குழல் | காண்க : தேங்குழல் . |
தேன்குழாய் | காண்க : தேங்குழல் . |
தேன்கூடு | தேனிறால் ; தேன்கூட்டின் உள்ளறை ; தேனீக்கள் தங்கும் கூடு . |
தேன்மரம் | மகாகனிமரம் . |
தேன்மெழுகு | தேனடையிலுள்ள மெழுகு . |
தேன்வதை | தேன்கூடு . |
தேன்றாடு | தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் கட்டும் கூடு . |
தேனடை | தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் கட்டும் கூடு . |
தேனம் | பெருங்கடல் . |
தேனருவி | குற்றாலமலையின் மேலுள்ள ஒர் அருவி . |
தேனழித்தல் | தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல் . |
தேனன் | திருடன் . |
தேனி | காண்க : கடுகுரோகிணி ; கொத்துமல்லி . |
தேனித்தல் | இனித்தல் ; மகிழ்தல் ; தியானித்தல் . |
தேனிரும்பு | இரும்புவகை . |
தேனிழைத்தல் | தேன்கூடுகட்டுதல் . |
தேனிறாட்டு | காண்க : தேனடை . |
தேனிறால் | காண்க : தேனடை . |
தேனீ | தேன் சேர்க்கும் வண்டு . |
தேனு | பசு ; காமதேனு ; எருமை ; குதிரை ; களவு . |
தேனுகம் | பெண்யானை . |
![]() |
![]() |
![]() |