சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தொந்திவிழுதல் | காண்க : தொந்திதள்ளுதல் . |
தொந்திவைத்தல் | காண்க : தொந்திதள்ளுதல் ; செல்வவானாகை . |
தொந்தோமெனல் | தாள வொலிக்குறிப்பு . |
தொப்பணம் | விநாயகர் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் , இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கை . |
தொப்பாரம் | தோட்சுமை ; துணிப்பெருமூட்டை ; புற்கட்டு ; கொப்புளம் ; ஒரு முடியலங்காரவகை ; முகமூடிவகை ; பெரிய கட்டடம் . |
தொப்பி | தலையணி ; கள் ; கமுகின் பாளைமடல் ; மிருதங்கத்தின் இடப்பக்கம் . |
தொப்பிக்காரர் | தொப்பி அணிபவராகிய ஐரோப்பியர் . |
தொப்பிமடல் | கமுகம்பாளைமடல் . |
தொப்புத்தொப்பெனல் | கீழ்விழுதற்குறிப்பு ; அடிவிழுதற்குறிப்பு . |
தொப்புள் | கொப்பூழ் . |
தொப்பெனல் | காண்க : தொப்புத்தொப்பெனல் . |
தொப்பை | தொந்தி ; கொப்புளம் ; மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம் . |
தொப்பைக்காரன் | பெருந்தொந்தியுடைய செல்வன் . |
தொம்பதம் | ' தத்துவமசி ' என்னும் வேதவாக்கியத்தில் 'துவம்' என்னும் சொல் . |
தொம்பம் | கழைக்கூத்து . |
தொம்பரம் | பலருக்குச் சமைத்த ஊண் ; பெரிய கட்டடம் ; சமையற் பானை . |
தொம்பரவன் | காண்க : தொம்பன் . |
தொம்பரை | ஊர்சுற்றி ; நெற்குதிர் . |
தொம்பறை | களஞ்சியம் ; பெருவயிறன் ; மூங்கிலாலான நெற்குதிர் . |
தொம்பன் | கழைக்கூத்தன் . |
தொம்பாரம் | பெரிய கட்டடம் . |
தொம்பை | கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை . |
தொம்பைக்கூடு | கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை . |
தொம்மனை | மிகப் பருமன் ; காண்க : தொம்பை . |
தொம்மெனல் | ஒலிக்குறிப்பு . |
தொம்மை | பருமன் ; காண்க : தொம்பை . |
தொய் | குற்றம் . |
தொய்தம் | காண்க : துவைதம் . |
தொய்தல் | இளைத்தல் ; சோர்தல் ; துவளுதல் ; வளைதல் ; கெடுதல் ; பயன்குறைதல் ; வினை செய்தல் ; உழுதல் ; வயிறு முதலியன வாடுதல் ; மூச்சுத்திணறுதல் . |
தொய்படுதல் | நனைதல் , வளைவுறல் . |
தொய்யகம் | தலைக்கோலத்தின் ஒர் உறுப்பு . |
தொய்யப்போடுதல் | ஒரு பயன் கருதிச் செயலைச் சிறிது தாழ்த்துதல் . |
தொய்யல் | சோர்வு ; துன்பம் ; சேறு ; உழவு ; களிப்பு . |
பழமையோராகிய தேவர் | மெல்ல மூச்சுவருதல் ; நிலை தாழ்த்துதல் . |
தொய்யவிடுதல் | கயிறு முதலியவற்றைத் தளரவிடுதல் ; செயலை நிறுத்திவைத்தல் ; விலையேறுதற்பொருட்டு விலைப்பொருள்களை முடக்கிவைத்தல் ; இணங்குதல் . |
தொய்யா | கீரைவகை . |
தொய்யாக்கீரை | கீரைவகை . |
தொய்யில் | மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு ; மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் ; உழுநிலம் ; கீரைவகை ; அழகு ; கிளர்ச்சி ; நீர்க்கொடிவகை . |
தொய்வு | கட்டின் நெகிழ்ச்சி ; இளைப்பு ; ஈளை ; மூச்சுமுட்டு . |
தொல் | பழைய ; இயற்கையான . |
தொல்கதை | தொன்மம் , புராணம் . |
தொல்காப்பியம் | தமிழிலுள்ள மிகப்பழமையான இலக்கணநூல் . |
தொல்படை | அரசனுடைய முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் படை . |
தொல்பதி | பழமையான ஊர் . |
தொல்லியல் | பழைய உழுவலன்பு . |
தொல்லெழில் | இயற்கையழகு . |
தொல்லை | பழமை ; துன்பம் ; செயல் . |
தொல்லையார் | பழமையோராகிய தேவர் . |
தொல்வரவு | பழைய குடிப்பிறப்பு . |
தொல்வரைவு | அடிப்பட்ட குடியொழுக்கம் . |
தொல்வினை | பழவினை . |
தொலி | தோல் ; உமி . |
தொலித்தல் | உமி அல்லது தோடுபோக இடித்தல் ; உரித்தல் ; புடைத்தல் . |
தொலியல் | உமி போக்கிய அரிசி . |
தொலை | ஒப்பு ; அழிவு ; தூரம் ; அக்கரைச்சீமை . |
தொலைச்சுதல் | கொல்லுதல் ; முடித்தல் ; செலுத்துதல் . |
தொலைத்தல் | அழித்தல் ; கழித்தல் ; நீக்குதல் ; கெட்டுப்போக்குதல் ; சிதைத்தல் ; தோல்வியடைச் செய்தல் ; முற்றுப்பெறச்செய்தல் ; முடித்தல் . |
தொலைதல் | அழிதல் ; முடிதல் ; முற்றுதல் ; வழி முதலியன கழிதல் ; சோர்தல் ; நீங்குதல் ; தோற்றுப்போதல் ; வருந்துதல் ; காணாமற் போதல் . |
தொலைதூரம் | மிகத் தொலைவு . |
தொலைந்நோக்காடி | சேய்மையிலுள்ள பொருளைக் காண உதவும் கருவி . |
தொலைநோக்கு | நெடுதொலைவு பார்க்கும் பார்வை . |
தொலைபு | அழிகை . |
தொலைவு | அழிவு ; சோர்வு ; குறைகை ; தோல்வி ; முடிவு ; தூரம் . |
தொலைவெட்டு | காண்க : தொலைதூரம் . |
தொழித்தல் | கோபித்தல் ; ஒலித்தல் . |
தொழிதல் | சிதறுதல் . |
தொழில் | செயல் ; அலுவல் ; தந்திரம் ; பெருமை ; வினைச்சொல் ; ஏவல் ; திறமை ; களவு . |
தொழில்மாறுதல் | ஒரு வேலையைவிட்டு வேறு வேலைக்குச் செல்லுகை . |
தொழில்முடக்கம் | தொழில் செய்ய மறுத்திருத்தல் . |
தொழில்வரி | தொழில்பற்றி விதிக்கும் வரி . |
தொழிலாகுபெயர் | வற்றல் என்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருளுக்கு ஆகிவருவது . |
தொழிலாளன் | வேலைக்காரன் ; வேலைத்திறமையுள்ளவன் . |
தொழிலாளி | வேலைக்காரன் ; வேலைத்திறம் படைத்தவன் . |
தொழிலோர் | தொழிலாளர் . |
தொழிற்குறிப்பு | வினைக்குறிப்புச் சொல் . |
![]() |
![]() |
![]() |