தொழிற்சாலை முதல் - தொறுவிடம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தொழிற்சாலை வேலைக்களம் , பணிக்களரி .
தொழிற்சொல் வினைச்சொல் ; தொழிற்பெயர் .
தொழிற்படுத்துஞ்சொல் ஏவல்வினை .
தொழிற்படுதல் செயல்நடத்தல் ; வேலையிற்புகுதல் .
தொழிற்பண்பு செய்கை குறிக்கும் பண்புச்சொல் .
தொழிற்பயில்வு தொழில் மேன்மேலும் நிகழ்கை .
தொழிற்பாடு வேலை ; வேலைத்திறம் .
தொழிற்பெயர் வினைப்பெயர் ; வினையாலணையும் பெயர் .
தொழிற்றுறை வாணிகம் ; தொழிற்சாலை ; பணிக்களம் .
தொழின்முதல் ஏவுதல்கருத்தா .
தொழின்மொழி வினைச்சொல் .
தொழீஇ தொழில் செய்பவள் ; பணிப்பெண் .
தொழு மாட்டுக்கொட்டில் ; பட்டிமாடுகளை அடைக்கும் இடம் ; சிறைக்கூடம் ; குட்டநோய் ; இரேவதி ; இல்வாழ்கை ; கள்ளுச்சாடியிருக்கும் ஏணி ; உழலைமரம் ; காட்டுவிலங்குகளை அடக்கும் கூண்டு ; நீர்நிலை .
தொழுக்கன் அடிமை .
தொழுகண்ணி செடிவகை .
தொழுகள்வர் பாசாங்குசெய்வோர் .
தொழுகு மாட்டுத்தொழு .
தொழுகுலத்தோர் தொழத்தக்க குலத்தார் ; பார்ப்பனர் .
தொழுகுலம் அந்தணர்குலம் ; குலதெய்வம் ; குலமாகத் தொழத்தக்கவர் .
தொழுகை வணங்குகை ; தெய்வ வழிபாடு .
தொழுத்தை காண்க : தொழும்பி ; பணிப்பெண் ; கற்பில்லாதவள் .
தொழுதகுதல் நன்கு மதித்தல் ; விரும்புதல் .
தொழுதகுதெய்வம் வணங்குதற்குரியவளான அருந்ததி .
தொழுதல் வணங்கல் .
தொழுதி கூட்டம் ; திரட்சி ; பறவைக்கூட்டம் ; பறவையொலி .
தொழுந்தகை தொழத்தக்கவன் .
தொழுந்தகை தொழத்தக்கவள் .
தொழுநோய் குட்டநோய்வகை .
தொழுப்பிறப்பு தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்த மாடு .
தொழுப்பு உழுதொழில் வளைப்பு .
தொழும்பன் அடியவன் ; இழிந்தோன் .
தொழும்பாளன் அடியவன் ; இழிந்தோன் .
தொழும்பி அடிமைப்பெண் .
தொழும்பு அடிமை ; அடிமைத்தொழில் ; அடிமையாள் ; கடவுள் திருப்பணி .
தொழுமகளிர் குற்றேவல் மகளிர் .
தொழுமரம் தொழுக்கட்டை .
தொழுவம் மாட்டுக்கொட்டில் .
தொழுவர் தொழில்செய்வோர் ; உழவர் .
தொழுவறை காண்க : தொழுவம் .
தொழுவன் காண்க : தொள்ளாளி ; பயிரிடுவோன் .
தொழுவை மடு .
தொழுனை யமுனையாறு ; காண்க : தொழுநோய் .
தொள்கல் துளைக்கை .
தொள்கு வலை ; சேறு ; பள்ளம் .
தொள்ளம் தெப்பம் ; சேறு .
தொள்ளல் துளை .
தொள்ளாடி வலுவற்றவன் ; வலுக்குறைதல் .
தொள்ளாடி வலுவற்றவள் ; வலுக்குறைதல் .
தொள்ளாடுதல் வலிதளர்தல் .
தொள்ளாயிரம் ஒன்பது நூறு .
தொள்ளாளி தொழிலாளி .
தொள்ளி சேறு .
தொள்ளுதல் துளைத்தல் ; நெகிழ்தல் .
தொள்ளை துளை ; துளையுடைய பொருள் ; குழி ; மரக்கலம் ; குற்றம் ; அறியாமை ; மரக்கால் என்னும் அளவுகருவி ; பழைமை .
தொள்ளைக்காது பெருந்துளையுள்ள காது ; அணிநீங்கிய தொளைக்காது .
தொளதொளத்தல் தளர்வுறுதல் ; இளகிப்போதல் ; ஊறுதல் ; மனவுறுதியற்றிருத்தல் .
தொளதொளெனல் நெகிழ்தற்குறிப்பு ; ஊறுதற்குறிப்பு .
தொளி சேறு ; வீதி .
தொளியடித்தல் வயலில் சேறுகலக்குதல் .
தொளிவிதைப்பு வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல் .
தொளிவிரைப்பு வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல் .
தொளுக்குக்கொண்டை அவிழ்ந்த மயிர்முடி .
தொளுக்குதல் தொடுத்தல் ; தளரக்கட்டுதல் .
தொளை துளை ; மூங்கில் .
தொளைத்தல் துளையிடுதல் ; தொந்தரவு செய்தல் ; செய்தி அறியும்பொருட்டு ஆழம் பார்த்தல் .
தொற்பதம் காண்க : தொம்பதம் .
தொற்று சம்பந்தம் ; மூலைக்கையோடணைத்த மரம் ; நோயின் ஒட்டுத்தொடர்பு .
தொற்றுதல் பற்றியிருத்தல் ; ஒட்டித்தொடர்தல் ; கைகளால் பற்றி ஏறுதல் ; படர்தல் .
தொற்றுநோய் ஒட்டித்தொடரும் நோய் .
தொற்றுவியாதி ஒட்டித்தொடரும் நோய் .
தொறு பசுக்கூட்டம் ; தொழுவம் ; இடைச்சாதி ; கூட்டம் ; மிகுதி ; அடிமை ; ஒரிடைச்சொல் ; அடிமையாள் .
தொறுத்தி காண்க : தொறுவி .
தொறுவன் இடையன் .
தொறுவி இடைச்சி .
தொறுவிடம் மாட்டுத்தொழு .