சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நசியலன் | கழப்புணி . |
நசிவு | நெரிவு ; நிந்தை ; கேடு . |
நசிவுகாணுதல் | நைந்து சேதப்படுதல் ; மனம் வேறுபடுதல் ; நிலையற்றிருத்தல் . |
நசிவுகாயம் | ஊமைக்காயம் . |
நசிறாண்டி | தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் . |
நசிறாணி | தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் . |
நசினை | காண்க : நசனை . |
நசுக்கான் | சிறியது . |
நசுக்கு | நெரிவு ; சிறியது . |
நசுக்குணி | சிறியது ; கூழையன் ; பின்னிடுவோன் ; தொந்தரவுசெய்வோன் . |
நசுக்குதல் | நசுங்கச்செய்தல் ; கழப்பிப் பேசுதல் ; தடுத்தல் ; கீழ்ப்படுத்துதுல் ; அடித்தல் . |
நசுக்குநசுக்கெனல் | ஒட்டுதற்குறிப்பு ; தொந்தரவு செய்தற் குறிப்பு . |
நசுகுணி | சிறியது ; கூழையன் . |
நசுங்கச்சப்பி | உலோபி , கருமி , இவறலன் . |
நசுங்கடித்தல் | பலங்கெடுத்தல் , நொறுக்கல் . |
நசுங்கல் | மெலிந்தது ; நைந்த காயம் ; இவறலன் , உலோபி , உறுதியற்றவன் . |
நசுங்கலன் | உறுதியற்றவன் ; காண்க : நசுக்குணி . |
நசுங்கலான் | உறுதியற்றவன் ; காண்க : நசுக்குணி . |
நசுங்குதல் | நசுக்கப்படுதல் ; பிதுங்துதல் ; கசங்குதல் ; செயல்கெடுதல் ; நழுவிவிடுதல் ; நிலை குலைதல் . |
நசுநசுத்தல் | தடுமாறுதல் ; விடாது தூறிக்கொண்டிருத்தல் ; ஈரமாயிருத்தல் ; தொடக் குழைதல் ; தாராளமின்றியிருத்தல் ; தொந்தரவு செய்தல் . |
நசுநசெனல் | மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு . |
நசுபிசெனல் | மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு . |
நசுவல் | இவறலன் , உலோபி , முயற்சியற்றவர் ; மெலிந்தது ; குழப்பமானது ; மலம் ; மெலிந்தவர் ; தொந்தரவு செய்வோன் . |
நசை | ஆசை ; அன்பு ; நம்பிக்கை ; எள்ளல் ; குற்றம் ; ஈரம் . |
நசைகுநர் | காண்க : நசையுநர் . |
நசைதல் | விரும்புதல் ; அன்புசெய்தல் . |
நசைநர் | நண்பர் . |
நசையுநர் | நண்பர் . |
நசையுரை | காதற்பேச்சு . |
நசைவினை | நற்செயல் . |
நசைவு | தரையில் உண்டாகும் ஈரம் . |
நஞ்சபாதம் | குதிரைக்குற்றங்களுள் ஒன்று . |
நஞ்சம் | நஞ்சு . |
நஞ்சறப்பாய்ஞ்சான் | காண்க : கொடிப்பாலை ; படுவங்கீரை . |
நஞ்சறுப்பான் | காண்க : கொடிப்பாலை ; படுவங்கீரை . |
நஞ்சன் | தீயவன் . |
நஞ்சி | குன்றிமணி . |
நஞ்சீடு | நஞ்சு இடப்படுகை . |
நஞ்சு | விடம் ; தீயது ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன . |
நஞ்சுக்கொடி | கொப்பூழ்க்கொடி ; குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன . |
நஞ்சுச்சுரம் | மகப்பேற்றுக் காய்ச்சல் . |
நஞ்சுண்டம் | மரவகை . |
நஞ்சுண்டான் | நஞ்சுண்ட சிவபிரான் . |
நஞ்சுண்டை | மரவகை . |
நஞ்சுண்டோன் | சிவபிரான் ; கள்ளர் பட்டப் பெயர் . |
நஞ்சுபாய்ச்சுதல் | வஞ்சகஞ் செய்தல் ; ஆயுதம் முதலியவற்றுக்கு நஞ்சு ஏற்றுதல் . |
நஞ்சுபிடித்தம் | நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாகும் நோய் . |
நஞ்சுமுறிச்சான் | காண்க : நஞ்சறப்பாய்ஞ்சான் . |
நஞ்சுவிழியரவு | திட்டிவிடம் . |
நஞ்சுறுதல் | மனம் உருகுதல் . |
நஞ்சூட்டுதல் | ஆயுதம் முதலியவற்றிற்கு விடமேற்றுதல் ; நஞ்சைக் கலந்து கொடுத்தல் . |
நஞ்செடுத்தல் | நஞ்சு முறித்தல் . |
நஞ்சை | நன்செய் . |
நட்சத்திரகண்டகி | காண்க : அன்னாசி . |
நட்சத்திரச்சக்கரம் | விண்மீன் வட்டம் ; சந்திர மண்டலத்திற்குரிய நட்சத்திரங்கள் ; கலப்பைச் சக்கரம் முதலியன போலச் சோதிடங் கணித்தற்குரிய சக்கரவகை . |
நட்சத்திரச்சீரகம் | பெருஞ்சீரகம் . |
நட்சத்திரதீபம் | ஒரு விளக்குவகை . |
நட்சத்திரநேமி | சந்திரன் ; திருமால் ; துருவமீன் . |
நட்சத்திரப்பொருத்தம் | பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் மணமக்களின் நட்சத்திரப் பொருத்தம் . |
நட்சத்திரம் | அசுவினி முதலாக இரேவதி இறுதியாகவுள்ள இருபத்தேழு நாள்மீன் ; வானமண்டலத்தில் தோன்றும் மீன் ; சந்திரன் நாண்மீனில் தங்கிச்செல்லும் காலம் . |
நட்சத்திரமண்டலம் | விண்மீன் வட்டம் . |
நட்சத்திரமாதம் | அசுவினி முதல் இருபத்தேழு விண்மீன்களைக்கொண்டு கணக்கிடும் மாதம் . |
நட்சத்திரமாலை | விண்மீன் கூட்டம் ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் ; சந்திரனுக்குரித்தான இருபத்தேழு விண்மீன்கள் ; இருபத்தேழு பாடல்கொண்ட பிரபந்தவகை ; ஒரு சோதிட நூல் . |
நட்சத்திரவீதி | சந்திரன் திரியும் வானவழி ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் . |
நட்சத்திரேசன் | சந்திரன் . |
நட்டசந்திரன் | ஆவணி மாதத்து வளர்பிறைச் சதுர்த்திப் பிறை . |
நட்டணை | கூத்து ; கோமாளிக்கூத்து ; கொடுமை ; நடிப்பு ; கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை ; யோசனையின்மை ; பொறுமையின்மை . |
நட்டணைக்காரன் | செருக்குக் கொண்டவன் . |
நட்டதுட்டி | வருவாய்க் குறைவு . |
நட்டநடு | நடுமையம் . |
நட்டநடுநாள் | உச்சிக்காலம் ; உரியகாலம் . |
நட்டநடுப்பெற | நடுமத்தியில் ; மரியாதையின்றி ; உலகப்பழியைக் கவனியாது . |
நட்டபாடை | குறிஞ்சிப் பண்வகை . |
நட்டம் | நடனம் ; பிரத்தியயம் ஆறனுள் ஒன்று ; இழப்பு ; நேர்நிலை ; கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆடையின்றி இருக்கை ; இழந்த பொருளைப்பற்றி நிமித்தத்தால் அறியும்கலை . |
நட்டமாய்நிற்றல் | அடங்காதிருத்தல் . |
![]() |
![]() |
![]() |