சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நட்டராகம் | காண்க : நட்டபாடை . |
நட்டவம் | காண்க : நட்டுவம் . |
நட்டவர் | நண்பர் . |
நட்டழிவு | நடவுச்சேதம் . |
நட்டாத்திசூத்திரம் | கொள்ளைப்பொருள் . |
நட்டாமுட்டி | நடுத்தரமானது ; வஞ்சகம் ; கீழ்மை ; ஒரு நூல் . |
நட்டாமுட்டிவேலை | சில்லறை வேலை . |
நட்டார் | நண்பர் ; உறவினர் . |
நட்டாற்றில்விடுதல் | கேட்டில் கைவிட்டுப் போதல் ; ஆற்றின் நடுவில் விடுதல் . |
நட்டி | இழப்பு . |
நட்டியும்குட்டியும் | சிறியதும் , குறியதும் , சின்னஞ்சிறிது . |
நட்டு | உப்புக் கொட்டிவைக்கும் மேடை ; நாட்டியம் ; காண்க : நட்டுவன் , நாட்டியக்காரன் ; கீழ்மை ; சரிநடு ; நட்டம் . |
நட்டுக்கதை | கட்டுக்கதை ; நிந்தைமொழி . |
நட்டுச்சினை | நண்டுமுட்டை . |
நட்டுமுட்டு | ஆடல்பாடல் ; மத்தளக்காரனும் தாளக்காரனும் ; நடனத்துக்குரிய கருவிகள் . |
நட்டுமுட்டுக்காரர் | நட்டுவ மேளக்காரர் . |
நட்டுவம் | நாட்டியம் பழக்கி ஆட்டுவிக்குந் தொழில் . |
நட்டுவன் | நாட்டியம் பயிற்றும் ஆசிரியன் . |
நட்டுவாக்காலி | கவ்விக்கொட்டும் தன்மையுள்ள ஒரு சிற்றுயிரிவகை . |
நட்டுவாய்க்காலி | கவ்விக்கொட்டும் தன்மையுள்ள ஒரு சிற்றுயிரிவகை . |
நட்டுவிழல் | தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் . |
நட்டுவிழுதல் | தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் . |
நட்டுவைத்தல் | மரக்கன்று முதலியவற்றை நடுதல் ; குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல் . |
நட்டுவைத்தவன் | ஆதரித்தவன் . |
நட்டோடு | நண்டின் மேலோடு . |
நட்டோர் | காண்க : நட்டார் . |
நட்பாடல் | நட்புச்செய்தல் . |
நட்பாராய்தல் | நட்புக்குரியாரை ஆராயுந்திறம் . |
நட்பாளர் | உற்ற நண்பினர் ; அரசர் உறுதிச் சுற்றத்துள் நம்பிக்கைக்குரிய நண்பர் . |
நட்பு | சிநேகம் ; உறவு ; சுற்றம் ; நண்பன் ; யாழின் நாலாம் நரம்பு ; காதல் ; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர் ; கையூட்டு ; மாற்றரசரோடு நட்புச்செய்கை . |
நட்புக்காட்டுதல் | சிநேகபாவங் காட்டுதல் ; குழந்தைகட்குத் தின்பண்டம் உதவுதல் ; இலஞ்சம் கொடுத்தல் . |
நட்புவைத்தல் | சிநேகஞ்செய்தல் . |
நடக்குமிடம் | செல்வாக்குள்ள இடம் . |
நடக்கை | ஒழுக்கம் ; செல்கை ; வழக்கு . |
நடத்தல் | நடந்துசெல்லுதல் ; ஒழுகுதல் ; பரவுதல் ; நிகழ்தல் ; நிகராதல் ; நிறைவேறுதல் . |
நடத்துதல் | நடக்கச்செய்தல் ; அழைத்துப்போதல் ; செயல்புரிதல் ; கற்பித்தல் ; செலுத்துதல் ; அரைத்தல் . |
நடத்தை | காண்க : நடக்கை ; செல்வாக்கு ; இயல்பு . |
நடத்தைக்காரன் | செல்வாக்குள்ளவன் . |
நடத்தைக்காரி | விலைமகள் . |
நடத்தைகெட்டவள் | விலைமகள் . |
நடத்தைப்பிழை | ஒழுக்கத்தவறு . |
நடந்தசெய்தி | உண்மைநிகழ்ச்சி . |
நடந்துகொள்ளுதல் | மேலோரிடத்து ஒழுகுதல் . |
நடந்துவருதல் | நிகழ்தல் . |
நடந்தேறுதல் | நிறைவேறுதல் . |
நடப்பன | காலால் நடந்துசெல்லும் உயிர்வகை . |
நடப்பிப்பு | சிக்கனம் ; மேற்பார்வை . |
நடப்பு | நடத்தை ; போக்குவரவு ; தீய காமத்தொடர்பு ; கருமாந்தரத்துக்கு முதல் நாளில் கல்நடுஞ் சடங்கு ; செல்லுதற்குரிய இடம் ; தற்காலம் ; தாலிவாங்குகை . |
நடப்புக்காரன் | காண்க : நடத்தைக்காரன் . |
நடப்புவட்டி | நடைமுறை வட்டி . |
நடப்புவிலை | தற்கால விலை . |
நடபடி | நடத்தை ; செயல் ; நிகழ்ச்சி ; வழக்கம் ; ஒழுக்கம் . |
நடபாவி | படியுள்ள கிணறு . |
நடம் | கூத்து . |
நடம்பயிலுதல் | காண்க : நடமாடுதல் . |
நடமண்டனம் | அரிதாரம் . |
நடமாட்டம் | நடக்கை ; வலிமை ; செல்வாக்கு ; பழக்கம் ; கூடுமிடம் ; நடனம் . |
நடமாடுதல் | நடத்தல் ; உலாவுதல் ; திரிதல் ; ஊடாடுதல் ; வழங்குதல் ; கூத்தாடுதல் ; பரவியிருத்தல் ; துன்பம் முதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல் . |
நடமாளிகை | கோயிற் பிராகாரம் . |
நடமாளிகைமண்டபம் | கோயிற் பிராகாரம் . |
நடராசன் | சிவபெருமானின் பல மூர்த்தங்களுள் ஒன்றான நடனமாடும் உருவம் . |
நடல் | ஊன்றுகை . |
நடலம் | செருக்கு ; அதிநாகரிகங் காட்டுகை ; பாசாங்கு ; வீண்செலவிடுகை ; இகழ்ச்சி . |
நடலம்பண்ணுதல் | அதிநாகரிகம் காட்டுதல் . |
நடலமடித்தல் | பாசாங்கு செய்தல் . |
நடலை | வஞ்சனை ; துன்பம் ; பொய்ம்மை ; பாசாங்கு ; அசைவு . |
நடவடி | நடத்தை ; செயல் . |
நடவடிக்கை | நடத்தை ; செயல் . |
நடவு | நாற்று நடுகை ; நட்ட பயிர் ; நடவுக் கணக்கு . |
நடவுகம்பு | தளிர்த்துவரும் பொருட்டு நடப்படும் கம்பு . |
நடவுகாரிகள் | நாற்று நடும் வேலைக்காரிகள் . |
நடவுகொத்து | வயல் நடுகைக்காகக் கொடுக்கப்படும் கூலி . |
நடவுசெய்தல் | அரசாளுதல் ; நாற்று நடுதல் . |
நடவுதல் | செலுத்துதல் ; செயல் நடத்துதல் . |
நடவுப்பயிர் | முதலில் நட்ட பயிர் . |
![]() |
![]() |
![]() |