நடவுபோடுதல் முதல் - நடுவனாள் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நடவுபோடுதல் நாற்று நடுதல் .
நடவை வழி ; கடவைமரம் ; வழங்குமிடம் ; உபாயம் ; காண்க : நடவு ; தணக்கமரம் .
நடன் கூத்தன் .
நடனசாலை கூத்துப் பயிலிடம் .
நடனம் கூத்து ; பாசாங்கு ; குதிரை நடை ; இந்திரசாலம் .
நடனர் கூத்தர் .
நடனியர் கூத்தியர் .
நடாத்துதல் காண்க : நடத்துதல் .
நடாவுதல் காண்க : நடவுதல் .
நடி நாட்டியப்பெண் ; ஆட்டம் .
நடித்தல் கூத்தாடுதல் ; பாசாங்குசெய்தல் ; கோலங்கொள்ளுதல் .
நடிப்பு கூத்து ; பாவனைகாட்டல் .
நடு இடை ; மையம் ; வானத்தின் உச்சி ; நடுவுநிலை ; இடுப்பு ; நீதி ; மிதம் ; வழக்கு ; பூமி ; இடைப்பட்டது ; அந்தரியாமியான கடவுள் .
நடுக்கட்டு அரைக்கச்சை ; பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி .
நடுக்கண்டம் மத்தியத்துண்டு ; மத்தியப்பகுதி .
நடுக்கம் நடுங்குகை ; மிக்க அச்சம் ; துன்பம் ; கிறுகிறுப்பு .
நடுக்கல் நடுங்கல் ; காண்க : நடுக்கல்வாதம் .
நடுக்கல்வாதம் உதறுவாதம் .
நடுக்கற்சுரம் குளிர்காய்ச்சல் .
நடுக்கு காண்க : நடுக்கம் ; மனச்சோர்வு .
நடுக்குடி நடுநிலைமையிலுள்ள குடும்பம் ; ஓர் இனத்தின் தலைமைக் குடி ; நடுவூர்க் குடி .
நடுக்குதல் காண்க : நடுக்குறுத்தல் ; மயங்கச் செய்தல் ; நடுங்குதல் .
நடுக்குவாதம் காண்க : நடுக்கல்வாதம் .
நடுக்குறுத்தல் நடுங்கச்செய்தல் .
நடுக்கேட்டல் வழக்கு விசாரித்தல் ; நியாயமாகத் தீர்ப்புச் சொல்ல வேண்டுதல் .
நடுகல் போரில் இறந்துபட்ட வீரனைத் தெய்வமாக நிறுத்தும் கல் .
நடுகூலி நாற்று நட்ட கூலி .
நடுகை நாற்று நடவு .
நடுங்க ஓர் உவம உருபு .
நடுங்கநாட்டம் தோழி தலைவி நடுங்குமாறு பேசும் ஒரு துறை .
நடுங்கல் அச்சம் .
நடுங்கலன் நடுக்கல்வாதக்காரன் .
நடுங்குதல் அசைதல் ; அஞ்சுதல் ; மனங்குறைதல் ; பதறுதல் ; நாத் தடுமாறுதல் ; தலையசைத்தல் ; ஒப்பாதல் ; அதிர்தல் .
நடுச்சாமம் நள்ளிரவு ; மூன்றாம் சாமம் .
நடுச்செய்தல் நியாயம் சொல்லுதல் .
நடுச்சொல்லுதல் தீர்மானஞ்செய்தல் ; காண்க : நடுச்செய்தல் ; சான்று கூறுதல் .
நடுச்சொல்வார் சான்று கூறுவோர் .
நடுத்தரம் மத்தியநிலை .
நடுத்தலை உச்சந்தலை ; மத்தியமான இடம் .
நடுத்திட்டம் நடுவுநிலைமை .
நடுத்தீர்ப்பு நியாயத் தீர்மானம் ; தெய்வத் தீர்ப்பு ; கர்த்தருடைய கடைசித்தீர்ப்பு .
நடுத்துஞ்சல் காண்க : அவமிருத்து .
நடுத்தெரு ஊரின் மத்தியிலுள்ள வீதி ; தெருவின் மத்தி .
நடுத்தெருவில்விடுதல் ஆதரவின்றிக் கைவிட்டுப் போதல் .
நடுதல் ஊன்றுதல் ; வைத்தல் ; நிலைநிறுத்துதல் .
நடுதறி நட்ட கம்பம் ; கன்றாப்பூரில் உள்ள சிவபிரான் .
நடுநடுங்குதல் பயத்தால் மிகக் கலங்குதல் ; குரல் இசைக்கேடாகக் கம்பித்தல் .
நடுநாடி காண்க : சுழுமுனை .
நடுநாயகம் அணிகலன் மத்தியில் பதிக்கும் மணி ; சிறந்தவன் .
நடுநாள் நண்பகல் ; இடையாமம் ; சித்திரைநாள் .
நடுநிலை நீதி ; மத்தியநிலைமை ; நியாயம் ; சைவத்திற்கு யோக பூசைவகை .
நடுநிலைஞாயம் மத்தியத்தம் .
நடுநிலைமை மத்தியநிலைமை ; நியாயம் ; காண்க : நடுநிலைஞாயம் .
நடுநிற்றல் பிணைபடுகை .
நடுநெஞ்சு நடுமத்தியம் .
நடுப்பகல் மத்தியானம் , உச்சிவேளை , உருமம் .
நடுப்பாதை நடைவழியின் நடுவிலுள்ள பகுதி .
நடுப்பார் மத்தி .
நடுப்பார்த்தல் மத்தியத்தம் பார்த்தல் .
நடுப்புற மத்தியில் .
நடுப்பெற மத்தியில் .
நடுப்பேசுதல் ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல் .
நடுமத்தி காண்க : நடுமையம் .
நடுமத்தியானம் உச்சிக்காலம் , உருமம் .
நடுமையம் நடுமத்தி ; உச்சி .
நடுராசி நடுத்தரம் .
நடுவண் இடையில் .
நடுவத்தசாமம் நள்ளிரவு .
நடுவயது இளமைக்கும் மூப்புக்கும் இடைப்பட்டப் பருவம் .
நடுவர் நீதிபதி .
நடுவழி பயணததின் மத்தி ; நடைவழியின் நடுவிலுள்ள பகுதி .
நடுவறுத்தல் சீர்தூக்கிப் பார்த்தல் ; வழக்குத் தீர்த்தல் .
நடுவறுத்தான் மூக்கிரட்டைக்கொடி .
நடுவன் காண்க : நடுவர் ; நமன் , நடுநிலைமையோன் .
நடுவனாள் பரணி .