நடுவாந்தரம் முதல் - நண்டுவாய்க்காலி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நடுவாந்தரம் உதவியற்ற நிலை ; செயலினிடையில் ; எதிர்பாராதபடி ; மத்தியப்பகுதி .
நடுவிரல் ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல் .
நடுவிலவன் புதல்வர்களுள் நடுவுள்ளவன் .
நடுவிலான் புதல்வர்களுள் நடுவுள்ளவன் .
நடுவின்மை நீதிக்கேடு .
நடுவீடு பூசைக்குரிய உள்வீடு ; சாப்பாட்டு அறை .
நடுவு இடை ; நடுவுநிலைமை ; மாதரிடுப்பு ; நீதி .
நடுவுநிலை ஒருபக்கம் சாராமை ; சாந்தம் என்னும் சுவை .
நடுவுநிலைத்திணை பாலைத்திணை .
நடுவுநிலைமை காண்க : நடுநிலை ; செம்மை ; நிதானம் .
நடுவுபாடு மத்தியப்பகுதி .
நடுவுள்ளவன் இடையிலுள்ளவன் ; புதல்வர்களுள் மத்தியில் உள்ளவன் .
நடுவூர் ஊரின் நடுவிடம் .
நடுவெலும்பு முதுகெலும்பு .
நடுவெழுத்து பத்திரம் எழுதுபவன் ; பத்திரப்பதிவு அலுவலன் .
நடுவெளி இடைவெளி ; பரந்தவெளி .
நடுவே இடையில் .
நடேசன் காண்க : நடராசன் .
நடை காலாற் செல்லுகை ; பயணம் ; அடி வைக்குங் கதி ; வாசல் ; இடைகழி ; ஒழுக்கம் ; வழக்கம் ; நீண்டநாள் ; நடைகூடம் ; இயல்பு ; அடி ; கூத்து ; தொழில் ; செல்வம் ; ஒழுக்கநூல் ; நித்தியபூசை ; கோயில் ; கோள் முதலியவற்றின் கதி ; கப்பல் ஏறும் வழி ; மொழியின் போக்கு ; வாசிப்பின் நோட்டம் ; தடவை .
நடைக்காவணம் காண்க : நடைப்பந்தல் .
நடைக்குநடை ஒவ்வொரு தடவையும் .
நடைக்கூடம் வாயிலிடம் ; மாளிகையின் முகப்புக்கூடம் ; நடந்துசெல்லும் கூடமான உடம்பு .
நடைகாவற்காரன் கோயில் முதலியவற்றின் வாயில்களின் காவலாய் நிற்பவன் .
நடைகிணறு இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு .
நடைகூடம் காண்க : நடைக்கூடம் .
நடைகூலி நடந்து செல்வதற்குரிய கூலி .
நடைச்சலங்கு சிறுபடகு .
நடைசாரி குதிரையின் மந்தநடை ; உலாவுகை ; இடையறாத நடை .
நடைத்திண்ணை இடைகழித் திண்ணை .
நடைத்தேர் சிறுதேர் .
நடைநீர் ஓட்டமுள்ள தண்ணீர் .
நடைப்படம் நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை .
நடைப்படாம் நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை .
நடைப்பந்தல் விழாக்காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல் ; புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் .
நடைப்பரிகாரம் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்கள் ; பயணத்திற்கு வேண்டிய பொருள்கள் ; பத்தியமில்லாத மருந்து .
நடைப்பிணம் பயனற்றவன் ; நடக்கும் பிணம் .
நடைப்பெருவாயில் கோயிலின் தலைவாசல் .
நடைப்பொன் நடப்புச் செலவுக்குத் தேவையான பணம் .
நடைபடம் காண்க : நடைபாவாடை .
நடைபடி நடத்தை ; வழக்கம் ; நீதிமன்ற நடவடிக்கை .
நடைபரிதல் விரைந்து நடத்தல் .
நடைபழகுதல் நடக்கக் கற்றல் ; தாமதமாய் நடத்தல் .
நடைபாதை நடக்கும் பாதை .
நடைபாவாடை நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை .
நடைபாவி படிக்கிணறு ; படிக்கட்டு .
நடைமலை நடக்கும் மலையாகிய யானை .
நடைமனை நடக்கும் வீடாகிய உடல் .
நடைமாடு ஆடுமாடுகள் .
நடைமாற்று காண்க : நடைபாவாடை .
நடைமுதல் நடப்பிலுள்ள ஆண்டு .
நடைமுறை வழக்கமாக நடைபெறும் செயல்கள் ; பரம்பரை வழக்கம் .
நடையறிதல் ஊர்வழக்கங்களையறிதல் ; எழுத்து நடையை அறிதல் .
நடையன் நடக்கிறவன் ; உழவுமாடு ; குதிரை முதலியன ; செருப்பு .
நடையாட்டம் வழக்கிற் பயின்றுவருகை .
நடையாடுதல் சஞ்சரித்தல் ; பரவுதல் .
நடையில்விடுதல் மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல் .
நடையுடைபாவனை மக்களின் வழக்கவொழுக்கம் முதலியன .
நடையுடையோன் காற்று .
நடையொத்து ஒரு தாளவகை .
நடைவண்டி சிறுபிள்ளைகள் நடைபழகுதற்கு உதவும் சிறுவண்டி .
நடைவரம்பு நடந்து செல்வதற்குத் தக்கபடி அமைந்த வயல் வரப்பு .
நடைவழி மூன்று முழ அகலமுள்ள பாதை ; நடக்கும் வழி .
நடைவாவி படிகளமைந்த கிணறு .
நடைவானம் காண்க : நடைப்பந்தல் .
நடைவிளக்கெரித்தல் தண்டனையாகத் தலையில் விளக்கை வைத்து குற்றஞ்செய்தோரை ஊரில் வலம்வரச் செய்தல் .
நடைவெள்ளம் தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும் நீர் .
நண்டு நீர் ஓரம் வாழும் ஒருவகைக் சிறு உயிரி ; கற்கடகராசி .
நண்டுக்கரம் தெரிநிலைக்கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கைவகை .
நண்டுக்காற்கீரை ஒரு கீரைவகை .
நண்டுக்காற்புல் ஒரு புல்வகை .
நண்டுக்கொடுக்கு நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு .
நண்டுச்செலவு நண்டு இருக்கும் வளை .
நண்டுஞ்சுண்டும் சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள் .
நண்டுநசுக்கு சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள் .
நண்டுவாய்க்காலி காண்க : நட்டுவாய்க்காலி .