சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நண்ணம் | சிறிது . |
நண்ணலர் | பகைவர் . |
நண்ணார் | பகைவர் . |
நண்ணுதல் | கிட்டுதல் ; பொருந்துதல் ; செய்தல் ; இருத்தல் . |
நண்ணுநர் | நட்பினர் . |
நண்ணுவழி | அருகிலுள்ள இடம் . |
நண்பகல் | நடுப்பகல் . |
நண்பல் | இருபற்களினிடை . |
நண்பன் | தோழன் ; காதலன் ; குறிஞ்சிநிலத்தலைவன் ; காண்க : சணல் . |
நண்பு | அன்பு ; உறவு ; நட்பு . |
நண்மை | அண்மை . |
நணந்தம் | சணற்பயிர் ; காண்க : காட்டுப்பச்சிலை ; புன்கமரம் . |
நணி | அணிமையான இடம் . |
நணியான் | அருகிலிருப்பவன் . |
நணுகலர் | பகைவர் . |
நணுகார் | பகைவர் . |
நணுகுதல் | கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் . |
நணுங்குதல் | கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் . |
நந்தப்பாழ் | அழிந்துபோன சிற்றூர் . |
நத்தம் | இருள் ; இரவு ; ஆக்கம் ; ஊர் ; ஊரின் குடியிருப்பிடம் ; மனைநிலம் ; இடம் ; நத்தை ; சங்கு ; வாழை ; காண்க : எருக்கு ; நத்தமாலம் ; கடிகார ஊசி . |
நத்தமாலம் | புன்கமரம் . |
நத்தாசை | விருப்பம் ; பற்று ; பேராசை . |
நத்தாமணி | காண்க : வேலிப்பருத்தி . |
நத்தி | இன்மை ; மீனினுடைய மிதவைப் பை . |
நத்திதம் | நாணயமிடப்பெற்றது . |
நத்து | சங்கு ; நத்தை ; மூக்கணிவகை ; ஒரு பறவைவகை ; விருப்பம் . |
நத்துதல் | விரும்புதல் . |
நத்தை | மேலே ஓடு உள்ளதும் ஊர்ந்து செல்வதுமான ஓர் உயிரி ; கருநந்து ; கொற்றான் ; கடுகு . |
நத்தைச்சுண்டி | ஒரு செடிவகை . |
நத்தைச்சூரி | ஒரு செடிவகை . |
நத்தைப்படுவன் | கண்ணில் உண்டாகும் கட்டி . |
நதம் | மேற்குநோக்கியோடும் ஆறு ; உச்சத்திருந்து கிழக்கிற்கு அல்லது மேற்கிற்குள்ள தூரம் ; நந்தியாவட்டச்செடி . |
நதி | கிழக்கேயோடும் ஆறு ; ஆறு ; வணக்கம் . |
நதிகரந்தை | திப்பிலிமூலம் . |
நதிகேள்வன் | ஆறுகளின் தலைவனான வருணன் . |
நதிசரம் | ஆற்றுச்சார்பிற் பிறந்த யானை . |
நதிதீரம் | ஆற்றங்கரை . |
நதிபதி | கடல் ; வருணன் . |
நதீசம் | ஆற்றில் பிறப்பதாகிய தாமரை . |
நதீரம் | காண்க : நதிதீரம் . |
நதீரயம் | நீர்ப்பாய்ச்சல் . |
நதுத்தல் | அவித்தல் ; கெடுத்தல் ; மறைத்தல் . |
நந்த | ஓர் உவமஉருபு ; பெருக ; விளங்க . |
நந்தகம் | காண்க : நாந்தகம் . |
நந்தகி | திப்பிலி . |
நந்தகோபன் | கண்ணபிரானை வளர்த்த தந்தை ; கண்ணபிரான் . |
நந்தகோபாலன் | கண்ணபிரானை வளர்த்த தந்தை ; கண்ணபிரான் . |
நந்தநந்தனன் | கண்ணன் . |
நந்தம் | சங்கு ; கத்தூரி ; காக்கை ; குபேரனது ஒன்பதுவகை நிதிகளுள் ஒன்று ; நாரத்தை ; பெருமுயற்சி . |
நந்தமாலம் | காண்க : நத்தமாலம் . |
நந்தல் | ஆக்கம் ; கேடு ; நிந்தை . |
நந்தவனம் | பூந்தோட்டம் . |
நந்தாவனம் | பூந்தோட்டம் . |
நந்தன் | காண்க : நந்தகோபாலன் ; திருநாளைப் போவார்நாயனார் ; இடையன் ; திருமால் ; புதல்வன் ; வாழைவகை . |
நந்தன | அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தாறாம் ஆண்டு . |
நந்தனம் | பூந்தோட்டம் , இந்திரனது பூங்காவனம் ; சோலை ; நந்தன ஆண்டு ; நத்தை ; தவளை ; நாரத்தை ; மகிழ்ச்சி . |
நந்தனவனம் | இந்திரனது பூங்காவனம் ; பூந்தோட்டம் ; சோலை . |
நந்தனன் | மகன் . |
நந்தனி | மகள் . |
நந்தனை | மகள் . |
நந்தாமணி | காண்க : நத்தாமணி . |
நந்தாவிளக்கு | கோயில் கருவறை முதலியவற்றிலுள்ள அணையாவிளக்கு . |
நந்தி | காளை ; சிவகண நாதராகிய நந்தி ; இடபராசி ; சிவன் ; நந்திதுர்க்கம் என்னும் மலை ; சமணர் பட்டப்பெயர் ; உபபுராணத்துள் ஒன்று ; ஓர் ஊர் ; நந்தியாவட்டச்செடி ; பல்லவ அரசர் பெயர் . |
நந்திகேச்சுரன் | சிவன் ; காண்க : நந்திதேவன் . |
நந்திகேசன் | சிவன் ; காண்க : நந்திதேவன் . |
நந்திதேவன் | சிவகண நாதராகிய நந்திதேவர் . |
நந்திப்பூசணி | சாம்பற்பூசணிக்கொடி . |
நந்தியாவட்டம் | ஒரு பூச்செடிவகை . |
நந்தியாவர்த்தம் | நந்தியாவட்டம் என்னும் ஒரு செடிவகை ; ஒரு கட்டடவகை . |
நந்தியாவருத்தனன் | நண்பன் ; மகன் ; சிவன் . |
நந்திவிருட்சம் | சின்னிமரம் . |
நந்தினி | காமதேனுவின் கன்று ; மகள் . |
நந்து | ஆக்கம் ; சங்கு ; பறவை ; நத்தை . |
நந்துதல் | கெடுதல் ; சாதல் ; அவிதல் ; மறைதல் ; தழைத்தல் ; விளங்குதல் ; செருக்குதல் ; தூண்டுதல் ; வளர்தல் ; நிந்திக்கப்படுதல் . |
நந்துருணி | புறங்கூறுவோன் ; மதியீனன் ; இழிஞன் . |
![]() |
![]() |
![]() |