சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நந்துருணிப்பேச்சு | கோட்சோல் ; நம்பிக்கையற்ற பேச்சு . |
நந்தை | கொற்றான்கொடி ; தேற்றாமரம் ; பிரதமை சட்டி ஏகாதசி என்னும் திதிகள் ; கபிலைப்பசு . |
நந்நான்கு | நான்கு நான்காக . |
நப்பாசை | நாவின் தீராத ஆசை ; வீணான ஆசை . |
நப்பிரிதல் | நம்மைப்பிரிதல் . |
நப்பின்னை | கண்ணனுக்குகந்த தேவியருள் ஒருத்தி . |
நப்புணர்தல் | நம்மைச் சேர்தல் . |
நபம் | வானம் ; ஆவணிமாதம் ; கார்காலம் . |
நபர் | ஆள் . |
நபனம் | நீராட்டம் ; திருமஞ்சனம் . |
நபாகம் | இருள் . |
நபி | தீர்க்கதரிசி ; முகம்மது . |
நபுஞ்சகம் | காண்க : நபுசஞ்சகன் ; ஆண் தன்மையின்மை ; நபுஞ்சலிங்கம் . |
நபுஞ்சகலிங்கம் | அலிப்பால் . |
நபுஞ்சகன் | அலி ; ஆண்தன்மை இழந்தவன் . |
நபோமணி | விண்மணியான சூரியன் . |
நம் | எல்லாம் என்னும் சொல் உயர்திணையாயின் அஃது உருபேற்கும்போது கொள்ளுஞ்சாரியை ; வணக்கம் . |
நம்பகம் | காண்க : நம்பிக்கை . |
நம்பன் | ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன் . |
நம்பான் | ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன் . |
நம்பி | ஆணிற்சிறந்தவன் ; முழுமையன் ; கடவுள் ; காண்க : நம்பியான் , ஒரு செல்லப்பெயர் ; நம்பியாண்டார்நம்பி ; நாற்கவிராச நம்பி . |
நம்பிக்கை | விசுவாசம் ; உறுதிப்பாடு ; ஆணை ; நம்பி யொப்புவிக்கப்பட்டது ; உண்மை . |
நம்பிக்கைசெலுத்துதல் | நம்பிக்கைக்குக் குறைவுவாராது நடந்துகொள்ளுதல் . |
நம்பிக்கைத்துரோகம் | இரண்டகம் . |
நம்பிக்கைபண்ணுதல் | உறுதிசெய்தல் ; ஆணையிடுதல் ; காண்க : நம்பிக்கைசெலுத்துதல் . |
நம்பிக்கையுள்ளவன் | நம்பத்தக்கவன் ; பிறரிடம் உண்மையாய் நடப்பவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் . |
நம்பியாரூரர் | சைவசமய குரவருள் ஒருவரான சுந்தரர் . |
நம்பியான் | கோயில் அருச்சகரின் பட்டப்பெயர் . |
நம்பிராட்டி | அரசன்தேவி ; கடவுள்தேவி . |
நம்பிராட்டியார் | அரசன்தேவி ; கடவுள்தேவி . |
நம்பிரான் | கடவுள் ; தலைவன் ; ஊர்க்குதிரை . |
நம்பு | அருச்சகம் ; நாவல் ; விருப்பம் ; கோயிலில் பூசை செய்யும் உரிமை . |
நம்புசெய்வார் | அருச்சகர் . |
நம்புண்டல் | நம்பும்படிசெய்கை . |
நம்புதல் | விரும்புதல் ; நம்பிக்கைவைத்தல் ; எதர்பார்த்தல் ; ஏற்பளித்தல் . |
நம்பூதிரி | மலையாள அந்தணர் வகையினன் . |
நம்பெருமாள் | திருவரங்கத்துத் திருமால் . |
நம்மனோர் | காண்க : எம்மனோர் . |
நம | வணக்கம் . |
நமக்கரித்தல் | வணங்குதல் . |
நமக்காரம் | காண்க : நம . |
நமக்காரி | தொட்டாற்சுருங்கிச்செடி ; வறட்சுண்டிச்செடி . |
நமகம் | உருத்திரனைக் குறிக்கும் ஒரு வேத மந்திரம் . |
நமச்சிவாய | ஐந்தெழுத்து , பஞ்சாட்சர மந்திரம் . |
நமசம் | இணக்கம் . |
நமசன் | உதவுபவன் , அனுகூலன் . |
நமசிதன் | வழிபடத்தக்கவன் . |
நமட்டுச்சிரங்கு | காண்க : நமட்டுச்சொறி . |
நமட்டுச்சிரிப்பு | எள்ளற்சிரிப்பு . |
நமட்டுச்சொறி | சிரங்கு ; சொறிபுண் ; சிரங்குவகை . |
நமடுகடித்தல் | குழந்தைகள் உதட்டைக் கடித்தல் . |
நமத்தம் | சடாமாஞ்சில்பூண்டு . |
நமதன் | ஆண்டவன் . |
நமர் | நம் இனத்தவர் ; நம்முடைய உறவினர் . |
நமர்த்தல் | ஈரம் ஏறுதல் . |
நமரி | நீண்ட எக்காளவகை . |
நமருதல் | ஊறுதல் ; பெருகுதல் . |
நமலுதல் | வணங்குதல் . |
நகவாரிதி | தொடை . |
நமன் | யமன் ; நம்மவன் ; சுற்றத்தான் . |
நமிடு | பேன்முட்டை ; நாரைவகை . |
நமித்திரர் | பகைவர் . |
நமுகுதல் | குழைதல் . |
நமுடு | ஈர் ; கீழுதடு ; கொக்கு ; பட்டுநூல்களில் விழும் முடிச்சு . |
நமுத்தல் | காண்க : நமர்த்தல் . |
நமூது | சாட்சி ; பொறுப்பாளி ; விவரக்குறிப்பு . |
நமூனா | மாதிரிப் படிவம் . |
நமேரு | புன்னைமரம் ; சுரபுன்னைமரம் . |
நமை | தினவு ; வைக்காலிமரம் . |
நமைக்காய் | கத்தரிக்காய் . |
நமைச்சல் | காண்க : நமைப்பு . |
நமைத்தல் | காண்க : நமைதல் ; வருத்துதல் ; சூட்டுதல் ; கட்டளை இடுதல் . |
நமைதல் | தினவெடுத்தல் . |
நமைப்பு | தினவு ; சிரங்கு ; வருத்தம் . |
நமோ | காண்க : நம . |
![]() |
![]() |
![]() |