சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நயக்கன் | நாய் . |
நயக்கிளவி | அசதியாடல் . |
நயகுணம் | நற்குணம் . |
நயங்காட்டுதல் | இன்சொல் முதலியவற்றால் வயப்படுத்துதல் . |
நயச்சொல் | இனியசொல் ; முகமன்வார்த்தை ; இச்சகம் ; அசதியாடல் . |
நயத்தகுதல் | விரும்பல் ; நன்மையாதல் . |
நயத்தல் | விரும்புதல் ; பாராட்டுதல் ; சிறப்பித்தல் ; பிரியப்படுத்தல் ; தட்டிக்கொடுத்தல் ; கெஞ்சுதல் ; அன்புசெய்தல் ; பின்செல்லுதல் ; மகிழ்தல் ; இன்பமுறல் ; இனிமையுறுதல் ; இணங்கிப்போதல் ; பயன்படுதல் ; மலிதல் ; மேம்படுதல் ; ஈரம் ஏறுதல் ; நட்பாடல் ; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை . |
நயத்தவிலை | மலிந்த விலை . |
நயந்துசொல்லுதல் | பயன்படச் சொல்லுதல் ; வேண்டிக்கொள்ளுதல் . |
நயத்தோர் | நண்பர் ; கணவர் . |
நயநயவார்த்தை | உறுதியில்லாச் சொல் . |
நயநிலைப்படலம் | நாடகம் . |
நயப்பாடு | பயன் ; மேம்பாடு . |
நயப்பித்தல் | விரும்பும்படி செய்தல் ; மகிழ்வித்தல் ; உடன்படுதல் ; பயன்படுத்தல் ; மலிவாக்குதல் . |
நயப்பு | அன்பு ; விருப்பம் ; இன்பம் ; தலைவி எழிலைப் புகழ்கை ; மலிவு ; இலாபம் ; மேம்பாடு ; நன்மை . |
நயப்புணர்வு | கண்ணோட்டம் . |
நயபயம் | அன்பும் கண்டிப்பும் . |
நயம் | இன்பம் ; அருள் ; மகிழ்ச்சி ; விருப்பம் ; தன்மை ; மேன்மை ; போற்றுகை ; அன்பு ; பக்தி ; நற்பயன் ; மலிவு ; மிகுதி ; பயன் ; நுண்மை ; இனிமை ; நீதி ; கொடையாளி ; கனமும் தேசிகமும் கலந்து பாடும்வகை . |
நயம்பண்ணுதல் | உதவிசெய்தல் . |
நயம்பாடு | காண்க : நயப்பாடு ; அழகுபடுகை . |
நயம்பாடுதல் | இனிமையாய்ப் பாடுதல் ; முகமன் கூறுதல் . |
நயம்பேசுதல் | மகிழப் பேசுதல் ; இனிமையாய் ஒலித்தல் . |
நயமாலி | மனோசிலை என்னும் மருந்து . |
நயமொழி | இன்மொழி ; நலம்பயக்கும் சொல் . |
நயர் | அறிவுடையார் . |
நயவசனம் | இனிய சொல் ; பணிவான சொல் . |
நயவஞ்சகம் | இனிமைகாட்டி ஏமாற்றுகை . |
நயவர் | காதலர் ; நண்பர் ; நீதியுடையோர் . |
நயவருதல் | விரும்புதல் ; நன்மையுண்டாதல் . |
நயவன் | சுவைஞன் . |
நயவார் | பகைவர் . |
நயவார்த்தை | காண்க : நயவசனம் . |
நயவான் | நயப்புள்ளோன் ; ஆதாயக்காரன் ; உபகாரி ; விரும்பாதவன் . |
நயவுரை | இனிய சொல் . |
நயன் | காண்க : நயம் ; நயவான் ; பசை ; உறவு ; கொடையாளி ; விரகு ; உபாயம் , நீதி . |
நயன்மை | நீதி . |
நயனகாசம் | கண்மேற் படர்சதை . |
நயனத்தானம் | துயிலணை . |
நயனதீட்சை | அருட்பார்வையால் சீடனுக்கு ஞானம் உண்டாக்குதல் . |
நயனப்பார்வை | கண்ணோக்கு ; காதல் நோக்கம் . |
நயனம் | கண் . |
நயனமாலை | உருத்திராக்கமாலை . |
நயனமோக்கம் | சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத் திறந்துவிடுகை . |
நயனமோட்சம் | சிற்பிகள் சிலை முதலியவற்றிற்குக் கண்ணைத்திறந்துவிடுகை . |
நயனரோகம் | கண்ணோய் . |
நயனவாரி | கண்ணீர் . |
நயனை | கண்மணி . |
நயனோற்சவம் | கண்காட்சி ; காட்சிக்கு விருந்தான அழகுமிக்க பொருள் ; விளக்கு . |
நயாசலன் | நீதிநெறி வழுவாதவன் . |
நயிச்சியஞ்செய்தல் | தன்வயப்படுத்துதல் . |
நயிட்டிகப்பிரமசாரி | வாழ்நாள் முழுதும் பிரமசாரியாய்க் கழிப்போன் ; மாணவன் . |
நயிட்டிகர் | நிட்டை தவறாதோர் . |
நயிந்தை | தலைவன் ; ஒரு பட்டப்பெயர் . |
நயினார் | ஆண்டவன் ; தலைவன் ; காண்க : ஐயனார் ; சித்திரகுப்தன் ; சமணர்க்குரிய பட்டப்பெயர் . |
நர்த்தகன் | கூத்தாடுவோன் . |
நர்த்தகி | கூத்தாடுபவள் . |
நர்த்தனம் | கூத்து . |
நரகபாதாளம் | ஆழ்நரகம் . |
நரகம் | உயிர்கள் தீவினையின் பயனை நுகரும் இடம் , பாதாள உலகம் . |
நரகர் | நரகத்தில் வாழ்பவர் . |
நரகரி | நரசிம்மமூர்த்தியாகிய திருமால் . |
நரகல் | மலம் ; தூய்மையின்மை . |
நரகலித்தல் | அருவருத்தல் ; அழுக்குடைத்தாதல் . |
நரகவாய் | நிரயவாய் நரகம் . |
நரகவேதனை | நரகத்தில் நுகரும் துன்பம் . |
நரகன் | நரகத்திலுள்ளோன் ; மாபாவி ; கண்ணபிரனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் . |
நரகாரி | நரகாசுரனைக் கொன்றவனான திருமால் . |
நரகாந்தகன் | நரகாசுரனைக் கொன்றவனான திருமால் . |
நரகாலி | கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய் வகை . |
நரகி | நரகலோகத்துள்ளவள் . |
நரகீலகன் | குருவைக் கொலைசெய்தவன் . |
நரகு | நரகம் . |
நரகேசரி | காண்க : நரவரி ; மக்களுள் சிறந்தவன் . |
நரங்கடித்தல் | அழித்தல் . |
நரங்குதல் | கடையாதல் ; மெலிதல் ; நொறுங்குதல் . |
![]() |
![]() |
![]() |