நரசிங்கம் முதல் - நரியுடை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நரசிங்கம் நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .
நரசிங்கமூர்த்தி நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .
நரசிம்மன் நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .
நரசீவன் மனிதன் .
நரத்துவம் மானிடத்தன்மை .
நரதுங்கன் மாந்தரிற் சிறந்தவன் .
நரதுதி மாந்தரைப் புகழ்தல் .
நரதேவன் மக்கள் தலைவனான அரசன் .
நரந்தம் கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மணம் ; மணப்புல்வகை ; காகம் ; நாரத்தை .
நரப்பிரதிட்டை மக்களால் நிறுவப்பட்டது .
நரப்புக்கருவி நரம்புடைய யாழ் முதலிய இசைக்கருவிகள் .
நரப்புக்கருவியாளர் யாழ் முதலியன வாசிப்போர் .
நரபதி மக்கட்கும் தலைவனான அரசன் ; சோழ , விசயநகர வேந்தரின் பட்டப்பெயர் .
நரபாலன் மக்கள் தலைவனான அரசன் .
நரம் மாந்தப்பிறவி .
நரம்பன் ஒல்லியானவன் ; ஒரு புகையிலை வகை .
நரம்பின்மறை யாழ்நூல் .
நரம்பு தசைநார் ; நாடி ; இரத்தக்குழாய் ; யாழ் நரம்பு ; இலை முதலியவற்றின் நரம்பு ; வில் நாண் .
நரம்புக்கடுப்பு நரம்புநோய்வகை .
நரம்புக்கருவி நரம்புகள் கொண்ட இசைக்கருவி .
நரம்புக்கழலை நிணநீர் நரம்பின் வீக்கம் .
நரம்புக்காய் நீண்டுமெலிந்த காய் ; முருங்கைக்காய்
நரம்புச்சிலந்தி தோலில் புழுக்களை உண்டாக்கும் ஒரு புண்வகை ; நரம்பின்மேல் உண்டான புண்கட்டி .
நரம்புச்சுற்று நரம்பின் வீக்கம் .
நரம்புசன்னி இழுப்புநோய் .
நரம்புப்பல் காண்க : நரம்புச்சுற்று .
நரம்புப்பிசகு காண்க : சுளுக்கு .
நரம்புமண்டலம் உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு .
நரம்புவலி காண்க : நரம்பெரிச்சல் .
நரம்புவாங்குதல் இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல் ; குதிகாலின் நரம்பை வெட்டுதலான துன்புறுத்தல் .
நரம்புவீக்கம் விதைவீக்கம் ; காண்க : நரம்புவலி .
நரம்பெடுத்தல் கடுமையாக வேலைபுரியச்செய்தல் ; துணிவைக் கெடுத்தல் ; உடம்பு மிக மெலிந்துபோதல் .
நரம்பெரிச்சல் நரம்புநோய்வகை .
நரமடங்கல் காண்க : நரசிங்கமூர்த்தி .
நரமாமிசம் மனித ஊன் .
நரமேதம் மாந்தரைக் கொன்று செய்யும் வேள்வி .
நரல் செத்தை ; மக்கட்கூட்டம் .
நரல்வு யாழின் உள்ளோசை ; ஒலிக்கை ; எடுத்தலோசை .
நரலுதல் ஒலித்தல் ; கத்துதல் .
நரலை கடல் ; மதிலுறுப்புகளுள் ஒன்று ; ஒலி .
நரலோகம் மக்கள் உலகமான மண்ணுலகம் .
நரவரி நரசிங்கமூர்த்தி .
நரவல் காண்க : நரகல் .
நரவாகனம் மக்களால் சுமக்கப்படும் சிவிகை ; ஊர்தி ; குபேரனது ஊர்தி .
நரவாகனன் நரனை ஊர்தியாகக்கொண்ட குபேரன் .
நரளி கடலை .
நரற்றுதல் ஒலித்தல் ; ஒலிக்கச்செய்தல் .
நரன் மாந்தன் ; அருச்சுனன் ; ஒரு முனிவன் ; ஓர் இயக்கன் .
நரா கன்றுகை .
நராங்குதல் வளர்ச்சி குன்றிப்போதல் .
நராதிபன் அரசன் .
நராந்தகம் இறப்பு .
நராந்தகன் மக்களை அழிக்கும் யமன் ; கொடியோன் .
நராந்தகம் காக்கை .
நராப்பற்றுதல் பழம் முதலியன கன்றிப்போதல் .
நராபோகம் நினைத்திராத வாழ்வு பெறல் ; ஒருவன் போகம் நுகரும் வாழ்நாள் எல்லை .
நராயணன் திருமால் .
நராலை நரகம் .
நரி ஒரு விலங்குவகை ; புலி ; வைக்கோற்புரிக்கருவி .
நரிக்குழி நரிவளை .
நரிக்கொன்றை செங்கொன்றைமரம் .
நரிகுளிப்பாட்டுதல் நல்ல சொற்களால் ஏமாற்றுதல் .
நரிச்சல் வௌவால்வகை .
நரித்தல் காண்க : நரிதல் ; நொறுக்குதல் ; கெடுத்தல் ; நிந்தித்தல் , இகழ்தல் ; திகைத்தல் ; நரித்தன்மை அடைதல் .
நரித்தலை முழங்கால் முட்டு .
நரிதல் வருத்துதல் .
நரிநிறம் பலநிறக்கலப்பு ; பல எண்ணம் ; வெறுப்பு .
நரிப்பு நரித்தன்மை ; இகழ்வு ; வியப்பு ; நொறுங்குகை .
நரிப்புத்தி தந்திரபுத்தி .
நரிப்புறம் மிருகசீரிடநாள்
நரிமருட்டி கிலுகிலுப்பைச்செடி .
நரிமிரட்டல் இளங்குழந்தைகட்குத் தூக்கத்தில் உண்டாகும் அழுகையும் சிரிப்பும் .
நரியன் குள்ளன் ; சூதுள்ளவன் ; பெருநெல்வகை .
நரியிலந்தை இலந்தைவகை .
நரியுடை முசுமுசுக்கை .