சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நரியுணி | நரியால் உண்ணப்படுவதான நண்டு . |
நரியுப்பு | கறியுப்பு . |
நரிவாற்புல் | ஒரு புல்வகை . |
நருக்கல் | நசுக்குண்டது ; குத்தல்வலி ; வேகாதசோறு ; வயிற்றுவலிவகை . |
நருக்கு | குட்டுகை . |
நருக்குதல் | நொறுக்குதல் ; கொல்லுதல் ; துண்டாக்குதல் ; குட்டுதல் . |
நருக்கெனல் | குத்தல் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
நருங்குதல் | நொறுங்குதல் ; தேய்தல் . |
நருநருத்தல் | நெறுநெறுத்தல் ; புன்மையாதல் . |
நருநரெனல் | நெறுநெறெனற் குறிப்பு . |
நருமுதல் | பல்லால் கடித்தல் ; பல்லைக் கடித்தல் . |
நருவல் | நருங்கினது ; மலம் . |
நருவிசு | நாகரிகம் ; சிக்கனம் ; துப்புரவு ; நேர்மையானது . |
நரேசன் | மக்கள் தலைவனான அரசன் . |
நரேந்திரன் | மக்கள் தலைவனான அரசன் . |
நரை | வெண்மை ; வெண்மயிர் ; எருது ; இடபராசி ; சாமரம் ; கவரிமா ; மூப்பு ; பெருமை ; வெள்ளைக்குதிரை ; பறவைவகை ; நாரை . |
நரைக்கொம்பு | வெள்ளைக் கழியான எலும்பு . |
நரைச்சல் | பயிர் முதலியவற்றின் வெளிறின தன்மை . |
நரைஞர் | முதியவர் ; முடி வெளுத்தவர் . |
நரைத்தல் | மயிர்வெளுத்தல் ; பயிர்வெளிறுதல் ; நிறம்வெளுத்தல் . |
நரைதிரையில்லான் | மூப்படையாத காகம் . |
நரைப்பு | மயிர் வெண்மையாகை . |
நரைமை | மூப்பு . |
நரையல்லி | காண்க : வெள்ளாம்பல் . |
நரையன் | நரைத்தவன் ; பருவமின்றி நரைத்தவன் ; வல்லூறுவகை ; சாம்பல் நிறமுள்ள விலங்கு . |
நரையான் | சின்னது ; நாரை ; மீன்கொத்திப் பறவை ; காகம் ; நெல்வகை ; நாரைப்பசு ; நருங்கின குழந்தை . |
நல் | நல்ல ; வறுமை . |
நல்கல் | பெருங்கொடை ; அன்பு ; கொடுக்கை ; அருள் . |
நல்குதல் | கொடுத்தல் ; விரும்புதல் ; தலையளி செய்தல் ; படைத்தல் ; வளர்த்தல் ; தாமதித்தல் ; பயன்படுதல் ; உவத்தல் ; அருள்செய்தல் . |
நல்குரவு | வறுமை . |
நல்கூர் | எளிமை . |
நல்கூர்தல் | வறுமையடைதல் ; களைப்படைதல் ; துன்புறுதல் . |
நல்கூர்ந்தான் | வறியோன் . |
நல்கூர்ந்தோன் | வறியோன் . |
நல்ல | நன்மையான ; மிக்க ; கடுமையான . |
நல்லசேவகன் | சிறந்த வீரன் ; ஐயனார் . |
நல்லணி | மங்கலநாண் . |
நல்லதண்ணீர் | குடிதண்ணீர் ; சுவையுள்ள நீர் . |
நல்லதனம் | நட்பு ; ஒத்துப்போகும் இயல்பு . |
நல்லதனம்பண்ணுதல் | சாந்தப்படுத்துதல் . |
நல்லது | அறம் ; நன்மையானது ; காண்க : நல்லபாம்பு . |
நல்லதுசொல்லுதல் | புத்திமதி சொல்லுதல் ; அன்பாய்ப் பேசுதல் ; வழியனுப்புதல் . |
நல்லதுபண்ணுதல் | இணக்குதல் . |
நல்லதுபொல்லாது | நன்மை தீமை . |
நல்லநடத்தை | நல்லொழுக்கம் . |
நல்லநினைப்பு | நல்லெண்ணம் ; சிறந்த ஞாபகம் . |
நல்லப்பன் | தந்தையுடன் பிறந்தவன் . |
நல்லபழக்கம் | நற்பயிற்சி ; நெருங்கின நட்பு ; நல்லோர் இணக்கம் . |
நல்லபாம்பு | நாகப்பாம்பு . |
நல்லபுத்தி | மயக்கமற்ற அறிவு ; கூரிய அறிவு ; நற்போதனை . |
நல்லம் | கறுப்பு ; கரி ; இஞ்சி . |
நல்லமழை | அதிக மழை . |
நல்லமனம் | விரிந்தவுள்ளம் ; தூய சிந்தை . |
நல்லமாதிரி | நல்லவகை ; நல்லொழுக்கம் . |
நல்லவர் | அறிஞர் ; நல்லோர் ; நண்பர் ; பெண்கள் ; காண்க : நல்லபாம்பு . |
நல்லவழி | நல்ல பாதை ; நன்னடக்கை ; நற்குலம் ; மோட்சவழி . |
நல்லவளம் | மிகுந்த செழிப்பு ; தக்க சமயம் . |
நல்லவார்த்தை | இன்சொல் ; உவப்புச்சொல் ; வாழ்த்துரை ; கெஞ்சுமொழி ; சமாதானப்பேச்சு . |
நல்லவெல்லம் | கரும்புவெல்லம் ; கருப்புக்கட்டி . |
நல்லவேளை | நற்சமயம் ; நல்ல நெருக்கடியான நேரம் ; நாய்க்கடுகுசெடி . |
நல்லவை | நற்செயல்கள் ; அறிவு , ஒழுக்கம் முதலியவற்றால் உயர்ந்தோர் சபை ; நியாயம் பேசுவோர் சபை . |
நல்லறம் | நல்வாழ்க்கை , இல்வாழ்க்கை , மேன்மையான தருமம் ; சமயதருமம் ; நல்லொழுக்கம் . |
நல்லறிவு | நற்புத்தி ; நற்போதனை ; ஒரு நீதி நூல் . |
நல்லாக | நன்றாக . |
நல்லாங்கு | நன்மை . |
நல்லாச்சி | நல்லம்மாள் ; சிற்றன்னை . |
நல்லாடை | சிறந்த துகில் . |
நல்லாப்பு | நன்மை . |
நல்லாய்ச்சி | சிறிய தாய் முறையாள் . |
நல்லார் | நற்குணமுடையோர் ; பெரியோர் ; கற்றார் ; மகளிர் . |
நல்லாள் | நற்குணமுடையவள் ; தக்கவர் . |
நல்லாறு | நல்வழி . |
நல்லாறுடையான் | நல்வழிச் செல்வோன் . |
நல்லி | பெண் ; முதுகெலும்பு ; விலங்குக் காலின் எலும்பு . |
நல்லிசை | மறையாத புகழ் . |
![]() |
![]() |
![]() |