சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நல்லிருப்பு | வாளாவிருத்தல் ; நல்வாழ்வு . |
நல்லிளம்படியர் | அழகிய இளம்பெண்டிர் . |
நல்லினம் | நல்லவர் கூட்டம் ; பசுக்கூட்டம் . |
நல்லுயிர் | மனைவிக்கு உயிர்போன்ற கணவன் . |
நல்லுறவு | நெருங்கின உறவு . |
நல்லூழ் | புண்ணியம் , தவப்பயன் . |
நல்லெண்ணம் | நல் நினைவு . |
நல்லெண்ணெய் | எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய் . |
நல்லேர்கட்டுதல் | நல்லவேளையில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல் . |
நல்லேறு | இடபம் ; ஆண்எருமை . |
நல்லொழுக்கம் | நன்னடக்கை ; ஒழுக்கம் . |
நல்லோர் | அறிஞர் ; மகளிர் . |
நல்வசி | சூலம் . |
நல்வழி | நல்லொழுக்கம் ; ஔவையார் இயற்றிய நீதிநூல் . |
நல்வாக்கு | நன்னிமித்தமான சொல் ; வேண்டுகோட் சொல் ; வாழ்த்துரை . |
நல்வார்த்தை | காண்க : நல்வாக்கு ; சிறந்த செய்தி . |
நல்வாழ்வு | இன்பமான இல்லற வாழ்க்கை ; சீருஞ்சிறப்புமாய் வாழ்கை . |
நல்விதி | தவப்பயன் . |
நல்வினை | அறச்செயல் ; முற்பிறப்பிற் செய்த புண்ணியச் செயல் . |
நலக்குதல் | கசங்கச்செய்தல் ; அழுக்காக்குதல் ; நன்மைபயத்தல் . |
நலங்கனிதல் | அன்பு முற்றுதல் ; அழகு முற்றுதல் . |
நலங்கிடுதல் | மணமக்களுக்கு எண்ணெய் சீயக்காய் மஞ்சட்பொடி முதலியவற்றைப் பூசுஞ்சடங்குசெய்தல் ; மணமக்களுக்கு நலங்கு நடத்துதல் . |
நலங்கு | நறுங்கூட்டு ; ஒரு கலியாணச் சடங்கு ; ஒரு மருந்து . |
நலங்குதல் | நொந்துபோதல் ; வருந்துதல் ; நுடங்குதல் ; கசங்குதல் . |
நலஞ்சாற்றுதல் | அரசன் ஆணையை வெளியிடுதல் . |
நலத்தல் | நலமாதல் ; விரும்புதல் . |
நலந்தட்டுதல் | விதையடித்தல் . |
நலப்பாடு | நன்மை ; ஆதாயம் ; நற்பேறு . |
நலப்பு | நன்மை ; வெற்றி . |
நலம் | நன்மை ; இன்பம் ; உதவி ; கண்ணோட்டம் ; அழகு ; அன்பு ; ஆசை ; குணம் ; பயன் ; புகழ் ; உயர்வு ; நல்வாழ்வு ; நிறம் ; செம்மைநிறம் ; விருச்சிகராசி ; எருதின் விதை ; சுக்கு ; அறம் . |
நலம்பாடு | தகுதி . |
நலம்பாராட்டல் | தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை . |
நலம்பாராட்டு | தலைவியின் அழகைத் தலைவன் வியந்துரைக்கும் அகத்துறை . |
நலம்பாராட்டுதல் | அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் . |
நலம்பொலம் | நன்றுதீது . |
நலவர் | நல்லோர் . |
நலவல் | நாவல்மரம் . |
நலவு | நன்மை ; மன்னிப்புக் கேட்கும் மொழி . |
நலி | நோய் . |
நலித்தல் | துன்புறுத்தல் . |
நலிதல் | சரிதல் ; மெலிதல் ; வருந்தல் ; அழிதல் ; நெருக்கல் . |
நலிபு | ஆய்தவெழுத்திற்குச் செய்யுளில் வழங்கும் ஒரு பெயர் . |
நலிபுவண்ணம் | ஆய்தவெழுத்துப் பயின்றுவருஞ் சந்தப்பாட்டு . |
நலிவு | துன்பம் ; கேடு . |
நவ்வல் | காண்க : நலவல் . |
நவ்வார் | பகைவர் . |
நவ்வி | பெண்மான் ; மான்குட்டி ; இளமை ; அழகு ; அத்தநாள் ; காண்க : நவ்வு . |
நவ்வு | மரக்கலம் . |
நவ்வுதல் | முழுதும் நம்புதல் ; ஆசையோடு எதிர் பார்த்திருத்தல் . |
நவக்கிரகம் | சூரியன் , சந்திரன் , செவ்வாய் , புதன் , வியாழன் , சுக்கிரன் , சனி , இராகு , கேது ஆகிய ஒன்பது கோள்கள் . |
நவகண்டம் | கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள் ; காண்க : நவவருடம் . |
நவகருமம் | புதுப்பிக்கும் வேலை . |
நவகோடிசித்தபுரம் | திருவாவடுதுறை என்னும் ஊர் . |
நவகோணத்தாள் | பார்வதிதேவி . |
நவச்சாரப்பற்று | நவச்சாரத்தினால் உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்துமாறு செய்யும் பற்று . |
நவச்சாரம் | ஓர் உப்புவகை . |
நவசத்தி | வாமை , சேட்டை , ரௌத்திரி , காளி , பலவிகரணி , பலபிரமதனி , சர்வபூததமனி , சக்தி , மனோன்மணி ஆகிய ஒன்பது சிவசத்திகள் . |
நவசாரத்தான் | பொன்மணல் . |
நவசி | ஒரு தென்னைமரவகை ; ஒரு கமுகமரவகை . |
நவத்தம் | சடாமாஞ்சில் மருந்து . |
நவத்துவாரம் | கண்கள் , காதுகள் , மூக்குத்துளைகள் , வாய் , மலத்துளை , நீர்த்துளை என்னும் ஒன்பது உடல் வாயில்கள் . |
நவதளம் | தாமரைத்தளிர் . |
நவதாரணை | சதுரங்கதாரணை , சத்தாரணை , சித்திரதாரணை , நாமதாரணை , பேததாரணை , மந்திரதாரணை , மாயாதாரணை , வச்சிரதாரணை ; வத்துத்தாரணை என்னும் ஒன்பது அவதான வகைகள் ; யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோதாரணை . |
நவதாளம் | அரிதாளம் , அருமதாளம் , சமதாளம் , சயதாளம் , சித்திரதாளம் , துருவதாளம் , நிவிர்த்தாளம் ; படிமதாளம் , விடதாளம் என்னும் ஒன்பது தாளவகை . |
நவதானியம் | உழுந்து , நெல் , எள்ளு , கடலை , கொள்ளு , கோதுமை , அவரை , பயறு , துவரை ஆகிய ஒன்பது தவசங்கள் . |
நவதி | தொண்ணூறு . |
நவதிகை | தூரியக்கோல் . |
நவதீர்த்தம் | கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , சிந்து , காவேரி , கோதாவிரி , துங்கபத்திரை , சோணையாறு என்னும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் . |
நவதை | புதுமை . |
நவநாதசித்தர் | ஒன்பது சித்திராகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் . |
நவநிதி | கச்சபநிதி , கற்பநிதி , சங்கநிதி , நந்தநிதி , நீலநிதி , பதுமநிதி , மகாநிதி , மகாபதுமநிதி , முகுந்தநிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி . |
நவநீதகம் | நெய் . |
நவநீதம் | வெண்ணெய் ; புதுமை . |
நவப்பிரீதி | வெடியுப்பு . |
நவபண்டம் | காண்க : நவதானியம் . |
![]() |
![]() |
![]() |