நிசை முதல் - நித்தியவிதி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நிசை இரவு .
நிட்கண்டகம் தீமையின்மை ; கண்ணோட்டமின்மை .
நிட்கண்டகன் பகையற்றவனாகிய சிவபெருமான் .
நிட்கம் வராகனெடை ; நாணயவகை ; பொன் ; பறைவகை .
நிட்களங்கம் மாசின்மை .
நிட்களசிவம் அருவமான சிவம் .
நிட்களம் உருவமின்மை ; தூய்மை .
நிட்களர் அருவமூர்த்தியான சிவபெருமான் .
நிட்காமியம் விருப்பமின்மை ; பயனை விரும்பாது செய்யும் செயல் .
நிட்காரணம் காரணம் இன்மை .
நிட்காரம் நிந்தை .
நிட்குடி ஏலம் .
நிட்சணம் முத்தங்கொடுக்கை .
நிட்சேபம் எட்டுப் போகத்துள் ஒன்றாகிய புதைபொருள் . ஈட்டுப்பொருள் .
நிட்டுரதரன் வன்னெஞ்சன் .
நிட்டுரவன் வன்னெஞ்சன் .
நிட்டூரம் கொடுமை .
நிட்டூரி கொடியவள் .
நிட்டை தியானம் ; நோன்புநோற்றல் .
நிட்பலம் பயனின்மை .
நிட்பிரபஞ்சம் பிரபஞ்சத்தைக் கடந்தது .
நிட்பிரபஞ்சன் அமைதியானவன் , சாந்தமுள்ளவன் .
நிடதம் எண்குல மலைகளுள் ஒன்று , ஒரு நாடு ; முட்டியாக இரண்டு கையுஞ் சமன்செய்யும் இணைக்கைவகை .
நிடலம் நெற்றி .
நிடலாட்சன் நெற்றிக்கண்ணனான சிவபிரான் .
நிடாதம் ஏழிசைகளுள் ஏழாவது .
நிடூதனம் கொலை .
நிடூதனன் கொலைஞன் .
நிடேகம் மணமக்கள் முதன்முறை கூடும் சடங்கு .
நிடேதம் விலக்கு ; விலக்கப்பட்ட பொருள் .
நிண்டுதல் நிமிண்டுதல் .
நிண்ணயம் ஏற்பாடு ; உறுதி ; ஆராய்வு .
நிண்ணயம்பண்ணுதல் உறுதிசெய்தல் .
நிணச்செருக்கு உடற்கொழுப்பாலாகிய ஆணவம் .
நிணத்தல் கொழுத்தல் ; கட்டுதல் ; முடைதல் .
நிணத்திசு இரத்தச் சவ்வு .
நிணநரம்புகள் ஊன் நரம்புகள் .
நிணநெய் மணிக்கட்டுகளில் உண்டாகும் பசை .
நிணம் கொழுப்பு ; ஊன் ; ஊனீர் .
நிணர்தல் கட்டுதல் ; செறிதல் .
நிணவை பிணிப்பு ; பின்னிச்செய்யப்பட்டது .
நிணறு உருக்கம் ; இதம் .
நித்தக்கட்டளை காண்க : நித்தியக்கட்டளை .
நித்தகருமம் காண்க : நித்தியகருமம் .
நித்தக்காய்ச்சல் தினமும் அடிக்கும் சுரநோய் .
நித்தத்துவம் என்றுமுளதாந்தன்மை .
நித்தநிமிந்தம் கோயில் நித்தியக்கட்டளை .
நித்தம் என்றும் அழியாதுள்ள நிலை ; காண்க : நித்தியகருமம் ; ஓமகுண்டம் ; நீர்முள்ளிப் பூண்டு .
நித்தரங்கசமுத்திரம் அலையற்ற கடல் .
நித்தல் எந்நாளும் .
நித்தலும் எந்நாளும் .
நித்தவிநோதம் அருகனது முக்குடைகளுள் ஒன்று .
நித்தன் அருகன் ; கடவுள் ; சிவன் .
நித்தாநித்தம் நிலைபேறும் நிலையாமையும் .
நித்தாரம் தீர்மானம் ; நிருணயம் .
நித்திகம் கண்டங்கத்திரி ; தூதுவளை .
நித்தியகட்டளை அன்றாட ஏற்பாடு .
நித்தியகருமம் அன்றாடஞ் செய்யவேண்டிய செயல்கள் .
நித்தியகலியாணம் நிலைத்த இன்பம் ; என்றும் உள்ள மகிழ்ச்சி .
நித்தியகலியாணி பார்வதி ; பிள்ளையார்பூ என்னும் செடி .
நித்தியசூரி மாலுலகத்து வாழ்கின்ற முத்தர்கள் .
நித்தியத்துவம் அழிவின்மை .
நித்தியநைமித்திகம் நாள் வழிபாடும் விழாவும் .
நித்தியப்படி நாடோறும் ; தினமும் நடக்குங் கட்டளைப்படி .
நித்தியப்பிரளயம் உயிர்களின் சுழுத்திநிலை ; இறப்பு ; நாள்தோறும் நிகழும் பிரளயம் .
நித்தியபூசை நாள்தோறும் நடைபெறும் வழிபாடு .
நித்தியம் அழியாமை ; எப்பொழுதும் ; வீடுபேறு ; கடல் ; நாடோறும் ; காண்க : நித்தியபூசை ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; காண்க : நித்திகம் .
நித்தியமுத்தன் கடவுள் ; பிரமஞானி .
நித்தியமுத்தி மீளாத நற்கதி .
நித்தியமோட்சம் மீளாத நற்கதி .
நித்தியயோகம் குறையாச் செல்வம் ; என்றும் விடாச் சேர்க்கை .
நித்தியயௌவனம் மாறா இளமை .
நித்தியல் காண்க : நித்தியபூசை ; நித்தியக்கட்டளை .
நித்தியவாழ்வு மோட்சப்பதவி ; நிலைத்த வாழ்க்கை .
நித்தியவிதி அன்றைய செயல் ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; இறந்தவர்பொருட்டுப் பத்துநாளும் செய்யும் சடங்கு ; ஓமக்கிடங்கு ; பலி கொடுக்குமிடம் .