சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நெய்தல்யாழ்த்திறம் | நெய்தற்பண்வகை . |
நெய்தள்கடவுள் | வருணன் . |
நெய்தற்பறை | நெய்தல்நிலப் பறை , சாப்பறை . |
நெய்தற்றிணை | நெய்தல்நிலம் . |
நெய்தை | பெருமை . |
நெய்நெட்டி | சம்பங்கோரைப்புல் . |
நெய்ப்பந்தம் | நெய் ஊற்றி எரிக்கும் பந்தம் . |
நெய்ப்பிலி | ஒரு மாணிக்கக் குற்றவகை . |
நெய்ப்பீர்க்கு | பீர்க்குவகை . |
நெய்ப்பு | நெய்ப்பதமுடைத்தாயிருக்கை ; பளபளப்பு ; கொழுப்பு ; சீழ் . |
நெய்ம்மிதி | நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு . |
நெய்ம்மிதிகவளம் | நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு . |
நெய்முட்டை | நெய்யெடுக்குங் கரண்டி . |
நெய்யணி | பிள்ளைப்பேற்றின்பின் தீட்டு நீங்குதற்குரிய முழுக்கு . |
நெய்யரி | பன்னாடை . |
நெய்யாடல் | திருநாள்களில் மங்கலமாக எண்ணெய் தேய்த்து முழுகுதல் . |
நெய்யாடுதல் | எண்ணெய் பூசி மங்கலநீராடல் ; நெய்பூசுதல் . |
நெய்யுண்டை | நெய்கலந்த சோற்றுத்திரள் . |
நெய்யுலை | உணவு சமைத்தற்காக நெய் காய்கின்ற உலை . |
நெய்யேற்றுதல் | அறுகம்புல்லை நெய்யில் தோய்த்து மணமகள் தலையில் மகளிர் வாழ்த்தித் தடவுதல் . |
நெய்வார் | நெசவுகாரர் . |
நெய்வான்மீன் | சித்திரைநாள் . |
நெய்விழா | காண்க : நெய்யாடல் . |
நெய்விளக்கு | நெய்வார்த்து எரிக்கும் விளக்கு ; தெய்வ சன்னிதிக்குமுன் ஏற்றும் மாவிளக்கு . |
நெய்வு | நெசவு . |
நெய்வைத்தல் | மருந்துநெய் செய்தல் ; கொழுப்பேறுதல் . |
நெரடு | படிக்கக் கடினமானது ; கரடு . |
நெரடுதல் | காண்க : நெருடுதல் ; கடினமாதல் ; தட்டுப்படுதல் . |
நெரி | நெரிவு ; சேலையின் கொய்சகம் ; புண் புறப்பாடு முதலியவற்றால் கைகால் சந்துகளில் உண்டாகும் புடைப்பு ; சுரசுரப்பு ; நோய்வகை . |
நெரிசல் | நெரிந்தது ; நெருக்கமாயிருக்கும் நிலை ; மனவருத்தம் ; கண்ணோய்வகை ; பசலை . |
நெரிஞ்சி | காண்க : நெருஞ்சி . |
நெரிஞ்சில் | காண்க : நெருஞ்சி . |
நெரித்தல் | நொறுக்குதல் ; நசுக்குதல் ; நிமிட்டல் ; துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல் ; கைவிரல்களைச் சுடக்குதல் ; நிலைகெடச்செய்தல் ; திறமையாய் நடத்துதல் ; நெருங்குதல் ; குவித்தல் . |
நெரிதரல் | நொறுங்குதல் ; நிலைகெடுதல் ; நெருங்குதல் ; வளைதல் . |
நெரிதல் | நொறுங்குதல் ; நிலைகெடுதல் ; நெருங்குதல் ; வளைதல் . |
நெரியல் | மிளகு . |
நெரியாசம் | ஒரு புகைக்கும் பொருள்வகை ; வேம்பு . |
நெரியாசி | ஒரு புகைக்கும் பொருள்வகை ; வேம்பு . |
நெரிவு | நசுக்குதல் ; சுடக்கு ; பகை . |
நெருக்கடி | நெருக்கம் ; இக்கட்டு , துன்பம் . |
நெருக்கம் | செறிவு ; வேலைச் சங்கடம் ; ஒடுக்கம் ; இடைவிடாமை ; அவசரம் ; பலவந்தம் ; துன்பம் ; கொடுமை ; நோய்க்கடுமை ; கையிறுக்கம் ; அண்மை ; இறக்குந்தறுவாய் . |
நெருக்கிடை | காண்க : நெருக்கடி ; வறுமை . |
நெருக்கிப்பார்த்தல் | வற்புறுத்துதல் ; முயற்சி யெடுத்தல் . |
நெருக்கிப்பிடித்தல் | தொடர்ந்து பற்றுதல் ; மிகுதியாய் உண்ணுதல் ; செட்டால் மிச்சம் பிடித்தல் . |
நெருக்கு | காண்க : நெருக்கம் . |
நெருக்குண்ணுதல் | நெருக்குப்படுதல் . |
நெருக்குதல் | ஆலை , செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல் சுருக்குதல் ; நசுக்குதல் ; வருத்துதல் ; அடர்ந்து தள்ளுதல் ; அமுக்குதல் ; பலவந்தம்பண்ணுதல் ; தாக்குதல் ; விடாப்பிடியாய் இருத்தல் ; உரத்தல் ; செறியச்செய்தல் ; வருத்திக்கேட்டல் . |
நெருக்கெனல் | காண்க : நெரேலெனல் . |
நெருங்கல் | கண்டிப்புச்சொல் ; செறிவு ; நெருங்குதல் . |
நெருங்குதல் | கிட்டுதல் ; ஒடுக்கமாதல் ; செறிதல் ; கிட்டின உறவாதல் ; நசுங்குதல் ; இடித்துக்கூறுதல் ; மும்முரமாதல் ; கோபித்தல் ; தொடர்தல் ; அவசரமாதல் ; மீதூர்தல் . |
நெருஞ்சி | ஒரு முட்பூண்டுவகை . |
நெருஞ்சில் | ஒரு முட்பூண்டுவகை . |
நெருட்டுக்கருத்து | கருகலான கருத்து ; கருகலான பொருள் . |
நெருட்டுப்புத்தி | வஞ்சகமனம் ; கோணல் அறிவு . |
நெருடன் | வஞ்சனம் ; கெட்டிக்காரி . |
நெருடி | வஞ்சகி ; கெட்டிக்காரி . |
நெருடு | நிமிண்டுகை ; இழைபொருத்துகை ; தடவுகை ; கருகல் ; சொற்சங்கடம் ; கரடு முரடானது ; ஆடையில் பிரிந்தெழும் நூல் முடிச்சு ; வஞ்சனை . |
நெருடுதல் | நிமிண்டுதல் ; நிமிண்டி இழைபொருத்துதல் ; திரித்தல் ; தடவல் ; வஞ்சித்தல் . |
நெருநல் | நேற்று . |
நெருநலைநாள் | நேற்று . |
நெருநற்று | நேற்று . |
நெருநெருத்தல் | திடீரென ஒடிதல் ; திடீரென வயிறு முதலியன வலித்தல் . |
நெருநெரெனல் | திடீரென வயிறு வலித்தற்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; நெரிதற்குறிப்பு . |
நெருநை | காண்க : நெருநல் . |
நெருப்பன் | கடுஞ்சினம் உடையவன் ; கலகக்காரன் ; பொல்லாதவன் . |
நெருப்பு | அக்கினி ; இடி ; உடற்சூடு ; கோபம் முதலியவற்றின் கடுமை ; ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவர் . |
நெருப்புக்கண் | சிவனது நெற்றிக்கண் ; கண்ணேறு உள்ள கண் ; அனல்பொறி பறக்குங்கண் ; பொறாமைக் கண் . |
நெருப்புக்கல் | தீத்தட்டிக் கல் காடிக்காரம் . |
நெருப்புக்காடு | பெருநெருப்பு ; கடுவெயில் ; கடுஞ்சினம் . |
நெருப்புக்கொள்ளி | தீக்கொள்ளி ; கலகக்காரன் ; தீயன் . |
நெருப்புக்கொளுத்துதல் | தீமூட்டுதல் ; கடுவெயிலெறித்தல் ; கடுமையாதல் ; தீமைசெய்தல் ; கலகமூட்டுதல் ; தீக்கொளுத்துதல் . |
நெருப்புக்கோழி | தணலை விழுங்கும் கோழிவகை ; நெருப்புப்போன்ற சிவந்த தொண்டையை உடைய வான்கோழி . |
நெருப்புச்சட்டி | தீச்சட்டி . |
நெருப்புச்சூடு | தீப்பட்ட புண் . |
நெருப்புத்தணல் | கட்டைநெருப்பு . |
![]() |
![]() |
![]() |