சொல்
|
அருஞ்சொற்பொருள் |
நெருப்புத்தழல் | கட்டைநெருப்பு . |
நெருப்புத்தள்ளி | நெருப்புத் தள்ளுகிற இரும்பாயுதம் . |
நெருப்புத்திராவகம் | வெடியுப்புத் திராவகம் . |
நெருப்புப்படுதல் | நெருப்பால் அழிதல் ; தெய்வதண்டனை முதலியவற்றால் அழிதல் ; கடுங்கோடையால் வருந்துதல் ; அநீதியால் துன்புறுதல் ; விலை முதலியன மிகுதியாதல் . |
நெருப்புப்பிடித்தல் | தீப்பற்றி எரிதல் . |
நெருப்புப்பொறி | தீப்பொறி . |
நெருப்புமழை | ஊழிக்காலத்தில் பெய்யும் அக்கினி மழை . |
நெருப்புமூட்டுதல் | தீப்பற்றவைத்தல் ; கலகம் மூட்டுதல் . |
நெருப்புவிழுதல் | தீப்பொறி பறக்கை ; தணல் உண்டாகை ; கூரைமேல் தீத்திரள் விழுகை ; அநீதி முதலியவற்றால் அழிகை ; தன்னிலை அழிகை ; நெருப்பால் அழிகை . |
நெருள் | மக்கட்கூட்டம் . |
நெரேலெனல் | விரைவுக்குறிப்பு . |
நெல் | பயிர்வகை ; நென்மணி ; உணவு ; எட்டு எள்ளளவுகொண்ட நீட்டவலவை ; காண்க : வாகை . |
நெல்லரி | அரியப்பட்ட கைப்பிடியளவான நெற்கதிர் . |
நெல்லி | ஒரு மரவகை ; திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய் . |
நெல்லிக்காய்மூட்டை | ஒற்றுமையற்றவர் . |
நெல்லிச்சாந்து | காய்ந்த நெல்லியின் அரைத்த விழுது . |
நெல்லிச்சி | வரிக்கூத்துவகை . |
நெல்லிமுள்ளி | காய்ந்த நெல்லித்தோல் . |
நெல்லிவட்டு | நெல்லிக்காயாகிய விளையாட்டுக் கருவிவகை . |
நெல்லு | காண்க : நெல் . |
நெளி | வளைந்த விரலணிவகை . |
நெளிச்சல் | வளைவு ; வளைந்தது . |
நெளித்தல் | வளைத்தல் ; கோணுதல் ; அசைத்தல் ;வேலைகழப்புதல் ; இறுமாப்புறுதல் . |
நெளிதம் | புன்மை , அற்பம் , இலேசு . |
நெளிதல் | உடல் வளைதல் ; வளைந்து நகர்தல் ; சுருளுதல் ; குழிதல் ; வருந்துதல் ; குலைதல் ; மிகுதியாதல் ; அதுங்குதல் . |
நெளிப்பு | இறுமாப்பு ; பரிகாசம் ; துன்பம் ; செருக்கு முதலியவற்றால் குறும்புசெய்தல் . |
நெளிப்புக்காரன் | பகட்டுக்காரன் . |
நெளிப்புப்பேசுதல் | ஏளனமாகப் பேசுதல் . |
நெளியல் | வளைவு ; வளைந்தது . |
நெளியலன் | கூனன் . |
நெளியலி | கூனி . |
நெளியலெடுத்தல் | கோணலை நீக்குதல் . |
நெளியன் | கடல்மீன்வகை ; பயிரை அழிக்கும் புழுவகை . |
நெளிர் | எடுத்தலோசை . |
நெளிர்தல் | சத்தமிடுதல் . |
நெளிவு | வளைவு ; வருத்தம் ; இணங்குகை ; கைவிரல்மோதிரம் ; செருக்கு ; காண்க : நெளிவுசுளிவு . |
நெளிவுசுளிவு | ஏற்றத்தாழ்வு ; கமுக்கம் , இரகசியம் . |
நெற்கடை | மூலநாள் . |
நெற்களஞ்சியம் | நெல்லிட்டு வைக்கும் புரை . |
நெற்காணி | நெல்விளையும் நிலம் . |
நெற்குவை | நெற்போர் . |
நெற்குறி | நெல்லைக்கொண்டு சொல்லும் சோதிடம் . |
நெற்கூடு | காண்க : நெற்களஞ்சியம் . |
நெற்சிறுதாலி | தாலிவகை . |
நெற்சூடு | கடாவடிபடாத நெற்கதிர்த் தொகுதி . |
நெற்செய்தல் | நெற்பயிரிடுதல் . |
நெற்பயிர் | நெல்விளையும் பயிர் . |
நெற்பரப்பு | பன்னிரண்டு குழிகொண்ட நில அளவு . |
நெற்பழம் | மதர்ப்பினால் வெடித்த நெல் , நல்விளைவின் குறியாக முற்றி வெடிக்கும் நென்மணி ; மழை மிகுதியாலாகும் நெல்லின் நோய் . |
நெற்பொரி | நெல்லை வறுப்பதால் விரிந்து மலரும் அரிசி . |
நெற்போர் | கடாவடி அடிக்காத வைக்கோற் போர் . |
நெற்றம் | முதிர்ந்து காய்நத காய் ; நெரிப்பு . |
நெற்றலன் | மெலிந்து உணங்கியவன் . |
நெற்றி | கண்புருவங்களுக்கு மேலுள்ள பகுதி ; முன்படை ; முன்பகுதி ; உச்சி ; கட்டடத்தின் மேனிலை முகப்பு ; வானம் ; தண்டிகையின் தலைப்பு ; மரத்திலிருந்து கிளைகள் பிரிகின்ற இடம் ; நடு ; முயற்சி . |
நெற்றிக்கட்டு | மாதர் அணிகின்ற தலைமாலை . |
நெற்றிக்கண்ணன் | நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் . |
நெற்றிக்கிடுதல் | நெற்றியில் திருநீறு முதலிய குறியிடுதல் . |
நெற்றிக்குறி | நெற்றியிலிடும் பொட்டு முதலியன . |
நெற்றிக்கை | முன்படை ; மேற்கூரை தாங்கும் எதிர்க்கைமரம் . |
நெற்றிச்சுட்டி | மகளிரும் குழந்தைகளும் அணியும் நுதலணிவகை ; விலங்கின் நெற்றி வெள்ளை . |
நெற்றிச்சுழி | விலங்கின் நெற்றியில் உள்ள மயிர்ச்சுழி . |
நெற்றிச்சூட்டு | மகளிர் அணியும் நுதலணிவகை . |
நெற்றித்திலகம் | நெற்றிப்பொட்டு . |
நெற்றிப்பட்டம் | நுதலணிவகை . |
நெற்றிப்பொட்டு | திலகம் . |
நெற்று | முதிர்ந்து காய்ந்த காய் ; நெறிப்பு . |
நெற்றுதல் | மோதுதல் ; இலக்கில் தட்டுதல் ; பெறுதல் ; முதிர்தல் . |
நெற்றெடுத்தல் | உலர்ந்த காயைச் செடியிலிருந்து பறித்தெடுத்தல் ; நெற்றை உரித்து விதையெடுத்தல் ; விதை சேர்த்துவைத்தல் . |
நெறநெறெனல் | காண்க : நெறுநெறெனல் ; மென்மையற்றிருத்தற் குறிப்பு . |
நெறி | வழி ; சமயம் ; வளைவு ; சுருள் ; விதி ; ஒழுக்கம் ; செய்யுள்நடை ; குலம் ; வழிவகை ; ஆளுகை ; குதிரை முதலியவற்றின் நடை ; வீடுபேறு ; கோயில் ; தாழ்ப்பாள் ; கண் மண்டைக்குழி ; புறவிதழ் ஒடிக்கை ; காண்க : நெறிக்கட்டி ; மனநிலை . |
நெறிக்கட்டி | புண்கட்டிக்காக உடற்சந்துகளில் உண்டாகும் வீக்கம் . |
நெறிகேடன் | நல்லொழுக்கமில்லாதவன் . |
நெறிகேடு | கொடுங்கோன்மை , அநீதி ; தீயொழுக்கம் . |
நெறிசெய்தல் | ஆளுதல் ; நல்வழிப்படுத்துதல் . |
நெறித்தல் | புறவிதழ் ஒடித்தல் ; சினத்தால் புருவத்தை வளைத்தல் ; நிமிர்த்தல் ; கையாற்பிடித்துவிடுதல் ; முறுக்காயிருத்தல் ; மயிர் குழலுதல் ; நோக்குதல் . |
![]() |
![]() |
![]() |