பங்குரம் முதல் - பச்சோந்தி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பங்குரம் ஆற்றுமுடக்கு ; வளைவு .
பங்குரை அதிவிடயம் .
பங்குவழிநிலம் பங்குவழிப்படி நுகரும் பூமி .
பங்குவாளி நிலக்கிழார் .
பங்குவீதம் வீதாசாரப்படி ; சமமாயுள்ள பங்கு .
பங்குனி ஒரு மாதம் ; உத்தரநாள் .
பங்கேசம் சேற்றில் தோன்றும் தாமரை .
பங்கேருகம் சேற்றில் தோன்றும் தாமரை .
பச்சடம் மேற்பார்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
பச்சடி ஒரு கறிவகை ; பேறு , பாக்கியம் .
பச்சரிசி நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குற்றின அரிசி ; மா மரவகை ; காண்க : அம்மான் பச்சரிசி .
பச்சவடம் மேற்போர்வை , விரிப்பு , திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்ட சீலை .
பச்சாத்தாபம் செய்த குற்றத்தைக் குறித்து வருந்துதல் ; இரக்கம் .
பச்சிமகாண்டம் புது ஏற்பாடு .
பச்சிமத்தோன் சனி .
பச்சிமப்பிறை இளம்பிறை .
பச்சிமம் மேற்கு ; பின்புறம் ; பின்பட்டது .
பச்சியம் வியப்புக்குறிப்பு .
பச்சிரும்பு உருகின இரும்பு .
பச்சிலை பச்சையிலை ; ஒரு மரவகை ; பச்சிலைகளால் ஆகிய மருந்து ; நறைக்கொடி ; புகைச்சரக்கு ; துகில்வகை .
பச்சிலைப்பட்டு பசிய இலையுடைய பட்டு .
பச்சிலைமருந்து மருந்தாகப் பயன்படும் இலை .
பச்சிலையோணான் காண்க : பச்சோந்தி .
பச்சிறைச்சி புதிய ஊன் ; ஆறாப் புண் .
பச்சுடம்பு தாய்க்குக் குழந்தை பிறந்த பிறகு இருக்கும் புண்ணுடல் ; குழந்தையின் இளவுடல் ; அம்மைப்புண் காயாத உடம்பு .
பச்சுதி நழுவுகை .
பச்சூன் புதிய ஊன் ; ஆறாப் புண் .
பச்செனல் பசுமையாதற்குறிப்பு ; சிறப்பாயிருத்தற்குறிப்பு .
பச்செனவு பச்சை ; ஈரம் ; பொலிவு .
பச்சை பசுமை நிறம் ; மரகதம் ; பயறு ; திருமணத்தில் நான்காம் நாளில் மணமக்களை வாழ்த்திப் பரிசு வழங்கும் சடங்கு ; வெற்றிலை ; மணப்புல்வகை ; சாயத்துக்கு உதவும் பூடுவகை ; பச்சைகுத்திய அடையாளம் ; பசப்புநிறம் ; திருமால் ; புதன் ; நன்கொடை ; கப்பல் ; கைம்மாறு ; உணவுப்பொருள் ; வேகாதது ; உலராதது ; முற்றாதது ; ஆறாதது ; தூய்மை பண்ணப்படாதது ; தோல் ; போர்வை ; குளிர்ச்சி ; கொட்டசொல் ; வெளிப்படையானது ; மிகுதி ; இலாபம் ; அநாகரிகம் ; பயிர்கட்கு வரும் நோய்வகை .
பச்சைக்கருப்பூரம் ஒரு கருப்பூரவகை .
பச்சைக்கல் மரகதம் ; சுடாத செங்கல் ; கல்வகை ; காதணிவகை .
பச்சைக்கிளி கிளிவகை ; வெட்டுக்கிளி ; சிறுவர் விளையாட்டுவகை .
பச்சைக்குப்பி மதுவடைக்குங் குப்பிவகை .
பச்சைக்குழந்தை இளங்குழவி .
பச்சைக்கூடு பருவுடல் .
பச்சைக்கொம்பு இஞ்சி .
பச்சைக்கோடு ஒன்பான் மணிகளுள் ஒன்றான மரகதம் .
பச்சைகட்டு சிறு நன்கொடை ; சாந்தி செய்யும் மருந்து ; தற்கால சாந்தி .
பச்சைகுத்துதல் உடலிற் பச்சைக்கோலம் பதித்தல் .
பச்சைச்சடையன் பச்சைநிறச் சடையுடைய வயிரவன் .
பச்சைத்தண்ணீர் காய்ச்சாத குளிர்ந்த நீர் .
பச்சைத்தேரை தேரைவகை .
பச்சைத்தோல் பதனிடாத தோல் ; புண் ஆறின பின்பு தோன்றும் புதுத்தோல் .
பச்சைநாடான் காண்க : பச்சைவாழை .
பச்சைப்பசும்பொய் காண்க : பச்சைப்பொய் .
பச்சைப்பசேரெனல் பசுமையாயிருத்தற்குறிப்பு .
பச்சைப்படாம் ஒரு நீண்ட சீலைவகை .
பச்சைப்பதம் தானியத்தின் முற்றாப் பருவம் ; நன்றாய் வேகாத நிலைமை .
பச்சைப்பயறு பாசிப்பயறு ; உழுந்துவகை .
பச்சைப்பல்லக்கு பாடை .
பச்சைப்பாம்பு ஒரு பாம்புவகை .
பச்சைப்பால் காய்ச்சாத பால் .
பச்சைப்பானை சுடாத பானை .
பச்சைப்பிள்ளை பிறந்த குழந்தை ; அறியாப் பிள்ளை .
பச்சைப்பிள்ளைத்தாய்ச்சி கைக்குழந்தையை உடைய தாய் .
பச்சைப்புண் ஆறாத புண் .
பச்சைப்புளுகன் வீணாக இடம்பம் பேசுவோன் ; பெரும்பொய்யன் .
பச்சைப்பெருமாள் பச்சைநிறமுள்ள திருமால் ; ஒரு நெல்வகை .
பச்சைப்பொய் முழுப்பொய் .
பச்சைபச்சையாய்ப்பேசுதல் இழிசொற்களை வெளிப்படையாகச் சொல்லுதல் .
பச்சைபிடித்தல் செழிக்கத் தொடங்குதல் .
பச்சைமண் ஈரமுள்ள மண் ; மட்பாண்டங்களுக்குப் பிசைந்த மண் ; இளங்குழந்தை .
பச்சைமரம் உயிருள்ள மரம் ; வேலைக்குத் தகுதியாக்கப்படாத மரம் .
பச்சையன் பசிய நிறமுள்ள திருமால் .
பச்சையாய்ப்பேசுதல் வெளிப்படையாய்ப் பேசுதல் ; காண்க : பச்சைபச்சையாய்ப்பேசுதல் .
பச்சையிரும்பு உருக்கி வார்க்காத இரும்பு ; தேனிரும்பு .
பச்சையெழுதுதல் திருமணம் முதலிய சிறப்பு நாள்களில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கெழுதல் .
பச்சைவடம் ஒரு சேலைவகை .
பச்சைவாழை ஒரு வாழைவகை .
பச்சைவில் வானவில் ; மன்மதன்வில் .
பச்சைவெட்டு தூய்மை செய்யப்படாத மருந்து ; வெளிப்படை ; பழுக்காத காய் .
பச்சைவெண்ணெய் காய்ச்சாத பாலிலிருந்து எடுக்கும் வெண்ணெய் .
பச்சைவெயில் மாலைக்காலத்து வெயில் .
பச்சோந்தி ஓணான்வகை .