சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பிணம் | சவம் ; பிசாசம் . |
பிணர் | சருச்சரை ; கோங்கிலவுமரம் . |
பிணவல் | பன்றி , நாய் , மான் முதலியவற்றின் பெட்டை . |
பிணவு | பெண் . |
பிணன் | காண்க : பிணம் . |
பிணா | காண்க : பிணவு . |
பிணாப்பிள்ளை | பெண்பிள்ளை . |
பிணாரம் | பருமனுள்ளது ; விலங்கின் பருமன் . |
பிணி | நோய் ; கட்டுகை ; கட்டு ; பற்று ; பின்னல் ; அரும்பு ; துன்பம் ; நெசவுத்தறியின் நூற்படை . |
பிணி | (வி) கட்டு , பிணிஎன் ஏவல் . |
பிணிக்குறை | குழந்தைகட்கு நோயை உண்டாக்கும் பேய்க்கோள் . |
பிணிகை | கச்சு . |
பிணித்தல் | சேர்த்துக்கட்டுதல் ; வயப்படுத்துதல் . |
பிணித்தோர் | நோயாளிகள் . |
பிணிதல் | சாதல் . |
பிணிதெறித்தல் | நோய் குணமாகத் தொடங்குகை . |
பிணிப்பு | கட்டுகை ; கட்டு ; பற்று . |
பிணிமுகம் | மயில் ; பறவை ; அன்னம் ; முருகக் கடவுளின் யானை . |
பிணியகம் | காவலிடம் . |
பிணியன் | நோய்வாய்ப்பட்டவன் . |
பிணியாளன் | நோய்வாய்ப்பட்டவன் . |
பிணியாளி | நோய்வாய்ப்பட்டவன் . |
பிணியோலை | பிள்ளைகளின் இடுப்பில் எழுதிக் கட்டும் இரட்சையோலை . |
பிணிவீடு | இடையூறு நீங்குகை . |
பிணுக்கன் | மாறுபட்ட கொள்கையினன் . |
பிணை | இணைக்கப்படுகை ; உடன்பாடு ; பொருத்து ; கட்டு ; உத்தரவாதம் ; விலங்குகளின் பெண் ; பெண்மான் ; பூமாலை ; புறந்தருகை ; விருப்பம் ; தெப்பம் . |
பிணை | (வி) பிணையிடு ; கட்டு . |
பிணைச்சு | புணர்ச்சி . |
பிணைசொல்லுதல் | பிறருக்காகப் பொறுப்பு ஏற்றல் . |
பிணைத்தல் | இணைத்தல் ; கட்டுதல் ; கைகோத்தல் . |
பிணைதல் | சேர்தல் ; செறிதல் ; புணர்தல் . |
பிணைப்படுதல் | காண்க : பிணைபோதல் . |
பிணைப்பு | இணைப்பு , சேர்க்கை . |
பிணைபோதல் | பொறுப்பு ஏற்றுக்கொள்ளுதல் . |
பிணைமாடு | இணைக்கப்பட்ட மாடுகள் . |
பிணையடித்தல் | கதிரடிக்க எருதுகளைப் பிணைத்தோட்டுதல் . |
பிணையல் | ஒன்றுசேர்த்தல் ; மலர்மாலை ; பிணைமாடு ; கதவின் கீல் ; புணர்ச்சி ; காண்க : இணைக்கை . |
பிணையற்கை | காண்க : இணைக்கை . |
பிணையன்மாலை | மலர்மாலை . |
பிணையாளி | பிறருக்காகப் பொறுப்பு ஏற்பவன் . |
பிணையிலி | தக்கோரால் பேணப்படாதவர் . |
பிணைவு | இணைவு ; புணர்ச்சி . |
பித்தக்கட்டி | ஈரற்குலை நோய்வகை . |
பித்தக்காங்கை | பித்தத்தால் உண்டாகும் சூடு . |
பித்தக்காசம் | ஒரு காசநோய்வகை . |
பித்தக்காமாலை | காமாலை நோய்வகை . |
பித்தக்காய்ச்சல் | பித்தத்தினால் வரும் நோய்வகை . |
பித்தசாந்தி | பித்தந் தணிக்கும் மருந்து ; காண்க : பொன்னாங்காணி . |
பித்தசுரம் | காண்க : பித்தக்காய்ச்சல் . |
பித்தசூடு | காண்க : பித்தக்காங்கை . |
பித்தசோகை | சோகைநோய்வகை . |
பித்தநாடி | பித்தநிலையைக் குறிக்கும் நாடி . |
பித்தப்பை | பித்தநீர் தங்கும் கல்ல¦ரல் . |
பித்தம் | ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை ; பித்தம் என்னும் பிணிக்கூறு ; மயக்கம் ; பைத்தியம் ; கூத்தின்வகை ; மிளகு ; மண்வெட்டிக் கழுத்து . |
பித்தமயக்கம் | தலைக்கிறுகிறுப்பு ; மயக்கநோய் . |
பித்தமேல¦டு | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
பித்தல் | நினைவு மாறுபட்டுக் குழறுகை ; மண்வெட்டிக் கழுத்து ; விளிம்பு . |
பித்தலாட்டம் | ஒன்றை மற்றொன்றாய்க் காட்டி வஞ்சிக்கை . |
பித்தலாடகம் | ஒன்றை மற்றொன்றாய்க் காட்டி வஞ்சிக்கை . |
பித்தவாயு | குன்மநோய்வகை ; கிறுகிறுப்பு நோய் வகை ; ஈரல்நோய்வகை . |
பித்தவெடிப்பு | பித்தத்தினால் காலில் உண்டாகும் பிளப்பு . |
பித்தவெரிவு | பித்தத்தால் எரிச்சல் உண்டாக்கும் நோய்வகை . |
பித்தளை | செம்பு , துத்தநாக மிவற்றின் கலப்பு . |
பித்தளையாடகம் | காண்க : பித்தலாட்டம் . |
பித்தன் | சிவன் , பைத்தியக்காரன் ; மூடன் ; கள்வன் . |
பித்தாசயம் | காண்க : பித்தப்பை . |
பித்தாதிக்கம் | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
பித்தாதிகாரம் | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
பித்தி | சுவர் ; பங்கு ; பித்தம் ; பின்பக்கம் ; காண்க : சாதிமல்லிகை ; பைத்தியக்காரி . |
பித்திகம் | காண்க : சாதிமல்லிகை ; சிறுசண்பகம் . |
பித்திகை | சுவர் ; அண்டச்சுவர் ; காண்க : சாதிமல்லிகை ; சிறுசண்பகம் . |
பித்து | பித்தநீர் ; பைத்தியம் ; அறியாமை ; மிக்க ஈடுபாடு . |
பித்துக்கொள்ளி | பைத்தியம் பிடித்தவர் . |
பித்துப்பிடித்தல் | பைத்தியமாதல் . |
பித்தேறி | பைத்தியங்கொண்டவர் . |
![]() |
![]() |
![]() |