பித்தை முதல் - பிரகாரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பித்தை மக்கள் தலைமயிர் .
பித்தோன்மதம் பைத்தியவெறி .
பிதக்குதல் நசுங்குதல் .
பிதகம் இடி .
பிதளை எண்ணெய்ப் பாண்டம் .
பிதற்றர் பிதற்றுவோர் .
பிதற்று அறிவின்றிப் பேசும் பேச்சு .
பிதற்றுதல் அறிவின்றிக் குழறுதல் ; உணர்வின்றி விடாதுபேசுதல் .
பிதா தந்தை ; கடவுள் ; பிரமன் ; சிவன் ; அருகன் ; காண்க : பெருநாரை .
பிதாமகன் தந்தையைப் பெற்ற பாட்டன் ; பிரமன் .
பிதாமகி தந்தையைப் பெற்ற பாட்டி .
பிதி காண்க : பிதகம் .
பிதிகாரம் கழுவாய் , பரிகாரம் .
பிதிர் பூந்தாது ; பொடி ; திவலை ; துண்டம் ; பொறி ; காலநுட்பம் ; கைந்நொடி ; விடுகதை ; வியத்தகு செயல் ; சேறு ; தந்தை ; யமலோகத்தில் வாழும் தேவசாதியார் ; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா .
பிதிர் (வி) பிதுங்கச்செய் .
பிதிர்க்கடன் இறந்தவர்க்குச் செய்யும் கடன் .
பிதிர்கருமம் தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன் .
பிதிர்த்தல் சொரிவித்தல் ; உதிர்த்தல் .
பிதிர்தல் உதிர்தல் ; சிதறுதல் ; கிழிதல் ; பரத்தல் ; மனங்கலங்குதல் .
பிதிர்திதி ஆண்டுதோறும் தந்தை இறந்த நாளில் செய்யும் சடங்கு ; அமாவாசை .
பிதிர்தேவர் தென்புலத்தார் .
பிதிர்ந்த பிளந்த .
பிதிர்நாள் அமாவாசைபோன்ற பிதிர்க்கடன்கள் செய்தற்குரிய நாள்கள் ; மகநாள் .
பிதிர்பதி பிதிரர்களின் தலைவனான யமன் .
பிதிர்பிண்டம் இறந்தோர்க்கிடும் அமுது .
பிதிர்பிதிர் தந்தையைப் பெற்ற பாட்டன் .
பிதிர்யானம் புண்ணியசீலர் தேவலோகத்திற்கு ஏறிச்செல்லும் வானூர்தி .
பிதிர்வழி தந்தைவழி ; முன்னோர்வழி .
பிதிர்வனம் சுடுகாடு .
பிதிவனேசுரன் சிவபிரான் .
பிதிரர் யமலோகத்தில் வாழும் ஒரு தேவசாதியார் .
பிதிரார்ச்சிதம் தந்தைவழி முன்னோர் தேடிய சொத்து .
பிதிருலகம் பிதிர்தேவதைகள் வாழும் உலகம் .
பிதிவி ஊழியன் .
பிது பெருமை ; தந்தை .
பிதுக்கம் பிதுங்குகை ; பிதுங்கியிருக்கும் பாகம் ; பிதுக்கப்பட்டது ; அண்டவாதம் .
பிதுக்குதல் பிதுங்கச் செய்தல் ; உப்பும்படி செய்தல் .
பிதுங்குதல் அமுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல் ; சுவரிற் செங்கல் வெளிநீண்டிருத்தல் .
பிதுர் தந்தை ; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா ; காண்க : பிதிரர் .
பிதுரம் காண்க : பிதகம் .
பிதுரு காண்க : பிதுர் .
பிந்தியாகாலம் சாயங்காலம் .
பிந்து விந்து , சுக்கிலம் , துளி , புள்ளி ; சத்திதத்துவம் .
பிந்துதல் பின்னிடுதல் ; தாழ்தல் ; விரைவு குறைதல் .
பிப்பலகம் முலைக்காம்பு .
பிப்பலம் அரசமரம் ; நீர் ; புள்வகை .
பிப்பலி காண்க : திப்பிலி .
பிப்பிலி காண்க : திப்பிலி .
பிப்பலிகை அரசமரம் .
பிபீலி காண்க : பிபீலிகை .
பிபீலிகாவாதம் எறும்பு முதலியவற்றின் பேச்சை உணரும் அறிவு .
பிபீலிகை எறும்பு .
பிம்பம் உருவம் ; எதிரொளிக்கும் மூலப்பொருள் ; பிரதிமை ; கோவைக்கனி .
பிம்பி கோவைக்கொடி .
பிய்த்தல் கிழித்தல் ; வேறாகும்படி பிரித்தல் ; பஞ்சு முதலியன பன்னுதல் ; இலை முதலியவற்றைச் சிதைத்தல் ; பிடுங்குதல் ; ஊடறுத்தல் ; வருத்துதல் .
பிய்த்துக்காட்டுதல் விளங்கும்படி தனித்தனி எடுத்துக்காட்டிச் சொல்லுதல் .
பிய்தல் கிழிதல் ; பிரிந்துபோதல் ; ஊடறுதல் ; சிதைவுறுதல் ; பஞ்சு முதலியன பன்னப் பெறுதல் .
பியந்தை மருதப்பண்வகை .
பியல் பிடர் .
பிரக்கியம் அறிவு .
பிரக்கியாதம் கீர்த்தி ; புகழ் ; வெளிப்படையானது .
பிரக்கியாதி புகழ் ; வெளிப்படை .
பிரக்கிரமம் தொடக்கம் .
பிரக்கினை உணர்வு ; அறிவு .
பிரகடம் வெளிப்படுத்துகை .
பிரகடனம் வெளியீடு ; விளம்பரம் .
பிரகதி கத்தரிச்செடி ; காண்க : கண்டங்கத்தரி ; தும்புருவின் வீணை .
பிரகரணப்பிரகணம் அறம் , பொருள் , இன்பம் இவற்றைப் பொருளாகக்கொண்ட நாடகவகை .
பிரகரணம் சமயம் ; அத்தியாயம் ; வாய்ப்பு ; ரூபகம் பத்தனுள் ஒன்று ; அறம் , பொருள் இவற்றைப் பொருளாகக்கொண்ட நாடக வகை .
பிரகலை கீதவுறுப்புள் ஒன்று .
பிரகாசத்தி அப்பிரகம் .
பிரகாசம் ஒளி ; வெயில் ; புகழ் ; குணம் .
பிரகாசனம் ஒளி ; விரித்துவிளக்குகை ; வெளிப்படுத்துகை .
பிரகாசித்தல் ஒளிசெய்தல் ; மேன்மையடைதல் ; அறிவுநிறைதல் ; விரிவாய்க் கூறுதல் .
பிரகாரம் தன்மை ; விதம் ; ஒப்பு ; வகுப்பு .