சொல்
|
அருஞ்சொற்பொருள் |
புட்பபுடம் | குடங்கை இரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை . |
புட்பம் | பூ ; வாழை ; மகளிர் தீட்டு ; கண்ணோய் வகை ; காண்க : புட்பகம் . |
புட்பரசம் | பூவின் தேன் ; மகரந்தம் . |
புட்பரதம் | பூந்தேர் ; பூவின் தேன் ; பூந்தூள் . |
புட்பராகம் | ஒன்பதுவகை மணியுள் ஒன்று . |
புட்பவதி | பூப்படைந்த பெண் . |
புட்பவருடம் | மலர்மழை ; காண்க : புட்பாஞ்சலி ; சிறுதூற்றல் . |
புட்பவாகனன் | அருகன் . |
புட்பவிமானம் | பூந்தேர் . |
புட்பறை | பறைவகை . |
புட்பாகன் | திருமால் . |
புட்பாசவம் | பூந்தேன் . |
புட்பாசனன் | பிரமன் . |
புட்பாசனி | திருமகள் . |
புட்பாஞ்சலி | கைநிறையக்கொண்ட பூ ; பூவிட்டு வணங்கல் ; இரண்டு கையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை . |
புட்பித்தல் | மலர்தல் ; முகமலர்தல் ; பூப்படைதல் . |
புடகம் | இலைத்தொன்னை ; தாமரை . |
புடபாகம் | புடமிடுகை ; செரிக்கை ; சமைக்கை . |
புடம் | புடமிடுங்கலம் ; மூடி ; வெயிலில் வைத்தல் முதலிய வழிகளாற் பக்குவப்படுத்துகை ; புடமிடுகை ; பக்கம் ; இடம் ; உள்வளைவு ; இலைக்கலம் ; கண்ணிமை ; கோவணம் ; மூடுகை ; கோள்களின் உண்மையான அன்றாடப்போக்கு ; ஒரு வானவளவைவகை ; தூய்மை . |
புடம்போடுதல் | காண்க : புடமிடுதல் ; மிக வருத்துதல் . |
புடமிடுதல் | பொன் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; பக்குவப்படுத்துதல் ; எரித்தல் . |
புடல் | ஒரு கொடிவகை ; பேய்ப்புடல் . |
புடலை | படர்கொடிவகை . |
புடவி | பூமி , நிலவுலகம் . |
புடவித்தல் | வீங்குதல் . |
புடவிமூலம் | குறட்டைவகை . |
புடவை | காண்க : புடைவை . |
புடாயம் | மாணிக்கக் குற்றவகை . |
புடை | பக்கம் ; இடம் ; பகுதி ; முறை ; கிணற்றினுடைய புடைப்பு ; எலிவளை ; துளை முதலியன ; ஏழனுருபு ; திரட்சி ; அடி ; குத்து ; அடித்து உண்டாக்கும் ஒலி ; பகை ; போர் ; பழம் முதலியவற்றின் பருத்த பாகம் . |
புடை | (வி) அடி ; குத்து ; குட்டு ; வீங்கு ; விசிறு . |
புடைக்கருத்து | இனம்பற்றிச் சார்ந்துவரும் கருத்து . |
புடைக்காலம் | இடைப்பட்ட காலம் . |
புடைக்கொள்ளுதல் | தட்டுதல் ; அருகு பருத்தல் . |
புடைகவலுதல் | வேறு சிந்தையுடைத்தாதல் . |
புடைகவற்றி | வேறுசிந்தை . |
புடைகொள்ளுதல் | காண்க : புடைக்கொள்ளுதல் ; புரையோடுதல் . |
புடைத்தல் | அரிசி முதலியவற்றைத் தவிடு , தூசி முதலியன போகும்படி முறத்தில் இட்டுத் தட்டுதல் ; அடித்தல் ; குத்துதல் ; கொட்டுதல் ; சிறகடித்தல் ; நூல் முதலியன ஏற்றுதல் ; துவைத்தல் ; குட்டுதல் ; உடைத்தல் ; நீந்துதல் ; வீங்குதல் ; பருத்தல் ; வெளிப்படுதல் ; ஆரவாரித்தல் ; அலைத்துப் பெருகுதல் ; தட்டுதல் . |
புடைநகர் | புறநகர் . |
புடைநூல் | நூல்வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண்முடிபு ஒரு புடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய நூல் . |
புடைப்பு | கொழித்தல் ; அடித்தல் ; வீங்குதல் ; இரகசியம் முதலியன வெளியாகை . |
புடைப்பெண் | வைப்பாட்டி . |
புடைபடுதல் | அணுகுதல் ; இடம்படுதல் ; மிகுதியாதல் ; திரண்டு பருத்தல் . |
புடைபரத்தல் | சுற்று விரிதல் . |
புடைபெயர்ச்சி | வெளியேறுகை ; நிலைமாறுகை ; கருத்தாவின் தொழிற்பாடு . |
புடைபெயர்தல் | நிலைமாறுதல் ; வெளியேறுதல் ; அசைதல் ; எழுந்திருத்தல் ; தொழிற்படுதல் . |
புடைமண் | சுதை . |
புடையல் | மாலை . |
புடையன் | ஒரு பாம்புவகை . |
புடையுண்ணுதல் | அடிபடுதல் . |
புடைவை | மகளிர் சீலை ; ஆடை . |
புடோதகம் | தெங்கு . |
புடோல் | காண்க : புடல் . |
புண் | உடல் ஊறு ; தசை ; வடு ; மனநோவு . |
புண்டரம் | சந்தனம் , நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி ; வெண்கரும்பு ; கழுகு ; காண்க : குருக்கத்தி . |
புண்டரிகத்தவன் | பிரமன் . |
புண்டரிகத்தி | திருமகள் . |
புண்டரிகம் | தென்கீழ்த்திசையானை ; புலி ; வண்டு ; தாமரை ; வெண்டாமரை . |
புண்டரிகன் | திருமால் . |
புண்டரிகை | திருமகள் . |
புண்டரீகபுரம் | புலிக்கால் முனிவர் வணங்கிய சிதம்பரம் . |
புண்டரீகம் | வெண்டாமரை ; காண்க : புண்டரிகம் ; கழுகு ; காண்க : மாசிபத்திரி ; பெருநோய்வகை ; வெண்கொற்றக்குடை ; வேள்விவகை ; புற்று ; அரியணை ; சவரி . |
புண்டரீகாட்சன் | தாமரைக்கண்ணனான திருமால் . |
புண்ணழற்சி | புண்ணால் உண்டாகும் எரிவு . |
புண்ணழற்றி | புண்ணில் வைக்கும் காரமருந்து . |
புண்ணழற்றுதல் | காண்க : புண்ணழற்சி . |
புண்ணளை | புண்ணின் குழி . |
புண்ணாக்கு | காண்க : பிண்ணாக்கு . |
புண்ணியகருமம் | நற்செயல் . |
புண்ணியசாந்தம் | சாணி ; திருநீறு . |
புண்ணியதிசை | வடக்கு . |
புண்ணியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் ; புண்ணியதலம் . |
புண்ணியம் | அறம் ; தருமம் ; நல்வினை ; தூய்மை ; தெய்வத்தன்மை ; நற்செயல் ; காண்க : நவபுண்ணியம் ; புண்ணியசாந்தம் ; நீர்த்தொட்டி . |
புண்ணியமுதல்வன் | கடவுள் ; புத்தன் . |
புண்ணியமுதல்வி | பார்வதி ; தவத்திற் சிறந்தவள் . |
புண்ணியமூர்த்தி | புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன் ; கடவுள் ; புத்தன் ; அருகன் . |
![]() |
![]() |
![]() |