சொல்
|
அருஞ்சொற்பொருள் |
புண்ணியவதி | பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் . |
புண்ணியவாட்டி | பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் . |
புண்ணியவான் | புண்ணியமிக்கவன் ; அறஞ்செய்பவன் ; பேறுபெற்றவன் . |
புண்ணியன் | காண்க : புண்ணியவான் ; கடவுள் ; சிவபிரான் ; அருகன் ; புத்தன் . |
புண்ணியை | காண்க : புண்ணியவதி ; துளசி . |
புண்ணீர் | இரத்தம் . |
புண்ணுடம்பு | பிள்ளைபெற்ற பச்சையுடம்பு ; பாவ உடல் . |
புண்ணுறுத்துதல் | வருத்துதல் . |
புண்படுத்துதல் | புண்ணுண்டாக்குதல் ; வருத்துதல் ; மனம் நோவச்செய்தல் . |
புண்படுதல் | காயமடைதல் ; வருந்துதல் . |
புண்வழலை | புண்ணிலிருந்து வடியும் சீழ் . |
புண்வாய் | புண்ணின் துளை . |
புணர் | புதுமை ; சேர்க்கை . |
புணர் | (வி) சேர் , அணை ; புணர்என் ஏவல் . |
புணர்க்கை | சேர்க்கை ; சூழ்ச்சி ; மாயம் . |
புணர்குறி | தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம் . |
புணர்ச்சி | சேர்க்கை ; ஒரே நாட்டார் ஆதல் ; கலவி ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; முன்பின் தொடர்பு ; அணிகலன் . |
புணர்ச்சிவிதும்பல் | புணர்ச்சிக்கு விரையும் விருப்பம் . |
புணர்த்தல் | சேர்த்தல் ; எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல் ; நிகழ்த்துதல் ; பாகுபடுத்துதல் ; கூட்டிச்சொல்லுதல் ; கட்டுதல் ; படைத்தல் ; பிரபந்தமாகச் செய்தல் . |
புணர்தம் | புனர்பூசநாள் . |
புணர்தல் | பொருந்துதல் ; கலவிசெய்தல் ; அளவளாவுதல் ; மேற்கொள்ளுதல் ; ஏற்புடையதாதல் ; விளங்குதல் ; எழுத்து முதலியன சந்தித்தல் ; உடலிற்படுதல் ; கூடியதாதல் ; தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சி உரிப்பொருள் . |
புணர்தை | காண்க : புணர்தம் . |
புணர்ப்பு | தொடர்பு ; கலவி ; சேர்க்கை ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; நட்பு ; துணை ; உடல் ; கடல் ; சூழ்ச்சி ; ஏவல் ; பிரபந்தம் ; மாயம் ; செயல் . |
புணர்வு | சேர்க்கை ; கலவி ; இசைப்பு ; உடல் . |
புணரி | கடல் ; அலை ; கரை ; தனிமை . |
புணரியிற்றுயின்றோன் | கடலிற் பள்ளிகொண்ட திருமால் . |
புணரியோர் | ஒன்றுகூட்டியவர் . |
புணி | மயிர்முடி . |
புணை | தெப்பம் ; மரக்கலம் ; உதவி ; மூங்கில் ; விலங்கு ; ஈடு ; ஆள் பொறுப்பு ; ஒப்பு . |
புணைகயிறு | பூட்டாங்கயிறு . |
புணைசல்விடுதல் | காண்க : பிணையடித்தல் . |
புணைத்தல் | கட்டல் . |
புணைப்படுதல் | பொறுப்பாதல் . |
புணையலடித்தல் | காண்க : பிணையடித்தல் . |
புத்தகம் | நூல் ; ஓவியம் தீட்டிய துணி ; மயிலிறகு . |
புத்தசேடம் | உண்ட மிச்சில் . |
புத்தசைத்தியம் | புத்தாலயம் . |
புத்தப்புதிய | மிகப் புதிய . |
புத்தம்புதிய | மிகப் புதிய . |
புத்தம் | புத்தமதம் ; உணவு . |
புத்தமதம் | பௌத்தசமயம் . |
புத்தமுதம் | புதிய உணவு . |
புத்தர் | புத்தப் பதவிபெற்ற பெரியோர்கள் ; புத்த சமயத்தோர் . |
புத்தன் | கௌதமர் ; புத்தசமயத்தான் ; திருமாலவதாரத்துள் ஒன்று ; அருகன் ; புதியவர் ; புதியது ; நாணயவகை . |
புத்தாடை | புதிய ஆடை . |
புத்தாத்திரி | காண்க : அருநெல்லி . |
புத்தி | அறிவு ; இயற்கையுணர்வு ; ஆராய்ந்து செய்யும் கரணம் ; போதனை ; வழிவகை ; கழுவாய் ; உரிமை ; கோளின் நடை ; புட்டி . |
புத்திக்கூர்மை | கூர்த்த அறிவு . |
புத்திகெட்டவன் | மூடன் ; நேர்மையில்லாதவன் . |
புத்திகெட்டுப்போதல் | உணர்வுகெடுதல் ; தவறுதலான செயல் செய்தல் ; நேர்மையற்றுப் போதல் . |
புத்திகோசரம் | அறிவுக்குப் புலப்படுவது . |
புத்திசாலி | அறிவாளி . |
புத்திதடுமாறுதல் | காண்க : புத்திகெட்டுப்போதல் . |
புத்திதம் | எட்டிமரம் . |
புத்திநுட்பம் | அறிவுக்கூர்மை . |
புத்திபண்ணுதல் | எண்ணிப்பார்த்தல் ; உறுதியாகக் கொள்ளுதல் . |
புத்திமட்டு | புத்திக்குறைவு . |
புத்திமதி | அறிவுரை . |
புத்திமயக்கம் | அறிவுக்கலக்கம் ; பைத்தியம் . |
புத்திமாறாட்டம் | பைத்தியம் . |
புத்திமான் | காண்க : புத்திசாலி . |
புத்தியறிதல் | அறிவுதெளிதல் ; பெண்கள் பூப்படைதல் . |
புத்தியீனம் | அறியாமை . |
புத்தியீனர் | அறிவுக்கேடர் . |
புத்தியூட்டுதல் | அறிவுபுகட்டுதல் . |
புத்திரகன் | விசேட தீட்சை பெற்றவன் ; அன்பன் ; வஞ்சகன் . |
புத்திரகாமேட்டி | புதல்வனைப் பெற விரும்பிச் செய்யும் வேள்விவகை . |
புத்திரசந்தானம் | ஆண்வழி . |
புத்திரசம்பத்து | மக்கட்செல்வம் . |
புத்திரசோகம் | பிள்ளையை இழந்த துன்பம் . |
புத்திரத்தானம் | சந்தானத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு ஐந்தாமிடம் . |
புத்திரநாதன் | பிள்ளையினால் காக்கப்படுபவன் . |
புத்திரப்பிரதிநிதி | தத்துப்பிள்ளை . |
புத்திரபௌத்திரபாரம்பரியம் | வமிசபரம்பரை . |
புத்திரமார்க்கம் | காண்க : கிரியாமார்க்கம் . |
![]() |
![]() |
![]() |