சொல்
|
அருஞ்சொற்பொருள் |
புத்திரலாபம் | மகப்பேறு . |
புத்திரன் | மகன் ; மாணாக்கன் ; அறநூலில் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர் . |
புத்திரி | மகள் ; காண்க : கீழாநெல்லி ; கரிமுள்ளி . |
புத்திரிகாசுதன் | மகளுடைய மகன் ; காண்க : புத்திரிபுத்திரன் . |
புத்திரிகை | மகள் ; சித்திரப்பாவை . |
புத்திரிபுத்திரன் | தன் மகள்வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் . |
புத்திரேடணை | பிள்ளைகளிடம் அன்பு . |
புத்திவான் | காண்க : புத்திசாலி . |
புத்திவிருத்தி | அறிவுப்பெருக்கம் . |
புத்து | புதல்வரில்லாதார் அடையும் நரகவகை ; பௌத்தமதம் ; புற்று . |
புத்துரை | புதிய உரை . |
புத்தேணாடு | காண்க : புத்தேளுலகம் . |
புத்தேள் | புதுமை ; புதியவள் ; தெய்வம் ; தேவர் . |
புத்தேளிர் | வானோர் , தேவர் . |
புத்தேளுலகம் | வானுலகு . |
புத்தேன் | எட்டிமரம் . |
புத்தோடு | புதுப்பானை . |
புத | வாயில் . |
புதசனன் | அறிஞன் . |
புதஞ்செய்தல் | தாவியெழுதல் . |
புதம் | மேகம் ; அறிவு . |
புதமெழுதல் | காண்க : புதஞ்செய்தல் . |
புதர் | தூறு ; புற்சாதி ; மருந்துப்பூண்டு ; அரும்பு . |
புதரவண்ணான் | காண்க : இராப்பாடி . |
புதல் | தூறு ; ஒரு புல்வகை ; மருந்துப்பூண்டு ; அரும்பு ; புருவம் . |
புதல்வர்ப்பேறு | ஆண்மக்களைப் பெறுகை . |
புதல்வன் | மகன் ; மாணாக்கன் ; குடி . |
புதல்வி | மகள் . |
புதவம் | வாயில் ; அறுகு . |
புதவாரம் | புதன்கிழமை . |
புதவு | கதவு ; வாயில் ; மதகு ; திட்டிவாசல் ; குகை ; அறுகம்புல் . |
புதளி | புலால் . |
புதற்பூ | காண்க : நிலப்பூ . |
புதன் | ஒன்பது கோள்களுள் ஒன்று ; கிழமைகளுள் ஒன்று ; புலவன் ; தேவன் . |
புதா | கதவு ; மரக்கானாரை ; பெருநாரை . |
புதானன் | அறிஞன் ; குரு . |
புதிசு | புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை . |
புதிது | புதுமையானது ; புதியது ; திருவிளக்கின்முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை . |
புதியது | அறுவடையானதும் கொண்டாடும் பண்டிகை ; புதிதாகச் சமைத்த சோறு . |
புதியதுண்ணுதல் | முதலில் விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல் ; புதிதாய் ஒன்றைப் புசித்தல் . |
புதியமனிதன் | அயலான் ; வேலையிற் புதிதாக அமர்ந்தவன் ; புதிதாகப் பெற்றெடுத்த ஆண் குழந்தை . |
புதியர் | புதிதாக வந்தவர் ; விருந்தினர் . |
புதியவர் | புதிதாக வந்தவர் ; விருந்தினர் . |
புதியனபுகுதல் | சொல் , வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகை . |
புதியோர் | காண்க : புதியவர் . |
புதிர் | திருவிளக்கின்முன் வைக்கப்பட்ட முதல் விளைச்சற் காணிக்கை ; விடுகதை . |
புதினக்கடுதாசி | செய்தித்தாள் . |
புதினம் | புதுமை , நூதனம் , செய்தி ; வியப்பு ; கதை . |
புதினா | கீரைவகை . |
புதுக்கட்டு | புதிய முறை . |
புதுக்கணித்தல் | அழகுபெறுதல் . |
புதுக்கணிப்பு | புதியவொளி . |
புதுக்கருக்கு | வேலைத் தொடக்கத்தில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுறுசுறுப்பு ; புதுமை . |
புதுக்கலம் | புதிய மட்பாண்டம் . |
புதுக்குடி | புதிதாய் வந்தேறிய குடி . |
புதுக்குதல் | புதுப்பித்தல் ; அலங்கரித்தல் . |
புதுக்குப்புறம் | கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு ஒதுக்கிவைக்கப்பட்ட அறக்கட்டளை . |
புதுக்கோள் | புதிதாகப் பற்றிக்கொள்ளப்பட்டது . |
புதுச்சரக்கு | புதிய வாணிகப் பண்டம் ; காண்க : ஆகாமியம் . |
புதுத்திங்கள் | பிறைச்சந்திரன் . |
புதுநடை | புதுமாதிரியான முறை அல்லது ஒழுக்கம் . |
புதுநிறை | புதுவெள்ளம் . |
புதுநீர்விழவு | ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் . |
புதுநீராட்டு | ஆற்றில் புதுநீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம் . |
புதுப்பழக்கம் | புதிய வழக்கம் ; பழக்கமில்லாதவன் செயல் . |
புதுப்பித்தல் | பழுதுபார்த்தல் ; காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல் . |
புதுப்புனல்விழவு | காண்க : புதுநீர்விழவு . |
புதுப்புனலாட்டு | காண்க : புதுநீர்விழவு . |
புதுப்பெண் | புதிதாக மணமான பெண் . |
புதுப்பெயல் | முதன்முதல் பெய்யும் மழை . |
புதுமணம் | கலியாணம் . |
புதுமணவாளன் | புதிதாக மணஞ்செய்து கொண்டவன் ; நித்திய கல்யாணன் ; தினமும் இன்பம் நுகர்பவன் . |
புதுமாடு | பழக்கப்படாத மாடு . |
புதுமுகனை | தொடக்கம் . |
புதுமை | புதிதாந்தன்மை ; பழக்கமின்மை ; வியப்பு ; மிகுதி ; எழில் . |
![]() |
![]() |
![]() |