ஆசாமிசோரி முதல் - ஆசினி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆசியம் வாய் ; முகம் ; சிரிப்பு ; முகத்திற்குரியது ; பரிகாசம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று .
ஆசிரமம் முனிவர் உறைவிடம் ; பன்னசாலை ; வாழ்க்கைநிலை .
ஆசிரமி ஆசிரமநிலையில் நிற்பவன் ; சன்னியாசி .
ஆசிரயணம் சார்ந்து நிற்கை .
ஆசிரயம் சார்ந்து நிற்கை .
ஆசிரயித்தல் சார்தல் .
ஆசிரிதம் சார்ந்திருக்கை .
ஆசிரிதன் சார்ந்திருப்பவன் .
ஆசிரியக்கல் தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு .
ஆசிரியச்சீர் காண்க : அகவல் உரிச்சீர் .
ஆசிரியச் சுரிதகம் அகவலால் ஆகிய சுரிதகம் என்னும் பாவுறுப்பு .
ஆசிரியத்தளை மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத் தொடுக்கும் செய்யுள் தளை .
ஆசிரியத்தாழிசை ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ; ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ , மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது .
ஆசிரியத்துறை காண்க : அகவற்றுறை .
ஆசிரியப்பா காண்க : அகவற்பா .
ஆசிரியப்பிரமாணம் ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி .
ஆசிரியம் காண்க : அகவற்பா ; ஆசிரியக்கல் .
ஆசிரியவசனம் மேற்கோள் .
ஆசிரியவிருத்தம் காண்க : அகவல்விருத்தம் .
ஆசிரியவுரிச்சீர் காண்க : அகவல்உரிச்சீர் .
ஆசிரியன் குரு ; போதகாசிரியன் ; நூலாசிரியன் ; உரையாசிரியன் ; புலவன் .
ஆசினி ஈரப்பலா ; மரவயிரம் ; மரப்பொதுப்பெயர் ; மரவுரி ; வானம் ; சிறப்பு .
ஆசாமிவாரிச் சிட்டா இனவாரி வரிக்கணக்கு .
ஆசார்யாபிடேகம் குருவாதற்குச் செய்யப்படும் சடங்கு .
ஆசாரக்கணக்கு கோயிலில் ஆசாரங்களைக் குறித்து வைக்கும் புத்தகம் .
ஆசாரக்கள்ளன் ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் .
ஆசாரக்கள்ளி ஒழுக்கமுடையாள்போல் நடிப்பவள் .
ஆசாரங்கூட்டுதல் தூய்மையாகச் செய்தல் .
ஆசாரச்சாவடி பொதுச்சாவடி ; கொலுமண்டம் .
ஆசாரஞ்செய்தல் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல் .
ஆசாரப்பிழை ஒழுக்கத்தவறு .
ஆசாரபரன் ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன் .
ஆசாரபோசன் பகட்டுத் தோற்றமுள்ளவன் .
ஆசாரம் சாத்திர முறைப்படி ஒழுகுகை ; நன்னடை ; காட்சி ; வியாபகம் ; சீலை ; படை ; அரசர்வாழ் கூடம் ; தூய்மை ; பெருமழை ; உறுதிப்பொருள் ; முறைமை .
ஆசாரம்பண்ணுதல் உபசாரஞ்செய்தல் .
ஆசாரலிங்கம் சிவலிங்க பேதங்களுள் ஒன்று .
ஆசாரவாசல் தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் .
ஆசாரவாயில் தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் .
ஆசாரவீனன் ஒழுக்கங்கெட்டவன் .
ஆசாரவீனி ஒழுக்கங்கெடடவள் .
ஆசாரவீனை ஒழுக்கங்கெடடவள் .
ஆசாரவுபசாரம் காண்க : ஆசாரோபசாரம் .
ஆசாரி மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் ; கம்மாளர் பட்டப்பெயர் ; குரு ; ஒழுக்கமுள்ளவன் .
ஆசாரியசம்பாவனை நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை .
ஆசாரியப்பட்டம் குருவாக அபிடேகமாகும் பொழுது தாங்கும் பட்டம் .
ஆசாரியபக்தி குருபக்தி .
ஆசாரியபூசனை குருக்களுக்குரிய காணிக்கை .
ஆசாரியபோகம் ஆசாரியன் அனுபவிக்கும் மானியம் .
ஆசாரியன் குரு ; சமயத்தலைவன் ; ஆசிரியன் .
ஆசாரியன் திருவடியடைதல் இறந்து நற்கதி அடைதல் .
ஆசாரியாபிடேகம் குருவாக அமர்த்தும் சடங்கு .
ஆசாரோபசாரம் மிக்க மரியாதை .
ஆசாள் குருபத்தினி ; தலைவி .
ஆசான் ஆசிரியன் ; புரோகிதன் ; மூத்தோன் ; வியாழன் ; அருகன் ; முருகக்கடவுள் ; பாலையாழ்த்திறவகை ; காந்தாரம் , சிகண்டி , தசாக்கரி , சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல் .
ஆசான்றிறம் குரலுக்குரிய திறம் ; பாலையாழ்த்திறம் .
ஆசானங்கை காட்டாமணக்கு .
ஆசானுபாகு முழந்தாளளவு நீண்ட கையுடையோன் .
ஆசானுவாகு முழந்தாளளவு நீண்ட கையுடையோன் .
ஆசி வாழ்த்து ; வாழ்த்தணி ; ஒத்த தரை ; போர் .
ஆசிக்கல் காகச்சிலை .
ஆசிகம் முகம் .
ஆசிடுதல் பற்றாசு வைத்தல் ; நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல் ; எதுகையில் ய , ர , ல , ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல் .
ஆசிடை வாழத்து ; கூட்டம் ; ஆடை .
ஆசிடையெதுகை காண்க : ஆசெதுகை .
ஆசிடைவெண்பா நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது .
ஆசித்தல் விரும்புதல் .
ஆசிதகம் இருத்தல் .
ஆசிதம் ஒருவண்டிப் பாரம் ; இருநூறு துலாங்கொண்ட பாரம் ; வாழுமிடம் ; நகரம் .
ஆசிமொழி வாழ்த்தணி .
ஆசியக்காரன் விகடம் செய்வோன் .
ஆசியசீரகம் கருஞ்சீரகம் .
ஆசியநாடகம் நகைச்சுவையுள்ள நாடகம் .
ஆசாமிசோரி ஆளைத் திருடுகை .
ஆசாமிவாரி இனவாரி .
ஆசாமிவாரி இசாபு அடங்கல் கணக்கு .