சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பெயலை | மழை . |
பெரிசு | பெரியது ; மிகவும் . |
பெரிது | பெரியது ; மிகவும் . |
பெரிய | பெரிதான ; மூத்த ; இன்றியமையாத . |
பெரியகுடியானவன் | பேருழவன் ; ஊர்ப் பெரியதனக்காரன் . |
பெரியகுணம் | தாராளமனம் ; உலகப்பற்றின்மை . |
பெரியகை | தாராளமான கை ; செல்வன் ; செல்வாக்குள்ள கட்சி . |
பெரியகோயில் | திருவரங்கம் கோயில் ; தஞ்சைக் கோயில் . |
பெரியதகப்பன் | தந்தையின் அண்ணண் ; தாயின் அக்காள் கணவன் . |
பெரியதலை | பெரியவன் . |
பெரியதனக்காரன் | ஊர் மணியக்காரன் ; பெருநிலக்கிழார் . |
பெரியதனம் | மேட்டிமை ; பெருந்தன்மை ; மேற்பார்வை ; பெருமை ; காண்க : பெரியதனக்காரன் . |
பெரிய தாய் | தாய்க்குமுன் பிறந்தாள் ; தந்தையின் அண்ணண் மனைவி . |
பெரியதிருநாள் | ஆண்டுப் பெருவிழா . |
பெரியதிருவடி | கருடாழ்வார் . |
பெரியநடை | நல்லொழுக்கம் . |
பெரியப்பன் | காண்க : பெரியதகப்பன் . |
பெரியபிராட்டி | திருமகள் . |
பெரியபிள்ளை | ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன் ; மூத்த பிள்ளை . |
பெரியபெயர் | பெரும்புகழ் . |
பெரியபெருமாள் | திருவரங்கத்துத் திருமால் ; பேரரசன் . |
பெரியபொருள் | பரப்பிரமம் . |
பெரியம்மாள் | காண்க : பெரிய தாய் ; வீட்டுக்குத் தலைமையானவள் . |
பெரியம்மை | காண்க : பெரியம்மாள் ; ஓர் அம்மை நோய்வகை ; மூதேவி . |
பெரியமனம் | இளகிய நெஞ்சம் ; அருள் . |
பெரியமனிதன் | சிறந்தோன் ; செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் ; உயர்ந்த நிலையிலுள்ளவன் ; ஆண்டு முதிர்ந்தவன் . |
பெரியமூளை | மூளையின் மேற்பாகம் ; அறிவாற்றல் மிக்கவன் . |
பெரியர் | காண்க : பெரியா(யோ)ர் . |
பெரியவர் | உயர்ந்தோர் ; முன்னோர் ; முதியோர் . |
பெரியவராடி | பாலை யாழ்த்திறவகை . |
பெரியவள் | ஆண்டு முதிர்ந்தவள் ; பூப்படைந்தவள் . |
பெரியவன் | தக்க வயது அடைந்தவன் ; மூத்தோன் ; பெரிய நிலையில் உள்ளவன் . |
பெரியவாய் | அலப்புவாயன் ; மரவகை . |
பெரியவுடையநாயனார் | தஞ்சைக்கோயில் மூர்த்தியாகிய பிரகதீசுரர் . |
பெரியவுடையார் | சடாயு . |
பெரியவெண்ணம் | உயர்ந்த சிந்தை ; வீண் பெருமை . |
பெரியாத்தாள் | காண்க : பெரியம்மாள் . |
பெரியாநங்கை | ஒரு செடிவகை . |
பெரியாயி | காண்க : பெரியம்மாள் . |
பெரியார் | மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் . |
பெரியோர் | மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் . |
பெரியோர்பெருமான் | பிரமன் . |
பெரியோன் | உயர்ந்தோன் ; கடவுள் . |
பெருக்கம் | வளர்ச்சி ; மிகுதி ; செல்வம் ; வெள்ளம் ; நிறைவு ; நீடிப்பு . |
பெருக்கல் | துடைப்பத்தால் குப்பை கூட்டுதல் ; எண்களைப் பெருக்குதல் ; விருத்திசெய்தல் . |
பெருக்கல்வாய்பாடு | எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு . |
பெருக்கலங்காரம் | வியப்பணி . |
பெருக்காச்சவட்டு | வெறுப்பு ; கவனமின்மை . |
பெருக்காளர் | சிறப்புடையோர் ; வேளாளர் . |
பெருக்காறு | பெருகியோடும் ஆறு . |
பெருக்கி | சுக்கிலம் ; பெருக்கிக்காட்டுவது . |
பெருக்கு | வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; இரத்தவோட்டத்தின் மிகுதி ; மிகுதி ; பப்பரப்புளி ; ஒரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை ; காண்க : பெருக்குத்தொகை . |
பெருக்கு | (வி) குணி ; பெருகச்செய் . |
பெருக்குத்தொகை | இரண்டு எண்களைப் பெருக்கியதாற் கூடிய தொகை . |
பெருக்குதல் | விரியச்செய்தல் ; நீர் நிரப்புதல் ; மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல் ; குப்பை கூட்டுதல் ; ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் . |
பெருக்குமெண் | மற்றொன்றைப் பெருக்குதற்கு உரிய எண் . |
பெருக்குரல் | பாடுகையில் தோன்றும் வெடித்த குரல் . |
பெருக்குவேளை | உச்சிப்பொழுது ; கடலின் நீர் ஏற்றக்காலம் ; உடலில் இரத்தவோட்டம் மிகுந்த காலம் . |
பெருக்கெடுத்தல் | வெள்ளம் அதிகமாதல் . |
பெருக | நிரம்ப . |
பெருகல் | மிகுதி . |
பெருகியல் | சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று . |
பெருகியன்மருதம் | ஒரு பண்வகை . |
பெருகு | தயிர் ; அணிகலவகை . |
பெருகுசாதி | பண்ணியல் திறவகைகளுள் ஒன்று . |
பெருகுதல் | அளவு மிகுதல் ; நீர் மிகுந்தெழுதல் ; நிறைதல் ; வளர்தல் ; முதிர்தல் ; ஆக்கம் தருதல் ; கேடுறுதல் ; மங்கலநாண் அற்றுவிழுதல் ; விளக்கணைதல் . |
பெருங்கட்டி | பிளவை . |
பெருங்கணக்கு | பெருந்தொகை ; பெரும் படியானது ; அகந்தை . |
பெருங்கணி | தலைமை நிமித்திகன் . |
பெருங்கதை | நீண்ட கதை ; பரவலான செய்தி ; பிள்ளையார் கதை படிப்பதில் இறுதிப்படிப்பு ; ஒரு காப்பியம் . |
பெருங்கரம் | கோவேறுகழுதை . |
பெருங்கலக்குறுத்துதல் | பெரிய குழப்பமுண்டு பண்ணுதல் . |
பெருங்கலம் | ஆயிரம் நரம்புடைய பேரியாழ் . |
பெருங்கலையன் | ஒரு நெல்வகை . |
பெருங்கவி | காண்க : வித்தாரகவி , விரிவாகப் பாடவல்லவன் . |
![]() |
![]() |
![]() |