மகிதம் முதல் - மங்கலம்பதினாறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மகிதம் சிவபிரானது திரிசூலம் .
மகிதலம் பூமி .
மகிந்தகம் எலி ; கீரி .
மகிபன் அரசன் .
மகிபாலன் அரசன் .
மகிமா எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் .
மகிமை பெருமை ; காண்க : மகமை ; சிறப்பு , மதிப்பு .
மகிலை பெண் ; வெறிபிடித்தவள் .
மகிழ் இன்பம் ; குடிவெறி ; மது ; மரவகை .
மகிழ்ச்சி உவகை ; காண்க : மகிழ்ச்சியணி .
மகிழ்ச்சிநிலை உள்ளமிகுதி .
மகிழ்ச்சியணி மகிழ்ந்து சொல்லுகையாகிய அலங்காரவகை .
மகிழ்ச்சிவினை புண்ணியம் , நல்வினை .
மகிழ்த்தாரான் மன்மதன் .
மகிழ்தல் அகங்களித்தல் ; உணர்வழிய உவகை எய்துதல் ; குமிழியிடுதல் ; விரும்புதல் ; உண்ணுதல் .
மகிழ்நன் கணவன் ; மருதநிலத் தலைவன் .
மகிழ்வு இன்பம் .
மகிழம் மகிழமரம் .
மகிழலகு மகிழம்விதை .
மகிளம் பூவிதழ் .
மகீதரம் மலை .
மகீபதி அரசன் .
மகீபன் அரசன் .
மகீருகம் பூமியில் முளைப்பதான தாவரம் .
மகீலதை நாங்கூழ் .
மகுடம் மணிமுடி ; தலைப்பாகைவகை ; தலையணி ; பல பாடல்களில் ஓர் இறுதியாக வரும் முடிவு ; கட்டுரைத் தலைப்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை ; மாதர் காதணி வகை ; மத்தளத்தின் விளிம்பு ; பறைவகை ; ஒளிமங்கல் .
மகுடராகம் ஒரு பண்வகை .
மகுடராமக்கிரியம் ஒரு பண்வகை .
மகுடவர்த்தனர் முடிமன்னர் .
மகுடாதிபதி முடியுடை வேந்தன் .
மகுடி இசைக்கருவிவகை ; பாம்பாட்டியின் ஊது குழல்வகை .
மகுரம் கண்ணாடி ; பளிங்கு ; பூமொட்டு ; தண்ட சக்கரம் .
மகுலம் காண்க : மகிழம் .
மகுளி ஓசை ; எட்பயிர் நோய்வகை .
மகுளிபாய்தல் பெருமழையால் நிலம் இறுகிவிடுதல் ; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல் .
மகூலம் மலர்ந்த பூ .
மகேச்சுரன் சிவபெருமான் .
மகேசன் சிவபெருமான் .
மகேசுரவடிவம் இலிங்க வடிவொழிந்த சிவமூர்த்தங்கள் .
மகேசுவரன் காண்க : மகேச்சுரன் .
மகேசுவரி பார்வதி .
மகேந்திரசாலம் வியப்பைக் காட்டும் வித்தை .
மகேந்திரம் ஒரு மலை .
மகேந்திரன் இந்திரன் .
மகேசுவரியம் பெருஞ்செல்வம் .
மகோததி கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடற்பிரிவு .
மகோதயம் ஒரு புண்ணியகாலம் ; பெருமை ; வீடுபேறு ; மேன்மை .
மகோதரம் பூதம் ; பெருவயிற்றுநோய் .
மகோதை கொடுங்கோளூர் .
மகோற்சவம் பெரிய திருவிழா .
மகோன்மதம் மிகுவெறி .
மகோன்னதம் மிக்க உயரம் ; உயர்ந்த நிலை ; பனை .
மகௌடதம் சுக்கு ; திப்பிலி ; வசம்பு ; நன்மருந்து .
மங்கல் கெடுதல் ; ஒளிமங்குதல் ; இருள்நேரம் .
மங்கல்யம் காண்க : மாங்கலியம் .
மங்கலக்கருவி யாழ் முதலிய இசைக்கருவிகள் ; சவரக்கத்தி .
மங்கலக்கிழமை செவ்வாய்க்கிழமை .
மங்கலகாரியம் நற்செயல் .
மங்கலகீதம் காண்க : மங்கலப்பாட்டு .
மங்கலகௌசிகம் ஒரு பண்வகை .
மங்கலச்சொல் மங்கலமொழி , நன்மையைக் குறிக்கும் மொழி ; வாழ்த்துரை ; செய்யுள்களின் முதலில் வரற்குரிய திரு , பூ , உலகம் முதலிய நன்மொழிகள் .
மங்கலசூத்திரம் தாலிக்கயிறு .
மங்கலத்திருநாள் புண்ணியதினம் , திருவிழாவில் சிறந்த நாள் .
மங்கலத்துகில் வெண்துகில் .
மங்கலதினம் காண்க : மங்கலநாள் .
மங்கலநாண் தாலிக்கயிறு , கழுத்திலணியும் திருமங்கலியச் சரடு .
மங்கலநாள் நன்னாள் .
மங்கலப்பாட்டு நல்ல காலங்களில் பாடும் பாட்டு .
மங்கலப்பிரதை மஞ்சள் .
மங்கலப்பொருத்தம் செய்யுள் முதன்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதன்மொழியிடத்து மங்கலச்சொல் நிற்பது .
மங்கலபத்திரிகை திருமண அழைப்பிதழ் .
மங்கலபாடகர் அரசர் முதலியோரைப் பாடுவோர் .
மங்கலபேரிகை நல்ல காலங்களில் முழக்கும் முரசம் .
மங்கலம் திருமணம் ; ஆக்கம் ; பொலிவு ; நற்செயல் ; நன்மை ; தாலி ; தருமம் ; சிறப்பு ; வாழ்த்து ; காண்க : மங்கலவழக்கு ; எண்வகை மங்கலம் ; சேகரிப்பு ; தகனபலி ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச் சொல் .
மங்கலம்பதினாறு கவரி , நிறைகுடம் , கண்ணாடி , கோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் என்னும் எண்வகை மங்கலத்தோடு வாள் , குடை , ஆலவட்டம் , சங்கம் , தவிசு , திரு , அரசியலாழி , ஓமாலிகை என்னும் எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடு பிடிகள் .