சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மங்கலமகளிர் | சுமங்கலிகள் . |
மங்கலமங்கையர் | சுமங்கலிகள் . |
மங்கலமடந்தை | கணவனுடன் வாழ்பவள் ; ஒரு பெண்தேவதை . |
மங்கலமரபு | காண்க : மங்கலவழக்கு . |
மங்கலமாந்தர் | மங்கலச் செயல்களைச் செய்பவர் . |
மங்கலமுகூர்த்தம் | காண்க : மங்கலவேளை . |
மங்கலமுரசு | விழாக்காலங்களில் முழக்கும் முரசு . |
மங்கலமுழவம் | விழாக்காலங்களில் முழக்கும் முரசு . |
மங்கலமொழி | காண்க : மங்கலச்சொல் . |
மங்கலவண்ணம் | மங்கலக்குறியான வெண்ணிறம் . |
மங்கலவணி | திருமங்கலியம் ; இயற்கையழகு ; மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி . |
மங்கலவழக்கு | தகுதிவழக்கு மூன்றனுள் மங்கல மல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு . |
மங்கலவள்ளை | உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாக்களால் வகுப்புறப் பாடும் நூல் . |
மங்கலவார்த்தை | நல்லுரை ; நற்செய்தி . |
மங்கலவாரம் | செவ்வாய்க்கிழமை ; நல்ல நாள் . |
மங்கலவாழ்த்து | நூலின் முதலில் அல்லது இறுதியில் செய்யப்படும் துதி ; மணமக்களுக்கு வாழ்த்துக் கூறுகை . |
மங்கலவினைஞன் | நாவிதன் ; நற்செயல் செய்யத் தகுதியுள்ளவன் . |
மங்கலவெள்ளை | சந்தனக்குழம்பு ; நூல்வகை . |
மங்கலவேளை | நல்வேளை . |
மங்கலன் | நாவிதன் ; செவ்வாய் . |
மங்கலாதேவி | ஒரு பெண்தேவதை . |
மங்கலி | சுமங்கலி ; நாவிதன் . |
மங்கலியசூத்திரம் | காண்க : மங்கலசூத்திரம் . |
மங்கலியப்பிச்சை | கணவன் உயிரைக்காக்குமாறு மனைவி இரந்து கேட்கை . |
மங்கலியப்பெண்டுகள் | தெய்வமாகக் கொண்டாடப்படும் பெண்டிர் ; சுமங்கலிகளாய் இறந்த மகளிர் . |
மங்கலியப்பொருத்தம் | திருமணப் பொருத்தத்துள் ஒன்று . |
மங்கலியம் | திருமணத்தில் கட்டப்படும் தாலி ; சந்தனம் ; தயிர் ; பொன் ; செவ்வீயம் . |
மங்கலியவதி | சுமங்கலி . |
மங்கலை | சுமங்கலி , கணவனோடு வாழ்பவள் ; திருமகள் ; பார்வதி ; துர்க்கை ; அம்பட்டத்தி . |
மங்களகரம் | நன்மையானது . |
மங்களம் | காண்க : மங்கலம் . |
மங்களம்பாடுதல் | நற்செயல் முடிவில் வாழ்த்துப்பாட்டுப் பாடுதல் ; செயலை முடித்தல் . |
மங்களரேகை | ஒருவனுக்கு உண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி . |
மங்களவாத்தியம் | நற்காலங்களில் இசைக்கும் இசைக்கருவி . |
மங்களவாரம் | காண்க : மங்கலக்கிழமை . |
மங்களாசரணை | வாழ்த்து , வணக்கம் , வருபொருள் என்னும் முப்பகுதியுடைய நூன்முகம் . |
மங்களாசாசனம் | நன்மையை வேண்டுகை ; பெரியோர்கள் வழிபாடு ; ஆழ்வாராதியரால் துதிக்கப்பெறுகை . |
மங்களாரத்தி | கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி ; நல்ல காலங்களில் மஞ்சள் நீர் சுற்றுகை . |
மங்களை | பார்வதி ; மக்களின் பருவநிலைகளுள் ஒன்று ; யோகினிதிசையி னொன்று . |
மங்கினி | மிக்க மந்தபுத்தியுள்ளவர் ; பயன்றறவர் . |
மங்கு | வங்கு ; கேடு ; சாடி . |
மங்குங்காலம் | தீமைக்காலம் . |
மங்குசனி | ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுச் சனி . |
மங்குதல் | ஒளிமழுங்குதல் ; குறைதல் ; நிறங்குன்றுதல் ; பெருமை குறைதல் ; வாட்டமுறுதல் ; கெடுதல் ; சாதல் . |
மங்குரம் | பளிங்கு . |
மங்குல் | வானம் ; மேகம் ; மூடுபனி ; இரவு ; இருட்டு ; திசை . |
மங்குல்வாணி | தெய்வவாக்கு , வானொலி . |
மங்குலம் | மழுக்கம் ; கலக்கம் ; முகவாட்டம் ; பார்வை மந்தம் ; ஐயம் ; நிறக்குறைவு . |
மங்குலி | மேகத்தின் தலைவனாகிய இந்திரன் . |
மங்குளம் | காண்க : மங்குலம் . |
மங்கை | பெண் ; பன்னிரண்டு முதல் பதின்மூன்று வயது வரையுள்ள பெண் ; கற்றாழை ; பாதரசம் ; சில ஊர்ப்பெயர்களின் பின் இணைக்கப்படும் துணைச்சொல் . |
மங்கைபங்கன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
மங்கைபங்காளன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
மங்கைபாகன் | உமையொருபாகன் , சிவபெருமான் . |
மச்சக்கொடி | காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீனக்கொடி . |
மச்சப்பொன் | மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன் . |
மச்சம் | காண்க : மச்சாவதாரம் ; மீன் ; மீனராசி ; பங்குனிமாதம் ; பதினெண் புராணத்துள் ஒன்று ; மாற்றறிய வெட்டும் பொன் ; மச்சநாடு ; சுவடு ; உடம்பில் உண்டாம் புள்ளி . |
மச்சாவதாரம் | திருமாலின் பத்துப்பிறப்புகளுள் முதலாவதான மீன்பிறப்பு . |
மச்சாவி | அண்ணி . |
மச்சாள் | மனைவியின் உடன்பிறந்தாள் ; தாய்மாமன் அல்லது அத்தையின் மகள் . |
மச்சான் | தாய்மாமன் மகன் அல்லது அத்தை மகன் ; மனைவியின் உடன்பிறந்தான் ; உடன் பிறந்தாளின் கணவன் . |
மச்சி | காண்க : மச்சாள் ; கொடிவகை . |
மச்சிகை | மோர் ; ஈ . |
மச்சினச்சி | காண்க : மைத்துனி . |
மச்சினன் | காண்க : மைத்துனன் . |
மச்சினி | காண்க : மைத்துனி . |
மச்சினிச்சி | காண்க : மைத்துனி . |
மச்சு | மட்டமாகச் செங்கல்குத்திப் பாவியமேல்தளம் ; மேல்தளத்தில் பாவும் பலகை ; உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத்தடுப்பு ; மேல்மாடம் ; காண்க : மச்சப்பொன் : குற்றம் ; தகாதது ; கொடிவகை ; ஒர் அசைநிலை . |
மச்சுக்கல் | மேல்தளத்தில் பதிக்கும் செங்கல் வகை . |
மச்சுப்பாவுதல் | மேல்தளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல் . |
மச்சுவீடு | மேல்தளமுள்ள கட்டடம் ; பலகையடைப்புள்ள மேன்மாடி வீடு . |
மச்சுனமை | மைத்துனவுரிமை . |
மச்சுனன் | காண்க : மைத்துனன் . |
மச்சுனி | காண்க : மைத்துனி . |
மச்சை | அம்பு எய்தற்குரிய குறி ; உடம்பிலுண்டாம் புள்ளி ; ஏழு தாதுவில் ஒன்று ; உட்சுரம் ; காண்க : மீனம்பர் . |
![]() |
![]() |
![]() |