சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மாத்தான் | பெரியோன் . |
மாத்திக்கு | வீட்டுநெறி . |
மாத்திரத்தில் | உடனே . |
மாத்திரம் | தனிமை ; மட்டும் ; அளவு ; தும்பி . |
மாத்திரை | கணப்பொழுது ; கண்ணிமைத்தல் அல்லது கைந்நொடித்தல் அளவான காலம் ; செய்யுளில் வரும் எழுத்தொலியின் அளவு ; குற்றெழுத்து ; குருவிற்பாதி ; காலவிரைவு ; மிகச் சுருக்கமான இடம் ; குளிகை ; துறவியின் தண்டகமண்டலங்கள் ; பேறு . |
மாத்திரைக்கோல் | சித்தர் முதலியோர் கையில் கொள்ளும் மந்திரக்கோல் ; மந்திரவாதியின் கைக்கோல் ; அளவுகோல் . |
மாத்து | பெருமை ; செருக்கு ; சதுரங்க ஆட்டத்தில் அரசனை அசையவொண்ணாது பேதாக்காய் தடுத்துநிற்கை . |
மாத்துவம் | பெருமை ; காண்க : துவைதம் . |
மாதங்கம் | யானை ; அரசமரம் ; இளமை ; கடல் ; உத்தி ; தலையணிவகை . |
மாதங்கன் | கீழ்மகன் ; வேடன் ; அரசமாதுக்கும் வேடனுக்கும் பிறந்தோன் ; புலையன் . |
மாதங்கி | காளி ; பார்வதி ; யாழ்த்தெய்வம் ; ஆடல்பாடலில் வல்லவள் . |
மாதண்டம் | இராசவீதி . |
மாதத்தீட்டு | காண்க : மாதவிடாய் . |
மாததூரம் | காண்க : மாதவிடாய் . |
மாதப்பிறப்பு | சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் போகும் காலம் ; மாதத்தின் முதல் நாள் . |
மாதம் | ஏறக்குறைய முப்பது நாட்கொண்ட காலம் . |
மாதர் | பெண் ; அழகு ; பொன் ; காதல் ; ஓர் இடைச்சொல் . |
மாதராள் | பெண் . |
மாதரி | காளி ; கண்ணகியைப் போற்றிய ஓர் இடைச்சி . |
மாதலம் | கீழேழுலகத்துள் ஒன்று . |
மாதலி | இந்திரனின் சாரதி . |
மாதவம் | பெருந்தவம் ; இளவேனில் ; வைகாசி மாதம் ; இனிமை ; மது . |
மாதவர் | சிறந்த தவத்தினையுடையவர் , முனிவர் . |
மாதவர்பள்ளி | முனிவர் ஆசிரமம் . |
மாதவழிச்செலவு | மாதச்செலவு . |
மாதவறுதி | மாதமுடிவு . |
மாதவன் | திருமால் ; வசந்தன் . |
மாதவி | துளசி ; துர்க்கை ; கிருட்டினனின் தங்கையான சுபத்திரை ; கூட்டிக்கொடுப்பவள் ; காண்க : கள்ளி ; சீனி ; கோவலனின் ஆசைநாயகி ; கண்ணன் மனைவி ; குருக்கத்திக்கொடி ; பனைவெல்லம் . |
மாதவிகொழுநன் | அருச்சுனன் . |
மாதவிடாய் | மகளிரின் மாதத்தீட்டு . |
மாதவிப்பந்தல் | குருக்கத்திக் கொடிகளாலான பந்தல் . |
மாதளை | காண்க : மாதுளை . |
மாதா | தாய் ; பார்வதி ; அறிபவன் ; கலைமகள் . |
மாதாந்தம் | மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை ; காண்க : மாசாந்தம் . |
மாதாந்தரம் | மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை ; காண்க : மாசாந்தம் . |
மாதாமகன் | தாயைப் பெற்ற பாட்டன் . |
மாதாமகி | தாயைப் பெற்ற பாட்டி . |
மாதானுபங்கி | திருவள்ளுவர் . |
மாதி | வட்டமாயோடல் ; கோளின் சுற்று ; மாமரம் . |
மாதிகம் | குதிரைபோகும் வழி . |
மாதிமை | தகுதி ; காதல் . |
மாதிரம் | வானம் ; திசை ; மலை ; யானை ; நிலம் ; மண்டிலம் . |
மாதிரி | காண்க : அதிவிடை ; தினுசு , முறை ; தன்மை . |
மாதிரிகை | தினுசு ; முறை ; தன்மை ; மூலப்படி . |
மாதிரு | மாதா ; வானம் ; திருமகள் ; பசு ; பூமி ; பார்ப்பனி ; இரேவதி . |
மாதிருகை | நெடுங்கணக்கு ; கைத்தாய் ; தாய் ; தேவி . |
மாது | பெண் ; அழகு ; காதல் ; பெருமை ; குற்றம் ; ஓர் அசைச்சொல் . |
மாதுகரம் | வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல் . |
மாதுபங்கன் | காண்க : மாதொருபாகன் . |
மாதுமை | பெண்தன்மை ; அறிவின்மை . |
மாதுரம் | மல்லிகைவகை . |
மாதுரி | சாராயம் . |
மாதுரியம் | இனிமை . |
மாதுருகோத்திரம் | தாய்வழிச்சுற்றம் . |
மாதுலங்கம் | காண்க : கொம்மட்டிமாதுளை ; மரவகை . |
மாதுலன் | காண்க : மாமன் . |
மாதுலி | மாமன் மனைவி ; காண்க : மாதலி . |
மாதுலுங்கம் | காண்க : மாதுலங்கம் . |
மாதுவம் | கள் ; பேரீந்து . |
மாதுவான் | பெண்குதிரை ; நகச்சுற்று . |
மாதுளங்கம் | காண்க : மாதுலங்கம் . |
மாதுளம் | ஒரு மரவகை ; பேரெலுமிச்சை . |
மாதுளை | ஒரு மரவகை ; பேரெலுமிச்சை . |
மாதூகரம் | காண்க : மாதுகரம் . |
மாதேவன் | சிவபிரான் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் . |
மாதேவி | பார்வதி ; பட்டத்தரசி ; செங்கழுநீர்ப்பூ . |
மாதொருபாகன் | சிவன் . |
மாதோ | ஓர் அசைச்சொல் . |
மாதோபவாசம் | ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை . |
மாதோயம் | கடல் ; பெருநீர் . |
மாந்தக்கொதி | குழந்தைநோய்வகை . |
மாந்தசன்னி | மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி . |
மாந்தம் | குழந்தைநோய்வகை ; ஒரு புல்வகை ; மந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் கணைநோய் ; செரியாமை . |
மாந்தர் | மனிதர் ; ஆடவர் ; ஊர்காவலர் . |
மாந்தளிர் | துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர் . |
![]() |
![]() |
![]() |