சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மாந்தளிர்க்கல் | ஒரு மாணிக்கவகை . |
மாந்தளிர்ச்சிலை | காவிக்கல் . |
மாந்தளிர்நாணான் | மன்மதன் . |
மாந்தன் | ஆண்மகன் ; வாழைவகை . |
மாந்தி | மாமரம் ; கலியாணச்சடங்கு ; காண்க : குளிகன் . |
மாந்திரிகன் | மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்துபவன் . |
மாந்திரீகம் | மந்திரபலத்தால் சிறப்பாற்றலைச் செலுத்தும் வித்தை . |
மாந்துதல் | குடித்தல் ; உண்ணுதல் ; வருந்துதல் ; அவிந்தடங்கல் ; இறத்தல் ; நுகர்தல் ; ஊக்கமழிதல் . |
மாந்தை | ஒரு நோய்வகை ; ஒரு நகரம் . |
மாநாகம் | ஒரு பாம்புவகை . |
மாநிருத்தாதனம் | ஒரு காலைத் தூக்கி நிற்கும் யோகநிலை . |
மாநிலம் | ஒரு நாட்டின் பெரும்பிரிவு ; பூமி . |
மாநிறம் | மாந்தளிர்போன்ற நிறம் . |
மாப்பிள்ளை | மணவாளப்பிள்ளை ; மகளின் கணவன் ; மைத்துனன் ; மாமன்மகன் ; மாமி மகன் ; தங்கை கணவன் ; ஒரு பட்டப்பெயர் ; ஒரு முகம்மதிய வகுப்பார் . |
மாப்பு | மன்னிப்பு ; மிகுதி ; மீன்றிரள் . |
மாப்புவிடுதல் | மன்னித்தல் . |
மாபலன் | காற்று . |
மாபனம் | அளவு ; தராசு . |
மாபாடியம் | பேருரை ; பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை . |
மாபாதகம் | காண்க : மகாபாதகம் . |
மாபாவி | பெரும்பாவி . |
மாபுலி | சிங்கம் . |
மாபுறயாகம் | வெளிப்பூசை . |
மாபெலை | பார்வதி . |
மாம்பழம் | மாங்கனி ; புடைவை உடுத்தும்போது செருகும் முடிப்பு . |
மாம்பால் | மாங்காயின் காம்பிலுண்டாம் பால் ; ஒரு கூழ்வகை . |
மாம்போழ் | மாவடுவின் பிளவு . |
மாமகம் | காசாயவகை ; காண்க : மகாமகம் . |
மாமகன் | அம்மான் ; இவறலன் ; திருமகளின் மகனான மன்மதன் . |
மாமடி | கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் . |
மாமடிகள் | கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் . |
மாமணி | மாணிக்கம் . |
மாமரம் | ஒரு மரவகை . |
மாமல்லை | மாமல்லபுரம் என்னும் ஊர் . |
மாமலர் | காண்க : சரக்கொன்றை . |
மாமன் | தாயுடன் பிறந்தோன் ; கணவன் அல்லது மனைவியின் தந்தை ; மாமனார் ; அத்தை கணவன் ; சிற்சில வகுப்புப் பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர் . |
மாமனார் | கணவன் அல்லது மனைவியின் தந்தை . |
மாமா | காண்க : மாமன் . |
மாமாங்கம் | கும்பகோணத்தில் பன்னீராண்டுகட்கு ஒரு முறை மாசிமகத்தன்று நிகழும் ஒரு திருமுழுக்கு விழா . |
மாமாத்திரன் | மருத்துவன் . |
மாமாத்து | மிகப்பெரியது ; பெருஞ்செருக்கு ; மாய்மாலம் . |
மாமாயை | பார்வதி ; சுத்தமாயை . |
மாமாலம் | பெருவஞ்சனை ; பாசாங்கு . |
மாமான் | காண்க : மாமன் . |
மாமி | அம்மான் மனைவி ; மனைவியின் அல்லது கணவனின் தாய் ; அத்தை . |
மாமிசதாரி | புலாலுண்போன் . |
மாமிசபட்சணி | புலாலுண்ணி . |
மாமிசபேதி | தசையைக் கரைவிக்கும் ஒரு பூண்டுவகை . |
மாமிசம் | தசை ; இறைச்சி . |
மாமியார் | காண்க : மாமி . |
மாமுகத்தன் | விநாயகர் . |
மாமுகவன் | விநாயகர் . |
மாமுனி | பெருந்துறவி ; அருகன் ; வசிட்டன் ; நாயுருவிச்செடி . |
மாமூல் | பரம்பரை வழக்கம் . |
மாமேரு | மேருமலை . |
மாமை | நிறம் ; அழகு ; கருமை ; மேனி ; துன்பம் . |
மாமோகம் | ஐம்புல நுகர்ச்சியிற் பற்று . |
மாய்ச்சல் | காண்க : மாய்ப்பு . |
மாய்ச்சி | பூட்டுவிலங்கு . |
மாய்த்தல் | மறைத்தல் ; கொல்லுதல் ; அழித்தல் ; வருத்துதல் ; தீட்டுதல் . |
மாய்தல் | மறைதல் ; அழிதல் ; சாதல் ; ஒளி மழுங்குதல் ; கவலை மிகுதியால் வருந்துதல ; அறப்பாடுபடுதல் ; மறத்தல் . |
மாய்ப்பு | மாய்த்தல் ; சாவு ; மறைவு . |
மாய்மாலம் | பாசாங்கு ; மோசடி . |
மாய்வு | சாவு ; மறைவு . |
மாயக்கள்ளி | மயக்கி ஏமாற்றுபவள் . |
மாயக்காரன் | வஞ்சகன் ; மாயவித்தைக்காரன் . |
மாயக்காரி | காண்க : மாயக்கள்ளி . |
மாயக்குரம்பை | காண்க : மாயாதேகம் . |
மாயக்கூத்தன் | திருமால் . |
மாயசாலம் | வஞ்சனை . |
மாயப்புணர்ச்சி | தலைவன் தலைவியரது களவுக்கூட்டம் . |
மாயப்பெண் | மாறுவேடம் பூண்ட பெண் ; பெண் வேடம் பூண்ட ஆண் . |
மாயப்பொடி | மாயத்தன்மை செய்யும் பொடி . |
மாயப்போர் | அற்புதமான போர் ; வஞ்சகயுத்தம் . |
மாயம் | மாயை ; வஞ்சனை ; பித்தளை ; பாசாங்கு ; அறியாமை ; கனவு ; பொய் ; நிலையின்மை ; வியப்பு ; அழகு ; தீமை ; கயமைத்தன்மை ; கறுப்பு ; உயரம் ; நீளம் ; தொகை . |
![]() |
![]() |
![]() |