சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மாயமந்திரம் | மாயம்பண்ணும் மந்திரம் . |
மாயரூபம் | மெய்போலத் தோற்றும் பொய்யுருவம் . |
மாயவண்ணன் | திருமால் . |
மாயவள் | கரியநிறமுடையவள் ; துர்க்கை ; தெய்வப்பெண் ; காண்க : இடாகினி . |
மாயவன் | திருமால் . |
மாயவிஞ்சை | இந்திரசால வித்தை . |
மாயவித்தை | இந்திரசால வித்தை . |
மாயவேடம் | பொய்வேடம் . |
மாயன் | கரியவன் ; திருமால் ; வஞ்சகன் . |
மாயாகாரியம் | மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன ; தனுகரண புவன போகங்களாகிய மாயையின் விளைவுகள் . |
மாயாசத்தி | மாயையாகிய சத்தி . |
மாயாசூனியம் | மாயையால் மறைவின்மை . |
மாயாதேகம் | நிலையற்ற வுடல் . |
மாயாதேவி | மாயையாகிய தேவி ; கௌதமபுத்தரின் தாய் . |
மாயாபஞ்சகம் | தமம் , மாயை , மோகம் , அவித்தை , அநிருதம் என்னும் ஐந்து விதமாயுள்ள மாயை . |
மாயாபாசம் | மாயையாகிய பந்தம் . |
மாயாபுரி | உடம்பு ; பித்தளை ; அரித்துவாரம் என்னும் புண்ணியத்தலம் . |
மாயாவி | மாயை செய்வோன் ; அமானுடசத்தியால் வேண்டும் உருக்கொள்வோன் ; வஞ்சகன் . |
மாயாவிநோதம் | இந்திரசால வித்தை . |
மாயாவிமோசனம் | மாயையினின்று நீங்குகை . |
மாயி | துர்க்கை ; ஆண்பெண்களைக் களவிற்புணர்ப்பிக்கும் ஆண்மகன் ; மாயாவாதி . |
மாயிடம் | எருமை . |
மாயிரம் | புறமாயுள்ளது . |
மாயுநாடி | காண்க : பித்தநாடி . |
மாயூரம் | மயில் ; மயிலாடுதுறை என்னும் சிவதலம் . |
மாயேயம் | ஐந்து மலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான கலை , வித்தை , இராகம் , புருடன் , மாயை , காலம் , நியதி முதலிய ஏழு தத்துவங்கள் . |
மாயை | மூலப்பிரகிருதி ; விந்து , மோகினி ; மாயேயம் என்னும் மூவகைப்பட்ட மலம் ; மாயா பஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை ; பொய்த் தோற்றம் ; மாயவித்தை ; வஞ்சகம் ; அமானுடசத்தி ; காளி ; பார்வதி ; காண்க : அசுத்தமாயை ; மாயாதேவி ; மாயாபுரி ; திரோதான சத்தி ; ஒரு நரகவகை . |
மாயையுற்றாள் | காளி . |
மாயோள் | கருநிறமுடையவள் ; மாமை நிறமுடையவள் ; பெண் ; வஞ்சகி . |
மாயோன் | கருநிறமுடையோன் ; திருமால் . |
மாயோன்பூடு | காண்க : மால்தொடை . |
மாயோன்மருகன் | திருமாலின் மருகனான முருகக்கடவுள் . |
மாயோனாடல் | அல்லியம் , மற்கூத்து , குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் . |
மாயோனாள் | திருவோணநாள் . |
மார் | நெஞ்சு ; முலை ; மார்பு ; நெஞ்சு ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை ; ஓர் அசை ; பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று ; ஒரு வியங்கோள் விகுதி ; பன்மைவிகுதி . |
மார்க்கட்டி | மார்பில்வரும் புண் . |
மார்க்கட்டு | மார்பின் உறுதியமைப்பு ; இரவிக்கை ; மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக்கட்டு ; சந்தை . |
மார்க்கடம் | காண்க : மர்க்கடம் ; குரங்குக்கூட்டம் . |
மார்க்கண்டம் | மார்பெலும்பு . |
மார்க்கணம் | அம்பு ; இரப்பு ; தேடுகை ; நெஞ்சுப்பகுதி . |
மார்க்கம் | நெறி , வழி ; நெடுந்தெரு ; ஒழுங்கு ; முறை ; ஒழுக்கம் ; சமயம் ; மூலம் ; மரபுவழி ; மறுதலை ; ஆராய்ச்சி ; மார்கழிமாதம் ; கத்தூரி ; அகப்பொருட்டுறை ; கூத்துவகை ; தாளப்பிரமாணத்துள் ஒன்று ; குதிரைநடை ; காண்க : மார்க்கவம் ; உலகம் . |
மார்க்கவசம் | மார்பிலணியும் காப்புச்சட்டை . |
மார்க்கவம் | கையாந்தகரைப்பூண்டு . |
மார்க்கிகன் | வழிச்செல்வோன் ; வேடன் . |
மார்க்சியம் | காரல்மார்கஸ் என்பவரின் கொள்கை . |
மார்கழி | சௌரமான மாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாம் மாதம் . |
மார்கழிநீராடுதல் | மார்கழி மாதத்தில் இளம்பெண்கள் நாடோறும் அதிகாலையில் குளத்திற்குச் சென்று நீராடுகை . |
மார்ச்சரியம் | பொறாமை . |
மார்ச்சளி | காண்க : மார்புச்சளி . |
மார்ச்சனம் | துடைத்தல் ; தூய்மைசெய்தல் ; கடவுள் திருமுன் இடக்கையினின்று ஒழுகவிடும் நீரை மந்திரபூர்வமாய்த் தலையில் தெளிக்கை . |
மார்ச்சனி | துடைப்பம் ; சீமையால் . |
மார்ச்சனை | இனிது ஒலிக்க மேளத்திடும் கரிய மட்சாந்து ; முழவின் வார் . |
மார்ச்சாலம் | பூனை ; காண்க : மரநாய் . |
மார்ச்சிலந்தி | முலைப்பக்கத்துண்டாகும் புண் . |
மார்த்தவம் | மென்மைத்தன்மை . |
மார்த்தாண்டன் | சூரியன் . |
மார்தட்டுதல் | போட்டிபோடுதல் ; குறித்த ஒரு துறையில் தான் மேன்மையானவன் என்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல் ; தற்பெருமையடைதல் . |
மார்பகம் | நெஞ்சு ; முலை . |
மார்பம் | நெஞ்சு ; முலை . |
மார்பாக | மூலமாய் . |
மார்பாணி | ஒரு மார்பின் புண்வகை ; தலைமையாணி ; தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி . |
மார்பு | நெஞ்சு ; முலை ; வடிம்பு ; தடாகம் ; அகலம் ; கருப்பூரவகை ; நான்குமுழ அளவுள்ள நீட்டலளவை . |
மார்புக்குழி | மார்பெலும்பின் கீழுள்ள குழி ; இதயம் , நுரையீரல் முதலிய உறுப்புகளடங்கிய நெஞ்சின் அறை . |
மார்புச்சளி | நெஞ்சில் சளிபிடிக்கும் நோய்வகை . |
மார்புநோவு | மார்பில் உண்டாகும் வலிவகை ; மார்த்தசையில் உண்டாகும் நோவுவகை . |
மார்பெலும்பு | மார்பிலுள்ள எலும்பு . |
மார்வம் | நெஞ்சு . |
மார்வலி | காண்க : மார்புநோவு . |
மாரகம் | சாவு ; இறப்பைத்தருவது ; கொடுமையான தொற்றுநோய் . |
மாரகன் | சாவுக்குக் காரணமான கோள் ; சாவை உண்டாக்குவோன் . |
மாரகாகளம் | மன்மத வாத்தியமான குயில் . |
மாரசயன் | மாரனை வென்றவனான அருகன் . |
மாரடித்தல் | இன்னற்படுதல் ; இழவில் அழும்போது மார்பில் மகளிர் அடித்துக்கொள்ளுகை . |
மாரடைப்பு | நெஞ்சடைப்பு , மூர்ச்சை ; சூதகநோய் ; மார்பில் உண்டாகும் வலிவகை . |
மாரணம் | சாவு ; அழித்தல் ; எண்வகை மாயவித்தையுள் ஒருவனை மந்திரத்தால் இறக்கச் செய்யும் வித்தை . |
![]() |
![]() |
![]() |